
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
மறுபுறம், பல தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Fancy Dress போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக குழந்தைகளுக்கு பிரத்யேக உடைகள், அலங்காரப் பொருட்கள், மேக்கப் மற்றும் தேவையான பொருட்களை வாங்க பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக்குடன் எளிமையான கொண்டாட்டம், மறுபுறம் தனியார் பள்ளி மாணவர்களுக்காக பெற்றோர்களின் கூடுதல் செலவு என, குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் இரண்டு விதமான நிலைகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பேசப்பட்டு வருகின்றன.


