Author: admin

ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது. சாஸ்​திர மரபின்​படி, ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​வதும் மிக​வும் முக்​கிய​மானவை ஆகும். அதே​போல, ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யின் மணலை​யும், பிர​யாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடு​வதும் சாஸ்​திரங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த சாஸ்​திர மரபு​களை நடை​முறைக்​குக் கொண்டு வரு​வதற்​கு, அதாவது காசி விஸ்​வ​நாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​ய​வும், ராமேசுவரம் ராம​நாதசு​வாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​ய​வும் ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் தேவகோட்டை சமஸ்​தானம் மூலம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட கோடி தீர்த்த நீருடன் தேவகோட்டை சமஸ்தான நிர்வாகிகள். இதற்​காக,…

Read More

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில், சென்னையின் திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் பிரபலம் ஒருவர் சரண்டர் செய்த கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. வாக்காளர்களுக்கு முறை கேடாகப் பணப் பட்டுவாடா செய்ய உள்ளூர் தாதாவான கனகுவிடம் (சுஜித்) கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது. ஒருபுறம், மாயமான கைத்துப்பாக்கியை கண்டுபிடிக்கும்படி பணிக்கப்படுகிறார் பயிற்சி எஸ்.ஐ ஆன புகழ் (தர்ஷன்). இன்னொரு பக்கம், கனகுவும் அவர் ஆட்களும் பணத்தைத் தேடுகிறார்கள். இரு தரப்பையும் இணைத்த புள்ளி எது? அவர்களுக்கிடையிலான முட்டலும் மோதலும் எதனால்? துப்பாக்கியும் பணமும் கிடைத்ததா? என்பது கதை. சட்டத்தைக் காக்கும் போலீஸ்காரர்களும் அதை மதிக்காத நிழலுலகக் குற்றவாளிகளும் விரும்பியோ, விரும்பாமலோ சபிக்கப்பட்ட ஒரு மோதல் களத்தில் உழல்வதுதான் திரைக்கதையின் மையம். இந்த மோதலில் வழிந்தோடும் வன்முறையின் ரத்தத்தை மீறி, அன்பும் நேயமும் அறமும் வென்றதா, இல்லையா என்பதைப் பிடிமானம் மிகுந்த திரைக்கதை எழுத்தின் வழியே, நேர்த்தியான எமோஷனல் த்ரில்லராக…

Read More

மதுரை: பொது இடங்​களில் உள்ள கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் சேர விரும்பும் அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டிருந்​தது. இதையடுத்​து, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், மதுரை அமர்​வில் நேற்று இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். அதில், “எங்​கள் கட்​சி​யினர், சமூகத்​தில் பின்​தங்​கிய​வர்​களுக்​காக​ எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் பணி​யாற்றி வரு​கின்றனர். தமிழகம் முழு​வதும் ஏராள​மான இடங்​களில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​கள் உள்​ளன. கொடிக்​கம்​பங்​கள் அமைப்​பது கட்​சிகளுக்கு அரசி​யலமைப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள அடிப்​படை உரிமை​களில் ஒன்​றாகும். இந்த உரிமையையாராலும் தடுக்க முடி​யாது. கட்​சி​யின் கொள்​கையை பரப்​புவ​தில் கொடிக் கம்​பங்​கள் முக்​கிய இடத்​தைப் பிடிக்​கின்​றன. எனவே, பொது​மக்​கள் அறி​யும் வகை​யில் ஆங்​காங்கே கொடிக்​கம்​பங்​களை நிறு​வுவது அவசி​ய​மானது.…

