Author: admin

சென்னை: டிஎன்​பிஎஸ்சி மூல​மாக, 400 உதவி பொறி​யாளர்​கள், 1,850 கள உதவி​யாளர்​களை தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. மின் வாரி​யத்​தில் உதவி பொறி​யாளர், கள உதவி​யாளர், கேங்​மேன், லைன்​மேன் போன்ற பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்​துகின்​றன. மின் வாரிய பணி​யாளர்​கள் வாரி​யத்​தின் வாயி​லாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறி​யாளர் உட்பட ஒரு சில பணி​யிடங்​களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர்க்​கப்பட உள்​ளனர். இந்​நிலை​யில். தற்​போது 400 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் 1850 கள உதவி​யாளர்​களை டிஎன்​பிஎஸ்சி மூல​மாக தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள்…

Read More

சிவ​காசி: ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது. சட்​டப்​பேரவை தேர்​தல் வர உள்​ள​தால் அரசி​யல் கட்​சிகளின் ஆர்​டர்​கள் அதி​கம் வரு​வ​தால் உற்​பத்​தி​யாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். சிவ​காசி​யில் பட்​டாசு மற்​றும் தீப்​பெட்டி தொழிலுக்கு அடுத்​த​படி​யாக அச்​சுத்​தொழில் பிர​தான​மாக உள்​ளது. சிவ​காசி​யில் உள்ள 150-க்​கும் அதி​க​மான அச்​சகங்​களில் நோட்​டுப் புத்​தகங்​கள், டைரி​கள், காலண்​டர்​கள் ஆகியவை தயாரிக்​கப்​படு​கின்​றன. இதில் 50-க்​கும் அதி​க​மான அச்​சகங்​கள் பிரத்​யேக​மாக காலண்​டர் தயாரிப்​பில் மட்​டும் ஈடு​பட்​டுள்​ளன. இங்கு ஆண்டு தோறும் ஆடிப்​பெருக்கு தினத்​தில் சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டு, அடுத்த ஆண்​டுக்​கான காலண்​டர் ஆல்​பம் வெளி​யிடப்​படு​வது வழக்​கம். அதன்​படி நேற்று ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை நடத்​தப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்​டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது. ரூ.25 முதல் ரூ.2,500 வரை பல்​வேறு வடிவங்​களில் தினசரி காலண்​டர்​கள், மேஜை காலண்​டர்​கள், மாத காலண்​டர்​கள் என 350-க்​கும் மேற்​பட்ட வடிவங்​களில் காலண்​டர்​கள் தயாரிக்​கப்பட…

Read More

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் 10 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது. இதுகுறித்து ஆந்​திர மாநில காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ஆந்​திர மாநிலம் பாபட்லா மாவட்​டத்​தில் பல்​லிகுரவா கிராமத்​துக்கு அருகே உள்ள சத்​யகிருஷ்ணா கிரானைட் குவாரி​யில் நேற்று காலை 16 தொழிலா​ளர்​கள் பணி​யில் இருந்​துள்​ளனர். அப்​போது, திடீரென பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், 6 பேர் உடல் நசுங்கி உயி​ரிழந்​தனர். 10 பேர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்டு நரச​ராவ்​பேட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது. பாறை​களுக்கு அடி​யில் சிக்​கிய​வர்​களின் உடல்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடந்து வரு​கிறது. இது​வரை 2 தொழிலாளர்களின்…

Read More

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 5-ம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளிலும், 7, 8, 9-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை…

Read More

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்ட நிலை​யில், தண்​டனைக்​கான முதல் இரவை அவர் சிறை​யில் கழித்​தார். கண்​ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்​சலுடன் காணப்​பட்​டார். அவரது உடல்​நிலை சீராக இருப்​பதை உறுதி செய்​வதற்​காக சிறை மருத்​து​வர்​கள் அன்று இரவு அவரது உடல்​நிலையை பரிசோ​தித்​தனர். அப்போது, தனது வேதனை​களை மருத்துவர்களிடம் அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ள​தாக​வும்…

Read More

மும்பை: ’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ மூலம் மாற்றப்பட்டு இருப்பதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. தற்போது இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அண்மையில் இது குறித்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆனது எனக்கு…

Read More

புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். “நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இந்த நிலையில் பிரிவதாக அறிவித்த 19 நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் சாய்னா நேவால். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ – மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சாய்னா நேவாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…

Read More

விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர். பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11-வது சீசன் ஆகஸ்ட் 2 முதல் தொடங்கியது. இதில் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ் சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சீசனில் இயக்குநர் மிஷ்கின் நடுவராக பங்கேற்றுள்ளார். பல்வேறு திரைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடியுள்ள மிஷ்கின், ‘டெவில்’ படத்துக்கு இசையமைத்திருந்தார். மேலும் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் அவரது ஆழமான இசையறிவு வெளிப்படும். இந்த சூழலில் முதல்முறையாக ரியாலிட்டு நிகழ்ச்சி ஒன்றில் மிஷ்கின் நடுவராக பங்கேற்கிறார். இதில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம், தமன் ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

Read More

“நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்” என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்த பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுயமுயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டும் வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால்,…

Read More

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதான வேடத்தில் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. பாஜக முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹெச்.ராஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ‘கந்தன்மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிவ பிரபாகரன் – சந்திரசேகர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read More