சென்னை: வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜாமீன் கோரி அவரது கணவர், மாமனார், மாமியார் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த்து. இதனையடுத்து ,மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி, எம்.நிர்மல்…
Author: admin
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்காது; அவை ஈர்க்கக்கூடிய சுகாதார நன்மைகளையும் வழங்குகின்றன. ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் மற்றும் இயற்கை பயோஆக்டிவ்ஸ் ஆகியவற்றால் நிரம்பிய இந்த சமையலறை ஸ்டேபிள்ஸ் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானம் முதல் மூளை செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வரை அனைத்தையும் ஆதரிக்க முடியும். பல பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், நவீன அறிவியல் இப்போது அவற்றின் சக்திவாய்ந்த குணப்படுத்தும் திறனை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ஓட்ஸ் மீது இலவங்கப்பட்டை தெளித்தாலும் அல்லது மஞ்சள் கறி மீது கிளறினாலும், இந்த பொருட்களின் சிறிய அளவு நீண்ட தூரம் செல்லக்கூடும். உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 14 ஆரோக்கியமான மசாலா மற்றும் மூலிகைகள் இங்கே பாருங்கள்.நன்மைகளைக் கொண்ட மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்: நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான 14கருப்பு மிளகுத்தூள்கருப்பு மிளகு பைபரின், அதன் கூர்மையான சுவைக்கு காரணமான…
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர். “மாநிலங்களவையின்…
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023, செப்டம்பரில் அதை செயல்படுத்தியது. அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றியது திமுக. இதனால், தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் வரவிருப்பதால் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது திமுக அரசு. உண்மையில் திமுக மனம் திருந்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்பினால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட 50 மாத நிலுவைத் தொகையான ரூ.50 ஆயிரத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மவுண்டன் வியூ: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இது ப்ளூம்பெர்க் பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்களும் பலன் அடைந்துள்ளனர். ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கணிசமாக அதிகரித்தது இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிறுவனர் அல்லாத சிஇஓ பிரிவில் 10 இலக்க சொத்து மதிப்பை கொண்டுள்ளவர்களின் பட்டியலில் ஒருவராக சுந்தர் பிச்சை இணைந்துள்ளார். தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ.8,000+ கோடி. தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. 53 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும்,…
நகர்த்தவும், தொழில் அரசியல்வாதிகள் நகரத்தில் ஒரு புதிய மேயர் இருக்கிறார், மேலும் அவர் ஒரு கோல்டன் கோட், ஒரு வேகமான வால் மற்றும் ஒப்புதல் மதிப்பீடுகளை உலுக்கியுள்ளார், பெரும்பாலான மனிதர்கள் மட்டுமே கனவு காண முடியும். கலிபோர்னியாவின் ஐடில்வில்ட்டின் க orary ரவ மேயராக பணியாற்றும் பிரியமான கோல்டன் ரெட்ரீவர் மேயர் மேக்ஸ் III ஐ சந்திக்கவும்-டவுன் ஹால் நாடகத்தை விட வால் வேகங்களில் அதிகம் இருக்கும் ஒரு அழகான, பைன்-வாசனை மலை நகரம்.ஆம், இது ஒரு அரசியல் நையாண்டி அல்ல. இது உண்மையான வாழ்க்கை, அது அபிமானமானது.மேக்ஸ் III, அல்லது அவரது சட்டப்பூர்வ பெயர் மாக்சிமஸ் மைட்டி-டாக் முல்லர் III, அவரது முன்னோடி-சமமான கவர்ந்திழுக்கும் மேயர் மேக்ஸ் II-2022 இல் காலமான பிறகு மேயர் கடமைகளை எடுத்துக் கொண்டார். கோட்பாட்டில் சடங்கு அல்ல; இது மிகச் சிறந்த வழியில் சடங்கு. ஐடில்வில்டின் வாழ்க்கை, குரைக்கும் சின்னம், நல்லெண்ண தூதர் மற்றும்…
மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம், ஜைட் கிராமத்தில் உள்ள மருந்து உற்பத்தி பிரிவில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.88.92 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கேட்டமைன் உற்பத்தி தொடர்பாக மச்சிந்திர போஸ்லே, சுஷாந்த் பாட்டீல், சுபம் சுதார், ரோகன் கவாஸ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போதப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்கிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சேரன் இயக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை ஜி.கே.தமிழ்குமரன் தயாரிக்க சேரன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்த பயோபிக்கில் ராமதாஸாக நடிகர் ஆரி ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு. இன்று ராமதாஸின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தரப்பினரும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ‘அய்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. பாமக கட்சியின் நிறுவனம் ராமதாஸ். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைவராக இருக்கிறார். சமீப காலமாக அப்பா – மகன் இருவருக்கும் இடையே கடும் உரசல் ஏற்பட்டு இருக்கிறது. அப்பா ஆதரவாளர்களை மகன் நீக்குவதும், மகன்…
சென்னை: பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கிய அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டுகள், அருமை நண்பர் கமல்ஹாசன் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் முழு விவரம் வருமாறு: நாடாளுமன்ற வரலாற்றில் மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர். நேற்று (ஜூலை 24) மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் அண்ணன் வைகோ, கலைஞரையும், கலைஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனையும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், எனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தேன். திராவிட இயக்கத்தின் தூணாக நின்று,…
சென்னை: இந்தியன் வங்கியின் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பின்னர், வங்கி மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 2025-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலாவது காலாண்டில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.2,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ல் முதலாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது. வங்கியின் செயல்பாட்டு லாபம் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ரூ.4.502 கோடியில் இருந்து ரூ.4,770 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, செயல்பாட்டு லாபம் 5.97 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.6,359 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.93 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சொத்துகள் மீதான லாபமீட்டல் நிலை…
