பிரபல மசாலா நிறுவனமான எவரெஸ்ட் நிறுவனத்தின் ஜீரகப் பொடி தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
எவரெஸ்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஜீரகப் பொடியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதியை உடனடியாக சந்தையில் இருந்து திரும்பப் பெற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI உத்தரவிட்டுள்ளது
கோவாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட எவரெஸ்ட் ஜீரகப் பொடி மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது
அதில் Azoxystrobin மற்றும் Thiamethoxam ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது
முதற்கட்ட ஆய்வில் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்ட நிலையில் நிறுவனத்திற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது
பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறு ஆய்விலும் அதே மாதிரி பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து E080668761 என்ற Batch Number கொண்ட குறிப்பிட்ட ஜீரகப் பொடி தொகுதியை உடனடியாக திரும்பப் பெறவும் திரும்பப் பெறப்பட்ட பொருட்களின் முழுமையான பதிவுகளை பராமரிக்கவும் எவரெஸ்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பொதுமக்கள் தங்களிடம் உள்ள எவரெஸ்ட் ஜீரகப் பொடியின் Batch Numberஐ சரிபார்த்து பாதிக்கப்பட்ட தொகுதி என்றால் அதனை பயன்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் ஜீரகப் பொடிக்கு தடை
Leave a Comment
