வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக அதிமுக-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்டு மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் பலரும் காத்திருக்கின்றனர். மனைப் பிரிவுக்கு ஒப்புதல் தரவேண்டுமானால் இடத்தின் மதிப்புக்கு ஏற்ற விதத்தில் சம்திங் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான விலையில் பிளாட்களை பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிஷன் போடுவதாலேயே இந்தத் தேக்க நிலை என்கிறார்கள். வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் தண்டபாணி என்பவர் மாநகராட்சி எல்லைக்குள் வசந்தபுரம் பகுதியில் உள்ள தனது பூர்விக சொத்தான சுமார் 1.74 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து கடந்த 2022-ல் லே அவுட் அப்ரூவலுக்கு…
Author: admin
விழுப்புரம்: அன்புமணியின் நடைபயணத்தை மக்களும், கட்சியினரும் ஏற்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமகவின் வேர் தைலாபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. கட்சிக்கு நிறுவனர்-தலைவர் இரண்டும் நான்தான். பாமக தலைவர் என்று வேறுயாரையும் (அன்புமணி) குறிப்பிடக் கூடாது. தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யாத்திரை செல்வதால் துளியும் பயனில்லை. தொண்டரும், மக்களும் அன்புமணியின் நடைபயணத்தை ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாக காவல் துறை மற்றும் உள்துறை தலைமைக்கு முறைப்படி புகார் கொடுத்துள்ளோம். எனது கட்டளையை மீறி நடைபயணம் செல்லும் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. எனது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்புக் கருவி கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அளவில் திறமையான தமிழக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினால், 2 நாட்களில் கருவியை வைத்தவரைக் கண்டுபிடித்துவிடலாம். இது தொடர்பாக சைபர் க்ரைம் மற்றும்…
தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங் கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27). இவர், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரி கின்றனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி,…
சென்னை: சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்திய-சிங்கப்பூர் ஓவிய, சிற்பக்கலைஞர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. சிங்கப்பூர் நாட்டின் 60-வது தேசிய தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை 10 நாட்கள் நடத்துகின்றன. இசை, நாடகம், ஆவணப் படம், அரசியல், கலை, கலாச்சாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திருவிழா அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இக்கண்காட்சியை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அவர் பேசும்போது, “சிங்கப்பூர் தனது 60-வது தேசிய தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தியா-சிங்கப்பூர் இரு நாடுகளுக்கு…
சென்னை: ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 14 நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு சுற்றுப் பயணத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான ‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை சிங்கப்பூரில் கடந்த 2023-ல் நடைபெற்ற தமிழ் கலை, பண்பாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை அயலக தமிழர்களிடம் பரிமாற்றம் செய்வது, புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்கு தமிழகத்தின் ‘மரபின் வேர்களோடு’ உள்ள தொடர்பை புதுப்பிப்பது ஆகியவையே இதன் நோக்கம். அதன்படி, ஆண்டுதோறும் அயலகத்தில் வாழும் 18-30 வயது தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டு, தமிழக அரசு சார்பில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல், கலாச்சாரம், கட்டிடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடை,…
கால்சியம் குறைபாடு அல்லது ஹைபோகல்சீமியா, உடலில் உள்ள கால்சியம் அளவு இயல்பை விடக் குறையும் போது ஏற்படுகிறது, இது தசை இயக்கம், நரம்பு சமிக்ஞை மற்றும் எலும்பு வலிமை போன்ற முக்கிய செயல்பாடுகளை பாதிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிலைமைகள், மருந்துகள் அல்லது உணவைக் காட்டிலும் மோசமான உறிஞ்சுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது, இந்த குறைபாடு தசைப்பிடிப்பு, சோர்வு, உடையக்கூடிய நகங்கள், வறண்ட சருமம் மற்றும் பல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது வலிப்புத்தாக்கங்கள், ஒழுங்கற்ற இதய துடிப்புகள் அல்லது ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்தக்கூடும். விரல்களில் கூச்சம் அல்லது அடிக்கடி தசை வலி போன்ற ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம். சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சையானது, கூடுதல் மற்றும் உணவு மாற்றங்கள் உட்பட, கால்சியம் குறைபாட்டின் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க உதவும்.கால்சியம் குறைபாடு மற்றும் அதன் பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது எலும்பு வலிமை, தசை சுருக்கம்…
திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி மே 8-ம் தேதி தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உண்டு, உறைவிட பள்ளியான இதில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த வேலூர் மாவட்டம் கொடியநத்தம் வசந்தநகர் எம்.குப்பம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ்(17) என்பவர் நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த துவாக்குடி போலீஸார், அங்கு சென்று யுவராஜ் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.…
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட மற்றும் 83 2.83 லட்சம் விலையில் இந்த ஆடை, மெதுவாக எரியும் ஏ-லைன் பாவாடையுடன் ஒரு உருவம்-கட்டிப்பிடிக்கும் மேல் பாதியைக் கொண்டுள்ளது-இது ஒரு நேர்த்தியான, உலகளவில் புகழ்ச்சி அளிக்கும் வெட்டு. ஆனால் இந்த பகுதியை உண்மையிலேயே ஒதுக்கி வைக்கும் விவரங்கள்: பல பாக்கெட்டுகள் (ஆம், ஃபேஷன் செயல்படக்கூடும்), புலப்படும் சீம்கள் மற்றும் தங்க ஸ்னாப் பொத்தான்கள் மினிக்கு அதன் ஸ்மார்ட், வடிவமைக்கப்பட்ட விளிம்பைக் கொடுத்தன. காதல் மலர் ஜாகார்ட் ஒரு மென்மையான பரிமாணத்தை சேர்த்தது, கட்சி-தயார் முதல் ஓடுபாதை-தகுதியானதாக குழுமத்தை உயர்த்தியது.
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கான வரியை 10 சதவீதம் குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரி விதிக்கும்’’ என்று அறிவித்தார். இந்தியாவுக்கு முதலில் 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு அந்த வரி 1 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சத வீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஜூலை 9-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது.…
திருநெல்வேலி: நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கவின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.…
