
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் காட்சிகள் முடிந்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள், இன்டர்வெல் பிளாக் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாதியில் நெல்சனின் வழக்கமான நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும், யோகிபாபு மற்றும் நமோ நாராயணன் இடம்பெறும் காமெடி காட்சிகள் சிறப்பாக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.
இடைவேளை காட்சி தான் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளில் ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் அனிருத்தின் BGM பல காட்சிகளுக்கு கூடுதல் மாஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இரண்டாம் பாதி குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிலர் இரண்டாம் பாதி ஓவராக இருப்பதாகவும், திரைக்கதை முதல் பாதியைப் போல வலுவாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம், சில விமர்சனங்கள் ஜெயிலர் 2வை முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக பாராட்டியுள்ளன. குறிப்பாக ரஜினியின் மாஸ், நெல்சனின் காமெடி மற்றும் அனிருத்தின் இசை படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், ஆரம்பகட்ட ரிப்போர்ட்டை பார்த்தால் ஜெயிலர் 2 ரசிகர்களுக்கு ஒரு மாஸ் என்டர்டெயின்மென்ட் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் முதல் பாகத்தின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை வரும் நாட்களில் ரசிகர்களின் முழுமையான கருத்துகளும் வசூல் நிலவரமுமே தீர்மானிக்கும்.
