‘விருது’ என்பது ஒருவரின் சாதனை, திறமை அல்லது சேவையைப் பாராட்டி அவரை கவுரவிக்க வழங்கப்படும் அடையாளம். அந்த வகையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. ஸுவீடன் அரசு இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், அமைதி எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குகிறது. இவற்றில், அமைதிக்கான நோபல் பரிசுதான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குறி. இப்போது என்றால் இப்போது அல்ல, அவர் முதன்முறை அதிபராக இருந்தபோதிருந்தே இந்த நோபல் மீது ‘இரு கண்களும்’ இருந்து வருகிறது. ‘தீராத மோகம்’ – அமைதிக்கான நோபல் பரிசு மீதான ட்ரம்ப்பின் மோகம் எத்தகையது என்றால், சில மாதங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரை வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது அவரிடம் வெளிப்படையாகவே ஆதங்கத்தைப் பதிவு செய்யும் அளவுக்கு கட்டுக்குள் அடங்காதது. “நான் அமைதி நோபல் பரிசுக்குத் தகுதியானவன். ஆனால், நான் என்ன செய்தாலும்…
Author: admin
சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியதோடு, சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராகப் பேராசிரியர் வசந்தி தேவி திகழ்ந்தார். தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’-ன் தீமைகள் குறித்தும் மிகத் தீவிரமான பரப்புரையை அவர் மேற்கொண் டிருந்தார். பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும் உறுதியாகத் தனது கருத்துகளை முன்வைத்து வந்தார். அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்க வேண்டும் என இறுதிமூச்சு வரையில் போராடி வந்த…
துடிப்பான மீன்களுடன் வீட்டில் ஒரு நன்னீர் மீன்வளத்தை வைத்திருப்பது ஒரு பொறுப்பான பணி மட்டுமல்ல, மிகவும் பலனளிக்கும். வீட்டில் ஒரு மீன்வளத்தை அமைப்பது ஒரு வேடிக்கையான மற்றும் பலனளிக்கும் பொழுதுபோக்காக இருக்கும். இது உங்கள் இடத்திற்கு அழகைச் சேர்க்கிறது மற்றும் அமைதியான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குகிறது. இருப்பினும், ஒரு தொட்டியை தண்ணீரில் நிரப்புவது மற்றும் மீன் சேர்ப்பது போல இது எளிதானது அல்ல. அதற்கு பதிலாக, உங்கள் நீர்வாழ் செல்லப்பிராணிகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒருவர் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான படிகள் உள்ளன. வீட்டில் ஒரு மீன்வளத்தைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் ஆக.7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை (ஆக.2) டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை…
உணவு இல்லாமல் ஒரு நாள் கூட வாழ்வதை கற்பனை செய்வது நமக்கு கடினமாக இருக்கும்போது, தினசரி உணவு இல்லாமல் வாரங்கள் அல்லது மாதங்கள் கூட உயிர்வாழக்கூடிய சில உயிரினங்கள் உள்ளன. அவர்களின் ரகசியம் என்ன? அவர்களின் விசித்திரமான உண்ணாவிரத பழக்கத்தால் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் 10 விலங்குகள் இங்கே.
ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. முரி காவல் நிலையப் பகுதியில் உள்ள மர்து கிராமத்தில் உள்ள புரந்தர் மஹ்தோ என்பவரின் வீட்டுக்குள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இதனை அறிந்த மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் தந்திரமாக வீட்டை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் மஹ்தோ, தனது மகளுடன் சேர்ந்து, வீட்டின் வெளிப் பகுதியில் இருந்து கதவைப் பூட்டினார். வீட்டுக்குள் வைத்து புலியை பூட்டிய பிறகு, அவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பலமவ் புலிகள் காப்பகத்திலிருந்து மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்து புலியை வெற்றிகரமாக கூண்டில் அடைத்தனர். மறுநாள், அந்தப் புலி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஞ்சியில் நடைபெற்ற 76-வது வன…
புதுடெல்லி: 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 விருதுகள் தட்டிய பார்க்கிங் – ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘பார்க்கிங்’ போன்ற சாதாரண பிரச்சினைகள்தான் மனித மனங்களின் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் சிறுமைகளையும் கீழ்மைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதைக் கச்சிதமாக உணர்த்தியிருப்பார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் வெளிமாநில போதை பொருட்கள் நடமாட்டத்தின் மீது புதுச்சேரி காவல் துறையினர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய காவல் துறை நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது சரியானது அல்ல. இதற்குமேலும் சரியான நடவடிக்கையை காவல் துறையின் உயரதிகாரிகள் எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை காப்பாற்ற யாராலும் முடியாது. தற்போது புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தங்களது கடந்த கால சட்டம் – ஒழுங்கு பிரச்சனையில் ஒரு குற்றத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டை தங்களது சுயநலத்துக்காக ஒரு கும்பல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டி…
கொசு கடித்தல் ஒரு சிறிய எரிச்சலை விட அதிகம் -அவை குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இந்த சிறிய பூச்சிகள் டெங்கு, மலேரியா, ஜிகா வைரஸ் மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்ற ஆபத்தான நோய்களின் கேரியர்கள் ஆகும், அவை மனிதர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை கொசுக்கள் இல்லாத ஒரே இடங்களாக இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் பருவகால அல்லது ஆண்டு முழுவதும் கொசு நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் அச om கரியத்தைத் தவிர்ப்பதற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம். பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவதிலிருந்தும், தேங்கி நிற்கும் ஆடைகளை அணிவதிலிருந்தும், தேங்கி நிற்கும் நீரை அகற்றுவதற்கும், கொசு நேரங்களைத் தவிர்ப்பதற்கும், கொசு கடிப்பதைத் தடுக்கவும், வெளிப்புறத்திலும் உங்கள் வீட்டினுள் பாதுகாப்பாகவும் இருக்க 10 பயனுள்ள வழிகள் இங்கே.கொசு கடிகளை திறம்பட தடுக்க 9 சக்திவாய்ந்த உதவிக்குறிப்புகள்பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவது கொசு கடிப்பதைத் தடுக்க…
பெங்களூரு: வேகமாக வளர்ந்து வரும் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார் என்றால், ஒன்று அவர் பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது தகவல் அறியாதவராக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதாரமற்ற, ஆத்திரமான கருத்துகளை அறிந்தபோது மற்ற அனைவரையும் போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். அவரைப் போன்ற உறுதியற்ற, நாகரிகமற்ற, பொறுப்பற்ற ஒரு நாட்டின் தலைவரை நவீன வரலாறு கண்டதில்லை என்று நினைக்கிறேன். ட்ரம்ப் இந்தியாவுடன் மட்டும் மோசமாக நடந்து கொள்ளவில்லை, அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளையும் விட்டுவைக்காதவர் அவர். அடிப்படையிலேயே அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. ராஜதந்திரம் அல்லது அரசுத் திறன் மூலம் அதைக் கண்டறிந்து தீர்க்க முடியாது. அவரது ஆத்திர குணம் குறித்து இதற்கு மேலும் சொல்வது சரியாக இருக்காது.…
