விவரிக்கப்படாத தொடர்ச்சியான சோர்வின் தோற்றம், பலவீனத்துடன் சேர்ந்து பல்வேறு மருத்துவ சிக்கல்களைக் குறிக்கலாம் அல்லது பித்தப்பை புற்றுநோயின் இருப்பைக் குறிக்கலாம். இங்கு அனுபவித்த சோர்வு வழக்கமான சோர்வை மீறுகிறது, ஏனென்றால் அது நேரத்துடன் மிகவும் கடுமையானதாக இருக்கும்போது தொடர்கிறது. இந்த அறிகுறியை மக்கள் நிராகரிக்க முனைகிறார்கள், ஏனெனில் இது பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் மன அழுத்தம் அல்லது தூக்கமின்மைக்கு காரணம் என்று கூறுகிறது. வயிற்று வலி அல்லது குமட்டலுடன் சோர்வு தோன்றினால் உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.ஆதாரங்கள்: NHS – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் புற்றுநோய் ஆராய்ச்சி யுகே – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் அப்பல்லோ மருத்துவமனைகள் – பித்தப்பை புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் சென்டர் – பித்தப்பை புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் உதவிக்குறிப்புகள்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும்…
Author: admin
ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி, காசினி விண்கலம் போன்ற சக்திவாய்ந்த கருவிகளைப் பயன்படுத்தி நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் வான நிகழ்வுகளின் மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில படங்களை நாசா கைப்பற்றியுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். இந்த படங்கள் தொலைதூர சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் ஒளிரும் நெபுலாக்கள் முதல் மாறி நட்சத்திரங்கள் மற்றும் பாரிய நட்சத்திரக் கொத்துகள் வரை பிரபஞ்சத்தின் அழகையும் சிக்கலையும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு புகைப்படமும் அண்ட பரிணாமம், நட்சத்திர உருவாக்கம் மற்றும் இடத்தை வடிவமைக்கும் மறைக்கப்பட்ட சக்திகளின் கதையைச் சொல்கிறது. இது ஒரு உலகளாவிய கிளஸ்டரின் பளபளப்பான பளபளப்பாக இருந்தாலும் அல்லது மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வரும் ஒளியாக இருந்தாலும், இந்த காட்சிகள் நாம் வசிக்கும் பரந்த பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்துகின்றன.நாசாவின் முதல் 10 காட்சிகள்: சுழல் விண்மீன் திரள்களிலிருந்து மாறி நட்சத்திரங்கள் வரை1. குழு -11 வெளியீட்டு முயற்சியில் சூரிய உதயம்ஆதாரம்:…
புதுடெல்லி: சுற்றுலா விசா மூலம் ஜம்முவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ரக்ஷந்தா ரஷீத். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தனது முடிவினை தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். வாடிய முகத்துடன் தங்களது குடும்பம், கணவர், பிள்ளைகளிடம் இருந்து விடைபெற்று சென்றனர். அவர்களில் ஒருவர்தான் ரக்ஷந்தா ரஷீத். 62 வயதான அவர், கடந்த 38 ஆண்டுகளாக ஜம்முவில் தனது…
சென்னை: தெற்கு ரயில்வேயிடம் இருக்கும் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க கொள்கைரீதியிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் தற்போது, தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இத்தடத்தில் உள்ள குறிப்பிட்ட சில நிலையங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தெற்கு ரயில்வேயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்முடிவில், தெற்கு ரயில்வே தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அனுமதி கிடைக்காததால், இந்த முயற்சி கடந்த…
புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தன. இந்த விவகாரத்தில் கடந்த 2024 நவம்பர் 11-ல், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறையும் வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து…
புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் – இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது பெயில் – இந்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜவான் திரைப்படத்தை தமிழ்நாட்டை சேர்ந்த அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே – இந்தி திரைப்படம்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங் – தமிழ் திரைப்படம்), விஜயராகவன் (பூக்காலம் – மலையாள திரைப்படம்), சிறந்த துணை நடிகையாக ஊர்வசி (உள்ளொழுக்கு – மலையாள திரைப்படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது சுதிப்தோ சென்னுக்கு (தி கேரளா ஸ்டோரி – இந்தி திரைப்படம்) வழங்கப்பட்டு…
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டு வந்த 6 விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், சார்மினார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சார்மினார் விரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கும் புறப்படும். ஐதராபாத்தில் இருந்து புறப்படும் சார்மினார் விரைவு ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 7.15 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் 161-வது தேசிய நெடுஞ்சாலையில் பிட்லம் எனும் ஊரிலிருந்துயட்னூரு எனும் இடத்துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் கேபினில் 4 பேர் அமர்ந்திருந்தனர். லாரி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது, ஸ்டியரிங்கை திருப்ப முடியாமல் லாரி ஓட்டுநர் சாலையில் குதித்து உயிர் தப்பினார். ஆனால், லாரி பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் நின்றது. அதே சமயத்தில் லாரியின் கேபினில் இருந்த 4 பேரும் 20 மீட்டர் கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வால்ட் டிஸ்னி அனிமேஷன் zடூடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. போலீஸ் காமெடி படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது ‘ஜூடோபியா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர். ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய குற்ற வழக்கை முறியடித்த பிறகு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ், நிக் வைல்ட் ஆகியோர், சீஃப் போகோவின் நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் ஒற்றுமை நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பது தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். இதன் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நவ. 28-ல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்துக்காக நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்த பழனிசாமி நேற்று காலை செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, “கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியின்போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட்டன. எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களை நாடு முழுவதும் தடை செய்யுமாறு மத்திய…
