திருச்சி: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 6 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருச்சி வந்தார். பின்னர், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 5.30 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பிலிருந்து குட்ஷெட் மேம்பாலம் வரை அரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கினார். திருச்சி புத்தூரில் நடிகர் சிவாஜி கணேசன்…
Author: admin
பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் அமைப்பை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகளை இழந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி-50 குறியீட்டெண் 141 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,273 புள்ளிகளில் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05 % சரிந்தன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு குறைந்ததால் நேற்று ஒரே வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.423.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்று ரூ.418.50 லட்சம் கோடியாக சரிவடைந்தது. பாகிஸ்தான் சந்தையில் கடும் வீழ்ச்சி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச் சந்தைகளில்…
ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. ஜம்மு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஜம்முவின் சில இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு பகுதி முழுவதும் நேற்றிரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். காஷ்மீரின் ஜம்மு பிராந்தியம், பூஞ்ச் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை…
வாடிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகை போக்கியிலிருந்து நேற்று வெண்புகை வெளியேற்றப்பட்டது. மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன. கார்டினல்கள் தங்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில் கத்தோலிக்க திருச்சபையை வழி நடத்துவதற்கான 267-வது போப்பை தேர்வு செய்தனர். முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் என்பவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இனிமேல் 14-ம் லியோ என அழைக்கப்படுவார்.
`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் `ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் போர் ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு கல்பாக்கம் அணுமின் நிலையம், துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அண்ணாசாலை, ஈவெரா பெரியார் சாலை, காமராஜர்…
புதுடெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. காஷ்மீரின் ஜம்மு விமானப்படைத் தளம், பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளம், ராஜஸ்தானில் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானத் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இதில் பெரும்பாலான ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. மேலும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு…
சென்னை: கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சிகள் எதற்கும் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தை…
திருவனந்தபுரம்: கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு கடந்த 2019, 2021, 2024-ம் ஆண்டுகளில் இதே பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் தென்பட்டன. அப்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த சூழலில் கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வளஞ்சேரியை சேர்ந்த 42 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வளஞ்சேரி முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள்…
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 436 அரசுப் பள்ளிகள் உட்பட 2,638 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,316 மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 8.02 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பதிவு செய்த நிலையில், 7.92 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,049 பேர் (1.25%) தேர்வில் பங்கேற்கவில்லை. மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளும் முடிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட…
சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னதுபோல கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள், மாணவர்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தை ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடக் கூடாது. அவர்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவார்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உயர்கல்விக்கான விருப்பமிக்க மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து…