சில்லறை திருட்டுகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்து வெளியே வரும் தயா (ஃபஹத் ஃபாசில்), ஒரு வீட்டுக்குள் திருட நுழைகிறான். அங்கே அடைபட்டுக் கிடக்கும் வேலாயுதத்தை (வடிவேலு) காப்பாற்றி, அவரைத் திருவண்ணாமலைக்குத் தன்னுடைய பைக்கில் அழைத்துச் செல்கிறான். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதை வழியில் அறிந்துகொள்ளும் தயா, அதை அவரிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். ஆனால், வேலாயுதம் மறதி நோயால் அவதிப்படுவதால், அவருடைய ‘ஏடிஎம் பின்’ எண்ணை அவரது நினைவிலிருந்து மீட்பது சவாலாக இருக்கிறது. அதில் தயா வெற்றிபெற்றானா? உண்மையிலேயே வேலாயுதத்துக்கு மறதி நோய் இருந்ததா, இவர்களின் நெடுவழிப் பயணம் சென்றடைந்த இலக்கு என்ன என்பது கதை. ஒரு திருடனின் அதிகபட்சத் தேவைகள், ஏமாற்றிவிட முடியும் என்ற நிலையிலிருக்கும் ஒருவருக்கு உதவுவதுபோல் நடிப்பது, ஒரு கட்டத்தில் நடிப்பைத் தாண்டி உண்மையான அன்பு ஊற்றெடுப்பது என தயா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் யதார்த்தம். அதை இயல்பாக நடித்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். வேலாயுதமாக வரும்வடிவேலுவின் கதாபாத்திரத்துடன்,…
Author: admin
மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகவில் பெய்து வரும் மழையில் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்றிரவு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாக இருந்த நிலையில் மதியம் 12 மணிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து…
மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கிறார், ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவருக்கு அரசியுடன் (நித்யா மேனன்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் மனதளவில் திருமணக் கனவில் இருக்கிறார்கள். ஆனால், இரு குடும்பத்தினராலும் அதற்குச் சிக்கல் வருகிறது. அதையும் மீறி அரசியைத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார், ஆகாச வீரன். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார்கள், மச்சான், நாத்தனாரால் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. அது இருவருக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது. இறுதியில் கணவன் – மனைவி ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது கதை. படித்த பெண்ணுக்கும் படிக்காத பரோட்டாமாஸ்டருக்குமான குடும்ப வாழ்க்கையை, சுற்றியிருக்கும் சுற்றங்கள் எப்படி கொத்து பரோட்டோ போடுகிறார்கள் என்பதை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ் . அரசியின் வீடு, ஆகாச வீரனின் ஓட்டல், குலதெய்வ கோயில் என மூன்று இடங்களைச் சுற்றி நகரும் திரைக்கதையை முடிந்தவரை சுவாரஸியமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் கள். கணவன் – மனைவி என்னதான் அன்யோன்யமாக இருந்தாலும்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பும் முறைகேடு தொடர்பாக, பக்தர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தி விரைவாக தரிசனம் செய்ய வைப்பதற்காக பக்தர்களிடம் அதிக பணம் வசூலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமைச்சர், எம்எல்ஏ, கோயில் தக்கார் ஆகியோரது உதவியாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அந்த குறுஞ்செய்தியைக் கோயிலில் காட்டி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தரிசனத்துக்கு அனுமதிக்கும் விதிமீறல் தொடர்பாக, பக்தர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த…
Last Updated : 27 Jul, 2025 09:47 AM Published : 27 Jul 2025 09:47 AM Last Updated : 27 Jul 2025 09:47 AM கேன்ஸ் பட விழாவில், பிரதமர் மோடியின் முகம் பதித்த நெக்லஸ் அணிந்து பரபரப்பானவர் ருச்சி குஜ்ஜார். இந்தி நடிகையும் மாடலுமான இவரை, படத் தயாரிப்பாளர் கரண் சிங் சவுகான் என்பவர் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார். சின்னத்திரை தொடர் ஒன்றை தயாரிக்கஇருப்பதாகவும் சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அதில் இணை தயாரிப்பாளராகச் சேரும்படி ருச்சி குஜ்ஜாரை கேட்டுக் கொண்டார். அதை நம்பி பல்வேறு கால கட்டங்களில் ரூ.24 லட்சத்தை வங்கி மூலம் அவருக்கு அனுப்பினார் ருச்சி. ஆனால் அதை அவர் தயாரிக்கும் ‘சோ லாங் வேலி’ என்ற படத்துக்குப் பயன் படுத்திக்கொண்டார். இதனால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு ருச்சி கேட்டபோது பணத்தைக் கொடுக்காமல் மிரட்டினாராம். இதையடுத்து…
