
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வீட்டிலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்ற திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார்.
இதன் தொடர்ச்சியாக, திமுக தலைவரும் முன்னால் முதலமைச்சரும் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
