நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர். ரஷீத் 19 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களும் எடுத்தனர். புதியவரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து இறங்கிய ஜடேஜா, துபே இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் தோனி, ஜேமி ஓவர்டன் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்தனர். இப்படியான 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.…
Author: admin
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் சுமார் 12 ஆயிரம் இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவில் உரிமைகள் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள், LGBTQ ஆதரவாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்த ஆர்வலர்கள் உட்பட 150- க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. மேன்ஹேட்டன் தொடங்கி பாஸ்டன் வரையிலான முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில், அரசாங்க பணி ஆட்குறைப்பு, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்கா தவிர்த்து லண்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களில் இந்த போராட்டங்கள் நடந்துள்ளன. வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம் காணும் இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் சார்ந்தவை மட்டுமல்ல. அவை தனிப்பட்ட…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு, 11-ம் நாளான நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் புறப்பாடாயினர். திருக்கல்யாணத்தையொட்டி, வெள்ளி சிம்ம வாகனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலக்கரையிலுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது, மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரை சந்திப்பு மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவ்னி. தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன தம்பி’ தொடரின் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 மாதங்களிலேயே பிரதீப் குமார் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். இதன்பிறகு 2022ஆம் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார். இதே போட்டியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற அமீர் உடன் பாவ்னிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அண்மையில் 9 பேரும் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார். தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும்…
மும்பை: நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணத்தைத் தவிர இதர வகைகளில் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை (என்ஐஎன்எப்ஆர்ஐஎஸ்) இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை மண்டல அளவில் அதன் ரயில்வே மேலாளர்களே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மும்பை-மன்மட் பஞ்சவதி விரைவு ரயிலில் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது புசவால் ரயில்வே மண்டலம் மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ரயிலில் பொருத்தப்பட்ட முதல் ஏடிஎம் ஆகும். ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதும் இந்த ஏடிஎம்மிலிருந்து பயணிகள் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏடிஎம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பொருத்தப்பட்டிருந்தாலும், அனைத்து பயணிகளும் அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாமல்,…
21 வயது இந்திய மாணவர், ஹர்சிம்ரத் ரந்தாவா ஒன்ராறியோவின் ஹாமில்டனில் புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது தவறான தோட்டாவால் தாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். ரந்தாவா, ஒரு மாணவர் மொஹாக் கல்லூரிஇரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஷாட்கள் சுடப்பட்டபோது ஒரு அப்பாவி பார்வையாளராக இருந்தார்.படப்பிடிப்பில் ரந்தாவா ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஹாமில்டன் பொலிசார் தற்போது இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணியளவில் அப்பர் ஜேம்ஸ் ஸ்ட்ரீட் மற்றும் சவுத் பெண்ட் சாலை அருகே நிகழ்ந்தது.பொலிசார் கூறுகையில், ஒரு கருப்பு செடானில் ஒரு பயணி ஒரு வெள்ளை செடான் குடியிருப்பாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதனால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது, இது ரந்தாவாவையும் தாக்கியது. துணை மருத்துவர்களும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் பின்னர் அவர் துப்பாக்கிச்…
பஸ்தர்: மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில எல்லைகள் சந்திக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு ‘‘தீர்க்கமான நடவடிக்கை’’ என பெயிரிடப்பட்டுள்ளது. இதில் சரணடைவது அல்லது இறப்பது என்ற இரு வழிகள் மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்காக மகாராஷ்டிராவில் சி-60 கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டது. அதேபோல் தெலங்கானா காவல்துறையில் க்ரேஹவுண்ட் என்ற பெயரில் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. சத்தீஸ்கரில் டிஆர்ஜி என்ற பெயரில் சிறப்பு படை உள்ளது. இது தவிர மத்திய அரசின் சிஆர்பிஎப் படையும் நக்சல் ஒழிப்பில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஈடுபட்டுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல்…
Last Updated : 10 Dec, 2024 11:26 AM Published : 10 Dec 2024 11:26 AM Last Updated : 10 Dec 2024 11:26 AM Sora மாடல் ஜெனரேட் செய்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் கலிபோர்னியா: டெக்ஸ்டுகளை வீடியோவாக மாற்றும் Sora ஏஐ வீடியோ ஜெனரேட்டரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். அது குறித்து பார்ப்போம். மாயாஜால கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் வரும் காட்சி போல ஏஐ தொழில்நுட்பம் மாயை நிகழ்த்தி வருகிறது. கதை, கட்டுரை, கவிதை, படம் போன்றவை மட்டுமல்லாது பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்டுகளுக்கு (ப்ராம்ப்ட்) ஏற்ப வீடியோவையும் ஜெனரேட் செய்து வருகிறது. அப்படி வீடியோவை ஜெனரேட் செய்து தரும் Sora ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதம் இதனை சோதனை முயற்சியாக ஓபன் ஏஐ வெளியிட்டது. குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தும்…
சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இறுதிநாளில் வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘1, 2 மதிப்பெண் வினாக்களை தவிர 3, 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 2-ம் தொகுதி பாடப்…