காமராஜர் குறித்து திமுக எம்பி-யான திருச்சி சிவாவால் எழுந்த சர்ச்சை அலை அடித்து ஓய்ந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் உத்திகளை வகுக்கும் வார் ரூமின் தளகர்த்தரான சசிகாந்த் செந்தில் எம்பி-யிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறதே..? இது உண்மையில்லை. ஏனெனில், சமீப காலமாக முக்கியத்துவம் பெற்றுவிட்ட பூத் கமிட்டிகளால் கட்சியின் முதுகெலும்பான கிராம காங்கிரஸ் கமிட்டிகளில் ஒரு சரிவு ஏற்பட்டது. ஆகவே கிராமக் கமிட்டிகள் இந்தியா முழுமைக்கும் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன. இவையன்றி மக்கள் பிரச்சினைகளையும் காங்கிரஸ் கையிலெடுத்து போராடிக் கொண்டுதான் உள்ளது. தேர்தல் சமயத்தில் மட்டும் தான் காங்கிரஸ் என்று ஒன்று இருப்பதே தெரிகிறது. இந்த நிலை மாறவே மாறாதா? தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் செய்வது காங்கிரஸுக்கு பொருந்தாது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் ஒரு கட்சி…
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 2025- 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன. வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயர் இதை வெளியிட்டார். அதன் விவரம்: 2025- 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 9.86 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.98,923 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.53,803 கோடியாக உயர்ந்துள்ளது. கடன்களின் மொத்த தொகை 10.44 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.45,120 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,328 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.8,244 கோடியாக இருந்தது. வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உள்ளது.…
புதுடெல்லி: ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) முன்வந்துள்ளது. ‘நல்சா வீர்பரிவார் சகாயதா யோஜனா 2025’ என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை நல்சா செயல் தலைவர் நீதிபதி சூர்ய காந்த் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்கும் வழிமுறைகளை நீதித்துறை ஆராய்ந்தது. இது குறித்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், ‘‘ நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களால் தங்களின் சொந்த சட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாது. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் வீரரால், விடுமுறை எடுத்துக் கொண்டு நாட்டின் தென் பகுதியில் உள்ள கேரளா அல்லது தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராக…
யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக் ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன்ஷுட்டிங் மும்பை கோரேகானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அங்கு பயங்கரமான ஆக் ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் யாஷ், தாரா சுதாரியா, அக் ஷய் ஓபராய், ஹூமா குரேஷி பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக ஆக் ஷன் காட்சிகளைப் படமாக்கும்போது அதிக விபத்துகள் ஏற்படுவதால் படப்பிடிப்புக்கு முன் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தற்காப்புக் கலையான கிரவ் மகா, பிலிப்பைன்ஸ் கலையான பிலிப்பினோ காளி உள்ளிட்ட ஆக்ஷன் வகைகளை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்களான ஜேஜே…
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையத்தை திறந்து வைத்து பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, திமுக, பாஜகவினர் தங்களது தலைவர்களை வாழ்த்தி போட்டி போட்டு தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததுடன் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலைய முனைய திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வந்தார். விழா பந்தலில் திமுக, பாஜக கட்சி தொண்டர்கள் அமருவதற்கு ஏதுவாக தலா 6 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணி முதல் கட்சியினர், பொதுமக்கள் விழா பந்தலுக்கு வந்தனர். அப்போது முதலே திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தியும் கோஷமிட்டவாறு இருந்தனர். பிரதமர் 7.50 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். 8.15 மணிக்கு…