Read More

நீண்டகால டிஜிட்டல் சாதன பயன்பாடு காரணமாக கண் திரிபு பெருகிய முறையில் பொதுவானது. வல்லுநர்கள் 20-20-20 விதியை பரிந்துரைக்கின்றனர்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 விநாடிகளுக்கு 20 அடி தூரத்தில் ஒரு பொருளைப் பாருங்கள். திரை பிரகாசத்தை சரிசெய்தல், சரியான விளக்குகளை பராமரித்தல் மற்றும் நீல ஒளி வடிப்பான்களைப் பயன்படுத்துதல் ஆகியவை உதவும். கண் திரிபு மக்களிடையே ஒரு பொதுவான கவலையாக மாறியுள்ளது, குறிப்பாக இந்த நாட்களில் இளைஞர்கள். கண்கள் தொடர்ந்து அழுத்தத்தின் கீழ் உள்ளன, டிஜிட்டல் சாதனங்களில் அதைக் குறை கூறுகின்றன. மொபைல் சாதனங்கள் அல்லது கணினித் திரைகளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அல்லது புத்தகங்களைப் படித்தாலும், அல்லது டிவி பார்ப்பது, கண் திரிபு என்பது இன்றைய காலங்களில் ஒரு அமைதியான துணை. இப்போது, பெரும்பாலான வேலைகளுக்கு கணினி அல்லது மடிக்கணினியில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், மக்களை வறட்சி, மங்கலான பார்வை, தலைவலி மற்றும் கழுத்து…

Read More

லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாடர்கில் பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜாண்சன் சார்லஸ் 35, ஜூவெல் ஆண்ட்ரூ 35, ஜேசன் ஹோல்டர் 30 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்…

Read More

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்பாக, இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். ஆனால், இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வ கணேஷின் உடலை வாங்கி அடக்​கம் செய்​வோம் என உறவினர்கள் போராட்​டம் நடத்தி வந்தனர். இந்​நிலை​யில், உதவி ஆய்​வாளர் சரவணன் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். மேலும், இந்த வழக்கு தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். இதற்​கிடை​யில், அதி​காரி​கள் தொடர்ந்து நடத்​திய பேச்​சு​வார்த்தை காரண​மாக, கவின் செல்​வகணேஷ் உடலை பெற்​றுக்​கொள்ள அவரது உறவினர்​கள் சம்​ம​தித்​தனர். இதையடுத்​து, நெல்லை…

Read More

சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி நீதிபதி டி.வினோத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிப​தி​யான டி.​வினோத்​கு​மாரை அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வரவேற்​றுப் பேசுகை​யி்ல், ‘‘நீதிபதி வினோத்​கு​மாரின் சொந்த ஊர் தெலங்​கா​னா​வில் நல்​கொண்டா மாவட்​டத்​தில் உள்ள சூரிய பேட்​டை. இந்த ஊரில் லட்​சம் ஆண்​டு​களுக்கு முன்​பாக கற்​கால மனிதர்​கள் வாழ்ந்​த​தாக வரலாற்று ஆவணங்​கள் உள்​ளன. சுத்​த​மான நகராட்சி என பெயர் எடுத்த ஊரும் கூட. அத்​தகைய பெருமை…

Read More

சென்னை: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் 100-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு ஆக.7-ம் தேதி சர்​வ​தேச மாநாடு டெல்​லி​யில் நடை​பெறவுள்ளது என சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​தார். சென்னை சிவானந்தா சாலை​யில் உள்ள பத்​திரிக்கை தகவல் அலு​வல​கத்​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன தலைவர் சவுமியா சுவாமி​நாதன் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன​மானது, ஊட்டச்சத்​து, எழை எளிய மக்​கள் மற்​றும் பெண்​கள் முன்​னேற்​றம் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​பட்டு வருகிறது. இந்​தி​யா​வில் உணவு தட்​டுப்​பாட்டை நீக்​கியது மற்​றும் அனை​வருக்​கும் சமமான ஊட்​டச்​சத்து கிடைத்​த​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் பங்கு மிகப்​பெரியது. அவரின் 100-வது பிறந்​த​நாள் ஆக.7-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு டெல்​லி​யில் ஆக.7 முதல் 9-ம் தேதி வரை ‘நீடித்த பசுமை புரட்சி – இயற்​கை​யுடன் இயைந்த வாழ்க்​கை’ என்ற தலைப்​பில் சர்​வ​தேச மாநாடு நடை​பெறவுள்​ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார். இந்த மாநாட்​டில் பல்​வேறு மாநில அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர். மிக முக்​கிய​மாக 120 விஞ்​ஞானிகள், 300-க்​கும்…

