‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் ‘தலைவன் தலைவி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்கு வசூல் 2-வது நாளில் கிடைத்திருக்கிறது. மேலும், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த வரவேற்பால் பாண்டிராஜ் பெரும் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக பாண்டிராஜ் கூறும்போது, “3 ஆண்டுகளுக்குப் பிறகு எனது படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும். ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள். ’தலைவன் தலைவி’ படத்தை அவர்களுடைய கதையாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களே இப்படத்தை பாருங்கள் என்று விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார்கள். ’கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்குப் பின் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக பாராட்டும் போது சந்தோஷமாக இருக்கிறது. 2 மணி நேரம் ஜாலியாக சிரிக்கவும், 20 நிமிட எமோஷனாலாகவும் இருக்கும்”…
Author: admin
தமிழகத்தில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்ததில் பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனால், இதுவரை நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த ஸ்டாலின் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சுதந்திரதுக்கு பிறகு தமிழகத்தில் 11 பேர் முதல்வர் பதவி வகித்துள்ளனர். இதில், 19 ஆண்டுகள் ( 1969, 1971, 1989, 1996, 2006 என 5 முறை ) முதல்வராக இருந்த கருணாநிதி, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்வரானார். இதில் 2001, 2011 ஆகிய 2 முறை அவரது பதவி காலத்தில் பதவியை இழந்து மீண்டும் முதல்வரானார். இதனால், இவர் 14 ஆண்டுகள் 4 மாதங்கள் முதல்வர் பதவியை வகித்து 2-வது இடத்தில் உள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1977, 1980,…
திருப்பத்தூர் அருகே வகுப்பறைகள் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சி பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை ச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அதேபகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்ற னர். இப்பள்ளி கட்டிடமானது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் தற்போது சேதமடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் சேதமடைந்த வகுப் பறை கட்டிடங்கள் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் கல்வி…
‘மதராஸி’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, “‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்ஷன் காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பினேன். இப்போது ’மதராஸி’ காட்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘கஜினி’ மற்றும் ‘துப்பாக்கி’ ஆகிய படங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர்…
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டது. அந்த தேதிக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதே தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் ரூ.25 ஆயிரம் அளவுக்கு இன்று குறைவான ஊதியத்தை பெற்று வருகின்றனர். இந்த வித்தியாசத்தை சீர் செய்யக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, இதற்கு ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்,…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால் தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ளதைப்போல திருச்சியில் பயணிகள் மற்றும் வணிக ரீதியிலான ஓய்வு அறைகள் இல்லை. எனவே, புறப்பாடு பகுதியில், சர்வதேச விமான நிலையத்தில் உள்ளதைப்போல உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, இந்தியா விமான நிலைய ஆணைய குழுமம் உத்தரவின்படி, திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் 3-வது மாடியில் பயணிகளுக்கான ஓய்வறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த பெங்களூரு ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், வெளிநாடு மற்றும் உள்நாடு செல்லும் பகுதிகளில் எக்ஸிகியூடிவ் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கான ஓய்வறைகளை அமைத்துள்ளது. பல லட்ச…
தாய்ப்பால் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பெண்களுக்கு நீண்டகால மார்பக புற்றுநோய் நிகழ்தகவு வரை நீடித்த தாய்ப்பால் அளவு என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தாய்ப்பால் கொடுப்பது ஈஸ்ட்ரோஜன் வெளிப்பாட்டைக் குறைக்கிறது மற்றும் சேதமடைந்த செல்களை அகற்றக்கூடிய மார்பக திசு மாற்றங்களைத் தூண்டுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் எந்த காலமும் நன்மைகளை வழங்குகிறது, எனவே பெண்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள், அதே நேரத்தில் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் எந்த அளவு மார்பக புற்றுநோய் ஆபத்து பாதுகாப்பை அளிக்கிறது என்றாலும், தாய்ப்பால் கொடுப்பது நீண்ட காலத்திற்கு தொடரும் போது பாதுகாப்பு நன்மைகள் வலுவாக வளர்கின்றன. நிச்சயமாக, தாய்ப்பால் கொடுப்பது நிறைய பெண்களுக்கு ஒரு தேர்வாக இல்லை, (ஒற்றை, குழந்தை இல்லாதவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள்) எனவே அவர்கள்…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கான ஆர்டிஐ இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை பெறும் வகையில் என்ற இணையவழி முகப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் வழிமுறைகள் சென்னை உயர் நீதிமன்ற வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோபன்ஹேகன் நகர இதய ஆய்வில் வழக்கமான ஜாகிங் கணிசமாக நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது என்று தெரியவந்தது. ஜாக் செய்த ஆண்கள் 6.2 ஆண்டுகள் காலம் வாழ்ந்தனர், பெண்கள் 5.6 ஆண்டுகள் பெற்றனர். நோய்கள் இல்லாமல் முழு வாழ்க்கையையும் வாழ்வது ஒவ்வொரு மனிதனின் கனவு. நீண்ட ஆயுள் என்பது நீங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறீர்கள் என்பது மட்டுமல்ல; ஆரோக்கியமாக இருப்பது அதன் முக்கிய பகுதியாகும். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ விரும்பினால், உடற்பயிற்சி என்பது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல. ஒரு வகை உடற்பயிற்சி வியத்தகு முறையில் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. கோபன்ஹேகன் சிட்டி ஹார்ட் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான 2012 ஆய்வில், இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேர்க்கப்படலாம் என்று கண்டறியப்பட்டது. கண்டுபிடிப்புகள் அறிவியல் டைரக்டில் வெளியிடப்பட்டுள்ளன.உடற்பயிற்சி மற்றும் ஆயுட்காலம்(படம் மரியாதை: ஐஸ்டாக்)ஜாக் செய்த ஆண்கள் 6.2 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், அதே…
நகரில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது பல குடும்பங்களின் கனவு. ஆனால் அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் பராமரிப் பின்றி, வேதனையில் தவிக்கிறார்கள் திருப்பூர் வீரபாண்டி பழவஞ்சிபாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்! அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறும்போது, ”திருப்பூர் மாநகரில் ஆலாங்காடு, கருவம்பாளையம் பகுதிகளில் இருந்து ‘சொந்த வீட்டு’ கனவுடன், இங்கு வந்து குடியேறினோம். இன்றைக்கு 3 ஆண்டுகளை கடந்தும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு பிளாக்கில் 32 வீடுகள் வீதம் மொத்தமுள்ள 40 பிளாக்குக்கும் சேர்த்து, 1280 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். முறையற்ற குடிநீர் விநியோகம், கழிவுநீர் குழாய்கள் அடைத்துக் கொள்வதால் வீடுகளுக்கு செல்லும் வழியிலேயே வெளியேறும் மனிதக் கழிவுகள், மழைக் காலங்களில் நாற்றத்துடன் வாழ வேண்டிய அவலம், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்க ளுக்கும் பேருந்து வசதி இல்லாமல் இருப்பது என பல்வேறு சிரமங்களை நாள்தோறும்…
