
பொதுவாக மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் இவர்களின் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கும். சரி, மற்ற ராசியினர் எப்படி? விரிவாகத் தெரிந்துகொள்வோமா…சிலருக்குப் பண வசதி நிறைய இருக்கும். பிள்ளைகளை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைப்பார்கள். ஆனால், பிள்ளைகளோ அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக படிக்க முடியாமல் திணறுவார்கள். ஒருவேளை, படிப்பை முடித்தாலும் உரிய வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும்!
ஆனால் வேறு சிலர்… கடன் வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அல்லது வேறு எவரேனும் உதவியோடு படிப்பைத் தொடர்வார்கள் அந்தப் பிள்ளைகள். படிப்பில் அவர்கள் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். படித்து முடித்ததும், மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு சம்பளம் பெற்று திடீர் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவார்கள்.ஒருவரின் வாழ்வில் இப்படியெல்லாம் அற்புதம் நிகழுமா என்பதை அறிய வேண்டும் என்றால், அவரது ஜனன ஜாதகத்தைப் புரட்ட வேண்டும். ஜாதகத்தில் கல்விக்குரிய கிரகமான புதன், நினைவாற்றலுக்கு உரிய சந்திரன், 5-ம் வீட்டுக்கு உரிய கிரகம், அந்த வீட்டில் நிற்கும் கிரகம் ஆகியவற்றின் நிலையை ஆராய்ந்து பலன் அறிய வேண்டும். அதேபோல், முயற்சி ஸ்தானத்தையும் கவனிக்கவேண்டும்.அதேபோல் படிப்புக்கேற்ற நல்ல வேலை உடனடியாகக் கிடைக்க வேண்டும் எனில், ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானமாகிய 10-ம் இடம் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ஜோதிடம் சொல்லும் பொதுவான தகவல்கள் இவை. மற்றபடி ஒவ்வொரு ஜாதகத்தையும் துல்லியமாகக் கணித்து பலன் அறியவேண்டும். ஜோதிட நூல்கள் ராசிகள் சார்ந்து சில தகவல்களை விளக்குகின்றன.
பொதுவாக புதனுடைய ராசிகளான மிதுனம், கன்னி; குருவுடைய ராசிகளான தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் நிறைய படிப்பார்கள். இவர்கள், தங்கள் வாழ்க்கை முழுக்க கல்விக்காக ஏதாவது ஒருவகையில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்.அதேபோல் மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் இவர்களின் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கும்.
இந்த 7 ராசிக்காரர்கள்தான் படிப்பிலும் வேலையிலும் ஜொலிக்க முடியும் என்றில்லை. எல்லா ராசியினருக்குமே கல்வி நன்றாக வரும். அந்த கல்வியின் நிலை என்ன என்பதை ஜாதகத்தை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும்.ஒருவர் ஐ.டி. படிப்புகள் படிக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும் போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும். அதாவது, கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைக்குத் தேர்வாகிவிடுவார்கள். அவர்களின் சம்பளமும் நல்ல நிலையில் இருக்கும்.சரி, நல்லதொரு வேலை அமைய தெய்வத்தின் துணையும் அவசியம் அல்லவா? அதன்படி சில எளிய பரிகாரங்களைச் செய்து வழிபாடு செய்தால், விரைவில் நிச்சயம் பலன் கிடைக்கும்.
1. தினமும் வீட்டில் காலையில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்படி விளக்கேற்றும்போது நரசிம்மரை மனதில் நினைத்துத் துதித்தபடியே விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். நரசிம்மர் உடனடியாக வந்து காக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வணங்கி ஒரு நாளைத் தொடங்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும். நாள்தோறும் இப்படி வழிபட இயலாது என்பவர்கள், குறைந்தபட்சம் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
2. சனிபகவானே நம் உழைப்பை எடுத்துக்கொள்பவர். அதனால் அவருக்கு எள் எண்ணெய் தீபம் ஊற்றி வணங்கி வருவது சிறப்பு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என சனியின் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல… வேலை வாய்ப்பு தேடுவோர், பணியிடத்தில் பிரச்னை உள்ள அனைவருக்குமே இந்த வழிபாடு நல்ல பலன் கொடுக்கும்.