Read More

நிற்கும் கன்று உடற்பயிற்சியை வளர்ப்பது காஸ்ட்ரோக்னீமியஸ் மற்றும் சோலியஸ் தசைகளை குறிவைக்கிறது, இது இரண்டு பெரிய கன்று தசைக் குழுக்களை உருவாக்குகிறது.ஒருவருக்கொருவர் இடுப்பு தூரத்தில் உங்கள் கால்களுடன் நிற்கும்போது, ஒரு சுவர் அல்லது நாற்காலியை சமநிலை புள்ளியாகப் பயன்படுத்தும்போது இந்த பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் டிப்டோக்களில் நிற்கும்போது, முடிந்தவரை உங்கள் கால்விரல்களை அடைய மெதுவாக உங்கள் குதிகால் உச்சவரம்பை நோக்கி உயர்த்தவும். கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களுடன் உங்கள் குதிகால் தரையில் குறைப்பதற்கு முன், இந்த நிலையை ஒரு நொடி பராமரிக்கவும்.உங்கள் உடலை நேராக வைத்திருக்கும்போது இறுக்கமான மையத்தை பராமரிக்கவும். 10 முதல் 15 மறுபடியும் கொண்ட 2 முதல் 3 செட்களைச் செய்யுங்கள். அதிகரித்த சிரமத்திற்கு, ஒரு நேரத்தில் ஒரு அடி தூக்கும்போது நீங்கள் ஒற்றை-கால் கன்று உயர்வு செய்ய வேண்டும், அல்லது எடை சேர்க்க ஒரு கையில் ஒரு டம்பல் வைத்திருக்க வேண்டும்.

Read More

சென்னை: ​போ​திய பணி​யாளர்​கள் இல்​லாத​தால் அரசு விடுதி கழி​வறை​களை மாணவர்​களே கழு​வும் கொடுமை அரங்​கேறி வருவதாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் உள்ள கல்​லூரி மாணவர்​களுக்​கான 36 அரசு ‘சமூகநீதி விடு​தி​கள்’ எந்​தவொரு அடிப்​படை வசதி​களு​மின்றி நோய் பரப்​பும் கூடாரங்​களாகி, வாழத்​தகு​தி​யற்ற வசிப்​பிடங்​களாக உரு​மாறி வரு​வது அதிர்ச்​சி​யளிக்​கிறது. புழு​விழுந்த உணவும், துர்​நாற்​றம் வீசும் நீரும், பராமரிப்​பில்​லாத கழி​வறை​களும், சிதிலமடைந்த கட்​டிடங்​களும் உள்ள அரசு விடு​தி​களை வைத்​துக் கொண்டு ஏழை எளிய மாணவர்​களின் சமூக நீ​தியை நிலை​நாட்டப்​போவ​தாக திமுக அரசு பெயர்​ மாற்​றம் செய்​தது, மக்​கள் வரிப்​பணத்​தைக் கையாடல் செய்​ததை மறைக்​கத்​தானோ என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. காரணம், 23 அரசு விடு​தி​களில் நூல​கம் அமைப்​ப​தற்​காக ரூ.21 லட்​சம் செல​வழிக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு மார்​தட்டி வரும் வேளை​யில், பல நூல​கங்​களில் புத்​தகங்​களோ, முறை​யான இணையதள வசதியோ இல்​லை. மாலை​யில் மாணவர்​களுக்கு வழங்கவேண்​டிய சிற்​றுண்டி…

Read More