காற்று சுழற்சி மற்றும் சிக்கிய ஈரப்பதம் காரணமாக மற்ற இனங்களை விட நெகிழ் காதுகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளைக் கொண்ட நாய்கள் காது நோய்த்தொற்றுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. பிரபலமான செல்ல நாய் இனங்கள் பீகிள்ஸ், காக்கர் ஸ்பானியல்ஸ் மற்றும் லாப்ரடர்கள் போன்றவை நமைச்சல், பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படும் வலிமிகுந்த காதுகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. அறிகுறிகளில் தலை நடுக்கம், சிவத்தல், வாசனை அல்லது வெளியேற்றம் ஆகியவை அடங்கும். உங்கள் நாயின் காதுகளை தவறாமல் சுத்தம் செய்வது மற்றும் நீச்சல் அல்லது குளியல் பிறகு அவற்றை உலர்த்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும். காது தொற்று ஏற்பட்டால், VET பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் சிகிச்சை அவசியம். நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நாள்பட்ட நோய்த்தொற்றுகள் செவிப்புலன் இழப்புக்கு வழிவகுக்கும்.
Author: admin
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத்…
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்த பின்னர்தான், தொழில் நிறுவனங்கள் முறைப்படி இயங்க முடியும். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தற்போது ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி பல கோடி ரொக்கம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் பிரதமரை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியுடன் அஜித் தோவல்…
தமிழகத்தில் இன்று (மே 7) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி…
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றம் அதன் இணைய தளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பீலா எம்.திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய பெண் நீதிபதிகளில் பீலா திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ம் தேதி பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நீதிபதிகளின் சொத்து விவரம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரத்தை பொதுவெளியில்…
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ். இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 2 ரன்களுடன், ரோஹித் 7 ரன்களுடனுன் வெளியேறினர். வில் ஜாக்ஸ் அரை சதத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ் 35, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 1, கார்பின் போஷ் 27, தீபக் சஹர் 8 என 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி. இதன் பிறகு 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது…
புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடும். அப்போது, அதில் இருந்து தப்பித்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவே போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை. தாக்குதல் அபாயம் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, கல்பாக்கம், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் தாராபூர், உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லை மாவட்டங்கள் உட்பட 259 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை இன்று மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தயார் படுத்துவதே இந்த போர்க்கால ஒத்திகையின் நோக்கம். போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை…
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஏப்ரல் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்குமாறு சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களில் யாரேனும் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை அளித்திருந்தால் அதை சரிசெய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆதார சான்றிதழ்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர்…
சென்னை: ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது முதலே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் கதை முன்கூட்டியே இணையத்தில் வெளியானது படக்குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முறை படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசியாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறது படக்குழு. இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சவுபின் சாகீர், உபேந்திரா, நாகர்ஜுனா, சத்யராஜ், கடைசியாக…