’ஹை ஹர வீர மல்லு’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. நீண்ட மாதங்களுக்குப் பிறகு வெளியாகும் பவன் கல்யாண் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதால் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார் ஏ.எம்.ரத்னம். ஜூலை 24-ம் தேதி வெளியான இப்படம் பெரும் தோல்வியை தழுவி இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்றெல்லாம் செய்திகள் பரவ, அவற்றை எல்லாம் நீக்கி புதிய பதிப்பையும் மாற்றியது படக்குழு. ஆனால், எதுவுமே பெரிதாக மக்களிடம் எடுபடவில்லை. முதல் நாள் மட்டுமே நல்ல வசூல் இருந்தது. தற்போது உலகளாவிய ஒட்டுமொத்த வசூலே ரூ.100 கோடியை தொடும் என்கிறார்கள். சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் குறைந்தது 100 கோடி ரூபாய் அளவுக்கு…
Author: admin
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கையின் அழைப்புக்காக இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அச்சிறுமியை ஒரு மனித மிருகம் முள்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. இரு வாரங்களுக்கு முன் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் குறைவதற்கு முன்பாகவே இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என்ற ஐயம்…
டெல்லி குடியிருப்பாளர் மோஹித் சச்ச்தேவா (40), அவர் மரணத்தின் நகங்களிலிருந்து வாழ்க்கையைப் பறிப்பார் என்று நினைத்திருக்க முடியாது. ஒரு தீவிர ஜிம் செல்வான், புகைப்பிடிக்காதவர் மற்றும் அவ்வப்போது குடிப்பவர், மோஹித் சமீபத்தில் ஜிம்மில் ஒரு வழக்கமான காலை இருந்தார், அவர் சரிந்தபோது. ஆமாம், அவர் திடீரென இருதயக் கைதால் அவதிப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டம் அவரது பக்கத்தில் இருந்தது. கதையைச் சொல்ல அவர் உயிர் பிழைத்தார்.உண்மையில் என்ன நடந்ததுரியல் எஸ்டேட்டராக இருக்கும் மோஹித், தனது வழக்கமான காலை ஜிம் அமர்வில் மயக்கம் உணரத் தொடங்கினார். விரைவில், அவர் 180 கிலோ லெக் பிரஸ் செய்யும் போது சரிந்தார். ஒரு ஜிம் நண்பர்கள் நன்றியுடன் செயலில் ஈடுபட்டனர், உதவி வரும் வரை அவருக்கு கார்டியோ-புல்மோனரி புத்துயிர் (சிபிஆர்) வழங்கினர். மோஹித் சேமிக்க 8 நிமிட சாளரத்திற்கு குறைவாகவே இருந்தார், ஆனால் அவர் அதை செய்தார். சரியான நேரத்தில் நிக் காப்பாற்றினார்மோஹித் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது,…
ராய்ப்பூர்: கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுவதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சர்மா, “கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்துகிறது. இத்தகைய போராட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அன்றி வேறல்ல. ஏற்கெனவே, காங்கிரஸ் குழு ஒன்று, கன்னியாஸ்திரிகளைச் சந்திக்க அனுமதி கோரியது. நாங்கள் அனுமதி அளித்தோம். நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதுதான் காங்கிரசின் நோக்கமா? இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்களுக்கு பிணை வழங்குவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்” என தெரிவித்தார். கன்னியாஸ்திரிகள் இருவரும் கடந்த ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைதைக் கண்டித்து…
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும். இந்தக் கல்வியாண்டில் மழலையர் வகுப்பில் 32,807 பேர், முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, கற்றல் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், உயர் கல்வியில் இட ஒதுக்கீடு போன்றவற்றால் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையில் 58 கல்வி…
ஏஐ மூலம் காட்சிகள் மாற்றப்பட்டு இருப்பதற்கு ’ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த் எல்.ராய் காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. தற்போது இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது இயக்குநர் ஆனந்த்.எல்.ராயை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “கடந்த மூன்று வாரங்கள் நம்பமுடியாத நாட்களாகவும், மனதை மிகவும் புண்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தன. ’ராஞ்சனா’, அக்கறை, மோதல், கூட்டுழைப்பு மற்றும் வெற்றி பெறுமா இல்லையா என்று தெரியாத கலை…
சென்னை: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கல்வித்துறை சீரழிந்துள்ளது என்றும், மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகள் இந்தாண்டு மட்டும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பல குற்றங்கள் வெளிவந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஆசிரியர்கள் வெறும் பாடத்தை போதிப்பவர்கள் மட்டும் அல்லர். ஒழுக்கத்தை, கண்ணியத்தை, நன்னடத்தையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே ஒழுக்கமின்மையாக, கண்ணியமற்று நடந்து கொள்வதற்கு காரணம் ஒழுக்க கேடான, தகுதியற்ற நியமனங்கள் தான். இதற்கு முழு காரணம் அரசு தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடும் கல்வித்துறையில் ஒழுக்கமான, கண்ணியமான நியமனங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்து போயிருக்கிறது கல்வித்துறை. தனியார் கல்வி நிலையங்களில்…
பருவமழையின் சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை வாழைப்பழம், பப்பாளி, கொய்யா மற்றும் பேஷன் பழம் போன்ற வெப்பமண்டல பழங்களை வளர்ப்பதற்கு சிறந்த நிலைமைகளை வழங்குகிறது. சீரான மழைப்பொழிவு அடிக்கடி நீர்ப்பாசனத்தின் தேவையை குறைக்கிறது, அதே நேரத்தில் ஈரப்பதம் நிறைந்த சூழல் பசுமையான, விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த பழங்கள் மழைக்காலத்தில் வளர எளிதானது மட்டுமல்ல, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபைபர், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்திற்கு உதவவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன, பருவமழையின் போது குறிப்பாக மதிப்புமிக்க நன்மைகள். அவற்றின் இயற்கையான நொதிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் பொதுவான செரிமான சிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, மேலும் அவை நடைமுறை மற்றும் ஆரோக்கியமான பருவகால தேர்வுகளை உருவாக்குகின்றன.இந்த வெப்பமண்டல பழங்களை அதிகபட்ச சுகாதார நலன்களுக்காக இந்த பருவமழைக்கு வீட்டிலேயே வளர்க்கவும்வாழைப்பழம்வாழை தாவரங்கள் வெப்பம் மற்றும்…
புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவர்கள், வரைவுப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகக் கருதினால் அது தொடர்பாக அவர்கள் கோரிக்கை விடுக்கலாம். வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ செப்டம்பர் 1-ம் தேதி வரை இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து தீர்வைப் பெறலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பிஹாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.93 கோடியாக இருந்தது. வரைவு…
ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘பிளாக்மெயில்’. ஆனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. பல்வேறு படங்கள் வெளியீட்டால் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். மேலும், அடுத்த வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
