உடுமலை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக அமைந்துள்ள திருமூர்த்தி மலை, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே குன்றில் எழுந்தருளியிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் நாள் ஆடிபெருக்கு விழா, திருமூர்த்தி மலையில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான, ஆடிபெருக்கு ஆக.3ம் தேதியான இன்று அமணலிங்கேஸ்வரர் மற்றும் பிற தெய்வங்களுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். இந்த நாளில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் நீராடி, இறைவனை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.…
Author: admin
சென்னை: அதிமுக தொண்டர்கள் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசை’ அகற்ற “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற எனது எழுச்சிப் பயணத்திற்கு, ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பாதம் தொட்டு, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி எனது எழுச்சிப் பயணத்தை தொடங்கினேன். கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எனது பயணத்தில், இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். சுமார்…
பிக் பென்னைப் பார்வையிட யோசிக்கிறீர்களா, அல்லது வெஸ்ட் எண்ட் ஷோவைப் பிடிக்கிறீர்களா? ஒரு குறுகிய வருகைக்காக நீங்கள் இங்கிலாந்துக்குச் செல்கிறீர்கள் என்றால், அது சுற்றுலா, குடும்பம், வணிகம் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக இருந்தாலும், உங்களுக்கு ஒரு நிலையான பார்வையாளர் விசா தேவைப்படலாம். எவ்வாறு விண்ணப்பிப்பது, என்ன செலவாகும், உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதற்கான முழுமையான குறைவு இங்கே. மேலும் தெளிவு மற்றும் விவரங்களுக்கு, பார்வையிடவும்: இங்கிலாந்து நிலையான பார்வையாளர் விசாஉங்களுக்கு விசா கூட தேவையா?நீங்கள் எதையும் செய்வதற்கு முன், உங்களுக்கு உண்மையில் விசா தேவையா என்று சரிபார்க்கவும். உங்கள் தேசியத்தைப் பொறுத்து, உங்களால் முடியும்:6 மாதங்கள் வரை விசா அல்லது ETA (மின்னணு பயண அங்கீகாரம்) இல்லாமல் இங்கிலாந்தைப் பார்வையிடவும்.நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ETA உடன் இங்கிலாந்தைப் பார்வையிடவும்.உங்கள் நாடு விசா-விலக்கு அல்லது ETA- தகுதி வாய்ந்த பட்டியலில் இல்லாவிட்டால், நிலையான பார்வையாளர் விசாவிற்கு விண்ணப்பிக்கவும்.உங்கள் விசா நிலையை இங்கிலாந்து…
சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் ஆக.5-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 7, 8 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 9-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 5-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், தேனி, தென்காசி,…
கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகரத்தில் வாழ்வது பெரும்பாலும் ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது, வகை 1 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்திற்கும் இதைச் சொல்ல முடியாது. ஆம், அது சரி. சாமி செப்ராஹோய் மற்றும் பேராசிரியர் சோஃபியா குட்ஜார்ன்ஸ்டோட்டிர் தலைமையிலான இந்த ஆய்வில், கோதன்பர்க், சுவீடன் மற்றும் சகாக்கள், மற்றும் சக ஊழியர்கள், வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற சூழலில் வாழ்வது நகர சூழல்களில் வாழ்வதை ஒப்பிடும்போது வகை 1 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து நடத்தி வரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்ற விவசாயியின் மகள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, முதுநிலை வருவாய் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகி உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவரது மகள் ஆர்த்தி. முதுநிலை பட்டம் பெற்றுள்ள இவர், கோட்டூரில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நடத்திவரும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, சமூக நலத்துறையில் இளநிலை உதவியாளராக குடவாசலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், நாகை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக நியமன ஆணையை பெற்றுள்ளார். இதுகுறித்து ஆர்த்தி கூறியதாவது: திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நடத்திவரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்று குரூப் 2 தேர்வில் தேர்ச்சி…
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். ஆக.14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ரஜினிகாந்தின் படமாக கூலி அறியப்படுகிறது. கூலிக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற 5 திரைப்படங்கள்: சிவா (1989)…
போடி: மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காடுகளில் மேய்ச்சல் உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் இன்று (ஆக.3) நடைபெற்றது. இதற்காக ஏராளமான நாட்டு மாடுகள் அழைத்து வரப்பட்டன. இருப்பினும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்வதாகக் கூறி சீமானை போலீஸ் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: “இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப் படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்தனர். ஆனால் தமிழகத்தில் மது குடிக்க வைத்து இனப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடந்ததும், தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தொடர்ந்து லட்சக்…
ஒரு சிறந்த உணவுக்குப் பிறகு அல்லது மோசமான பிறகு உங்கள் மார்பில் எரிச்சலூட்டும் அந்த எரிச்சலூட்டும் நோய்வாய்ப்பட்டது, உங்கள் தொண்டையை ஊர்ந்து செல்லும் அமிலத்தால் எழுந்திருக்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை. நல்ல செய்தி? ஒவ்வொரு முறையும் நீங்கள் மாத்திரைகள் பாப் செய்ய தேவையில்லை. தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் ஹார்வர்ட் மற்றும் அய்ம்ஸ் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி கருத்துப்படி, உணவுக்குப் பிறகு சர்க்கரை இல்லாத பசை மற்றும் உங்கள் இடது பக்கத்தில் தூங்குவது போன்ற சிறிய மாற்றங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஒரு இன்ஸ்டாகிராம் இடுகையில், இந்த எளிய மற்றும் விஞ்ஞான ஆதரவு திருத்தங்களை அவர் அமில ரிஃப்ளக்ஸ் குறைப்பதற்கான தனது சிறந்த உதவிக்குறிப்புகளாக பகிர்ந்து கொண்டார், இப்போது மருத்துவ ஆய்வுகள் அவரை ஆதரிக்கின்றன. ஆகவே, நீங்கள் இயற்கையாகவே நெஞ்செரிச்சல் செய்யத் தயாராக இருந்தால், அதைச் சரியாகச் செய்ய ஏழு நிரூபிக்கப்பட்ட வழிகள்…
புதுடெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் செப்டம்பர் 9 இல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாகி விட்டது. பாஜகவின் தேசியத் தலைவராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்த பின்பும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக, அவரது பதவி காலம் முதன்முதலாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. அமைப்புத் தேர்தல்கள் முடிவடையாததால் புதிய தலைவர் தேர்தல் நடத்த முடியவில்லை. இதையடுத்து சமீபத்தில், அமைப்புத் தேர்தல் பணிகள் நிறைவடைந்தன. அதன் பிறகும் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் பின்னணியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்தது காரணமாகி விட்டது. தற்போது, தேர்தல் ஆணையத்தால் குடியரசு துணைத்…
