சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துவற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக டிஸ்பென்சரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், அதில் தொடர்புடையோர் என நீதிமன்றம் சார்ந்த அனைவருக்கும் ஏதேனும் அடிப்படை சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த டிஸ்பென்சரிக்கு இதயவியல் மற்றும் பொது நல மருத்துவத்துறை மருத்துவ நிபுணர்களை பணியமர்த்துமாறு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து இதயவியல், பொது மருத்துவத்துறை நிபுணர்கள் இரண்டு பேர் டிஸ்பென்சரிக்கு தினமும் பணிக்கு அனுப்பப்பட்டு வந்தனர் தற்போது சுழற்சி முறையில் ஒவ்வொரு திங்களன்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமமனையிலிருந்தும், செவ்வாயன்று…
Author: admin
புதுடெல்லி: ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா படிப்படியாக துண்டித்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் என தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த…
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்க வீரர்கள் சங்கத்தின் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரபாடா அதில், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரபாடா கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பங்கேற்றார். இதில் 21-ம் தேதி எம்ஐ கேப்டவுன், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு பின்னர் ரபாடாவுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத விளையாட்டுக்கான தென்னாப்பிரிக்க நிறுவனம் (SAIDS) நடத்திய இந்த சோதனையில்…
சென்னை: 3 வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தனது எக்ஸ் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குஷ்பு பதிவிட்டிருந்தார். தொடர்ந்து எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இயங்கி வந்த குஷ்பு கடந்த மூன்று வாரங்களாக அதில் எதுவும் பதிவிடமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் குஷ்பு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “3 வாரங்களுக்குப் பிறகு ஒருவழியாக திரும்ப வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் மிஸ் செய்தேன். இந்த 3 வாரங்களில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. மீண்டும் ஒருமுறை இணைந்து முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து நிறைய கேட்கவும் ஆவலுடன்…
மறைமலை நகர்: வணிகர்கள் நலனை பாதுகாக்க அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்து. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு அரசு உத்தரவு அளிக்கப்பட்டது. மக்களவையில் சில்லரை வணிக விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள லட்சோப லட்சம் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை உருவாகி இருக்கும். இன்று வணிகர்களுக்கு தங்களை காவலாக காட்டிக் கொள்ளும் திமுக…
ஜம்மு காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போதே சிந்தி நதி நீர் பிரச்சினை எழுந்தது. அப்போது நாடு நாடுகளுக்கும் இடையே தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1948 மார்ச் 31-ல் ஒப்பந்தம் காலாவதியானது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்தது. சுமார் 17 லட்சம்…
துபாய்: ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது. நியூஸிலாந்து (109), ஆஸ்திரேலியா (109), இலங்கை (104), பாகிஸ்தான் (104), தென் ஆப்பிரிக்கா (96), ஆப்கானிஸ்தான் (91), இங்கிலாந்து (84), மேற்கு இந்தியத் தீவுகள் (83), வங்கதேசம்…
சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 4 வார்டுகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 மக்கள் பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 417 இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மண்டலத்தில் 59-வது வார்டு, தேனாம்பேட்டை மண்டலம் 122-வது வார்டு, வளசரவாக்கம் மண்டலம் 146-வது வார்டு, ஆலந்தூர் மண்டலம் 165-வது வார்டு ஆகியவற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மறைவையொட்டி, அந்த 4 வார்டுகளும் காலியானதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.…
ஹஸ்கீஸ் மாஸ்டர் எஸ்கேப் கலைஞர்கள் என்று பிரபலமாக அறியப்படுகிறார், சரியாக. அவை ஆர்வமாகவும், இயற்கையில் சுயாதீனமாகவும் இருக்கின்றன, மேலும் அவை வேலிகளின் கீழ் தோண்டி, சுவர்களில் குதித்து, வாயில்களைத் திறக்கும். எனவே, உங்கள் வீடு அல்லது முற்றத்தில் தப்பிக்கும்-ஆதாரம் இல்லையென்றால், உங்கள் ஹஸ்கி அக்கம் பக்கத்தை அலைந்து திரிவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்-அல்லது தொலைவில். இது மைக்ரோசிப்பிங், உயர் வேலிகள் மற்றும் நிலையான மேற்பார்வை ஆகியவற்றை அவர்களுக்கு அவசியம் செய்கிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல் ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவீந்திர குமார் என்பவர் கரவுலி மாவட்டம் தொடாபிம் நகருக்கு அருகே சுரங்கம் நடத்தி வருகிறார். இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுபப் போவதாகவும் பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ ஜெய்கிரிஷ் படேல் (37) ரவீந்திர குமாரிடம் தெரிவித்துள்ளார். கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டுமானால் ரூ.10 கோடி தர வேண்டும் என கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் ரூ.2.5 கோடி தர ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ரவீந்திர குமார் எங்களிடம் புகார் தெரிவித்தார். எங்கள் ஆலோசனையின் பேரில், ஜெய்ப்பூரில் உள்ள எம்எல்ஏ விடுதியில் படேலை சந்தித்து ரூ.20 லட்சத்தை லஞ்சமாக வழங்கி உள்ளார் குமார். அப்போது பணத்தைப் பெற்ற படேலை ஏடிபி அதிகாரிகள் கையும்…