
டெல்லியில் நடைபெற்று வரும் உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இரண்டு நாட்களிலேயே 20 பதக்கங்களைக் குவித்துள்ளனர்.
47-வது உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு டெல்லியில் உள்ள தி லீலா அம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றன.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 80 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ஜின்சிமோல் செபாஸ்டியன், வலது கை மற்றும் இடது கை ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தினார்.
இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக இரட்டைத் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மாஸ்டர் பெண்கள் 80 கிலோ பிரிவில் யோகேஷ் சவுத்ரி வலது கையில் தங்கமும், இடது கையில் வெண்கலமும் வென்றார்.
மாஸ்டர் ஆண்கள் 60 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் ஷௌகத் வி.டி. வலது கையில் தங்கமும், இடது கையில் வெண்கலமும் கைப்பற்றினார். மேலும், கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 80 கிலோ பிரிவில் மினிமோல் ஜோஸ் வெள்ளிப் பதக்கமும், பிரீதா சி. வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதனால் முதல் இரண்டு நாட்களிலேயே 20 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
