லாடர்ஹில்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் நேற்று முன்தினம் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் சல்மான் அகா 38, ஹசன் நாஸ் 40. பகர் ஸமான் 20 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4. குடகேஷ் மோட்டி 2 அகீல் ஹொசைன். ஷமர் ஜோசப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கேப்டன் ஷாய் ஹோப் 21, குடகேஷ் மோட்டி 28, ஜேசன் ஹோல்டர் 16, ரொமாரியோ ஷெப்பர் 15…
Author: admin
புதுடெல்லி: “ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும்’’ என்று ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, என்னை மிரட்டினார். வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலோ, மத்திய அரசை எதிர்த்து பேசினாலோ, என் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அருண் ஜெட்லி மிரட்டினார்’’ என்று தெரிவித்தார். இதற்கு அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘என் தந்தை ராகுலை மிரட்டியதாக கூறுகிறார். என் தந்தை அருண் ஜெட்லி கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். ஆனால், வேளாண் சட்டங்கள் 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.…
நீங்கள் சமீபத்தில் கொஞ்சம் பனிமூட்டத்தை உணர்ந்திருந்தால் -விஷயங்களை அடிக்கடி அழிப்பது அல்லது கவனம் செலுத்த போராடுவது – ஐடின் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்த கனிமம் மூளை செயல்பாட்டில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. போதுமானதாக இல்லாமல், உங்கள் தைராய்டு உங்கள் மூளையை ஆதரிக்க முடியாது. கவனம் செலுத்துவது, ஒழுங்கமைக்கப்படுவது அல்லது எளிய விஷயங்களை நினைவில் கொள்வது கடினம். குழந்தைகளில், அயோடின் குறைபாடு மூளை வளர்ச்சியையும் கற்றலையும் கூட பாதிக்கும். “மூளை மூடுபனி” பல காரணங்களைக் கொண்டிருக்கலாம் என்றாலும், இது கவனம் செலுத்த வேண்டிய ஒன்று – குறிப்பாக நீங்கள் சோர்வாகவோ, குளிர்ச்சியாகவோ அல்லது இந்த பட்டியலிலிருந்து பிற அறிகுறிகளைக் கவனித்தாலோ.போதுமான அயோடைஸ் உப்பு, கடல் உணவு, பால் அல்லது முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த சிக்கல்களைத் தவிர்க்கலாம். இந்த அறிகுறிகள் உங்களிடம் நிறைய இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும், எனவே அவர்கள் சரியான சோதனைகளைச் செய்து…
புதுடெல்லி: அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தியர்களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த வாரம் மேற்கு வர்ஜினியாவின் மார்ஷல் மாவட்டத்தில் உள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். ஓஹியோ மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரியவந்தது. அங்கிருந்து அந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த தகவலை…
சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பற்பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களைத் தனது உரையில் அதிபர் மேற்கோள் காட்டினார். இவ்விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பேசும்போது, ‘‘பண்பாட்டை பேணும் உறைவிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும். எந்த வகையிலான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாத சமூக முன்னேற்றம் தொடர்ந்து நிலவ வேண்டியது மிகவும் அவசியம். பல…
சிவகாசி: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகாசியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கானோர் வாக்களித்து வருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் வசிக்கும் வடமாநில மக்களுக்கு இங்கு வாக்காளராகும் உரிமை உள்ளது. கீழடியில் அகழாய்வு நடத்தியது மத்திய தொல்லியல் துறை. மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் உறவினரான அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதால், இதில் பிரச்சினையை கிளப்புகின்றனர். இவ்வாறு கூறினார்.
வீடு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், அங்கு நாங்கள் விஷயங்களைச் செய்கிறோம். இருப்பினும், எங்கள் வீடு உங்களைக் கொன்ற நச்சுகள் நிறைந்திருப்பதாக நாங்கள் சொன்னால் என்ன செய்வது? ச ura ரப் சேத்தி, எம்.டி., எம்.பி.எச், உங்கள் வீட்டில் உள்ள 8 நச்சு விஷயங்களை பட்டியலிடுகிறது…கீறப்பட்ட அல்லது சில்லு அல்லாத குச்சி பானைகள்அல்லாத குச்சி பான்கள் எளிய மற்றும் (பெரும்பாலும்) எண்ணெய் இல்லாத சமையலுக்கு ஒரு பிரதானமாக இருக்கின்றன, இருப்பினும் அவற்றின் பூச்சு சரிவு பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கில் பொருட்களின் (பி.எஃப்.ஏ) ஆபத்தான வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த பிரிவில் உள்ள பொருட்கள் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. உங்களிடம் சேதமடைந்த குச்சி அல்லாத சமையல் பாத்திரங்கள் ஏதேனும் இருக்கும்போது, அதை துருப்பிடிக்காத எஃகு அல்லது வார்ப்பிரும்பு பானைகளுடன் மாற்றவும், அவற்றில் பாதுகாப்பான சமையலுக்கான செயற்கை பூச்சுகள் இல்லை.செயற்கை இனிப்புகள்மக்கள் டயட் சோடாக்கள் மற்றும்…
சென்னை: வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று கூறியதாவது: தினம் தினம் போராட்டமாக இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி போராடும் அளவுக்கு மத்திய அரசு என்ன அநீதியை இழைக்கிறது. உண்மையில், வாழ்க்கையை நடத்துவதற்கும், பாதுகாப்புக்கும், மருத்துவமனை செல்வதற்கும் தமிழக மக்களுக்குதான் தினம் தினம் போராட்டமாக இருக்கிறது. மருத்துவமனைகளின் அவலநிலை அனைத்து ஊடகங்களிலும் வெளிவருகிறது. மக்களுக்கு மத்திய அரசு தினம் தினம் உதவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இங்கு இருப்பவர்கள் மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை. எப்போதும் மத்திய அரசை குறை கூறி கடிதம் எழுதுவதே முதல்வருக்கு வழக்கமாகிவிட்டது. இன்று கருணாநிதி இருந்திருந்தால், தமிழக நலனுக்காக மத்திய அரசை ஆதரித்திருப்பார். தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிப்பது நல்லதல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள…
கொலம்பஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் நேற்று அறிவித்தார். ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா கவனிப்பார். இந்நிலையில், ‘‘அமெரிக்கர் அல்லாத ஒருவரை சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்தது ஏன்?’’ என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரா தரன் அமெரிக்க குடிமகள். அவர் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய குழந்தையும் அமெரிக்கர்தான். அவருடைய பெயர்தான் உங்களுக்கு பிரச்சினையா? அப்படியானால், பிரச்சினை மதுராவிடமோ அல்லது அவரது நியமனத்திலோ இல்லை. சிறந்த சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர். உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் சிறப்பாக வாதாடியவர்’’ என்று பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு பழனிசாமி நேற்று காலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், நேற்று இரவு நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் பழனிசாமிக்கு 109 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மற்றும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று…
