
ராவல்பிண்டி: இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டி.20தொடரில் ஆடுகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன் எடுத்தது. மாஸ் சதகத் 96, கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹான் 73 ரன் அடித்தனர்.
பின்னர் களம் இறங்கிய இலங்கை20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133ரன்களே எடுத்தது. இதனால் 82 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியின் பவுலிங்கில் முகமது இம்ரான் விக்கெட் வீழ்த்தினார். சதகத் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
