Author: admin

விழுப்புரம்: திண்​டிவனத்​தில் உள்ள அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடந்த வாரம் சந்​தித்​தார். இந்​நிலை​யில், தைலாபுரத்​துக்கு முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் நேற்று சென்​று, பாமக நிறு​வனர் ராம​தாஸிடம், தனது குடும்​பத்​தில் நடை​பெறும் திரு​மணத்​துக்​கான அழைப்​பைக் கொடுத்​தார். பின்​னர் இரு​வரும் சிறிது நேரம் ஆலோ​சனை நடத்​தினர். இதுகுறித்து பாமக தரப்​பில் கேட்​ட​போது, “தமிழகத்​தின் அரசி​யல் கள நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாமக இடம் பெற வேண்​டும் என்ற அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்தை சி.​வி.சண்​முகம் முன்​வைத்​திருக்​கிறார்” என்​றனர்.

Read More

உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்ற நோய்களுக்கு ஒரு தேயிலை விடைபெறுவதை கற்பனை செய்து பாருங்கள். உடல் பருமனை சமாளிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு எளிய வழியைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தேநீரைப் பருகுவது போல எளிமையாக இருக்கலாம். ஒரு சமீபத்திய ஆய்வு வளர்சிதை மாற்ற நோய்களைக் கையாள்வதிலும், எடை நிர்வாகத்திற்கு உதவுவதிலும் ஒரு குறிப்பிட்ட தேயிலை திறனை எடுத்துக்காட்டுகிறது. இந்த தேயிலை சாறு கணிசமாகக் குறைக்கப்பட்ட எடை, மேம்பட்ட குளுக்கோஸ் உணர்திறன் மற்றும் பருமனான எலிகளில் இன்சுலின் எதிர்ப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த பண்டைய பானம் தசைச் சிதைவையும் தடுத்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகப்படியான கொழுப்பை குறிவைத்தது. வளர்சிதை மாற்ற நோய்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகின்றன, அவற்றைக் கையாள்வதற்கு தேநீர் முக்கியமாக இருந்தால் என்ன செய்வது? ஆம், எடை மேலாண்மை உட்பட உங்கள் அனைத்து வளர்சிதை மாற்ற சிக்கல்களுக்கும் தேநீர் விடையாக இருக்கலாம்! சாவோ பாலோ ஆராய்ச்சி…

Read More

சென்னை: ​திட்​ட​மிட்​டபடி அக்​டோபர் 12-ம் தேதி முதுகலை பட்​ட​தாரி தேர்வு நடை​பெறும் என ஆசிரியர் தேர்வு வாரி​யம் தெரிவித்துள்​ளது. தமிழகத்​தில் உள்ள அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் 1,996 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறிவிக்​கையை ஆசிரியர் வாரி​யம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளி​யிட்டு அதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்​றுக்​கொண்​டது. எழுத்துத்தேர்வு அக்​. 12-ம் தேதி நடை​பெறும் என அறி​வித்​தது. இந்​நிலை​யில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்​றும் பொது அறிவு பாடத்​திட்​டம் மாற்​றியமைக்​கப்​பட்​டிருப்​ப​தால் அப்​பாடங்​களுக்கு தயா​ராகும் வகை​யில் தேர்வை 3 வாரம் தள்​ளிவைக்க கோரி சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்​கில் தீர்ப்​பளித்த நீதிப​தி​கள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் பரிசீலிக்கலாம் என அறி​வுறுத்​தினர். இதைத்​தொடர்ந்​து, முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்​பான ஆலோ​சனை கூட்​டம் கடந்த வாரம்…

Read More

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள மின்வாரிய தலை​மையகத்​தில் மின்வாரிய கழகங்​களுக்​கிடையி​லான உயர்​மட்ட ஒருங்​கிணைப்​புக் குழு கூட்​டம் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றத்​து. இந்த கூட்​டத்​தில் பேரிடர் மேலாண்மை மற்​றும் பருவ மழைக்​கால முன்​னேற்​பாடு​கள், பணி​யாளர் தேவை மற்​றும் மனிதவள செயல்​முறை​கள், சட்ட விவ​காரங்​கள், நுகர்​வோர் சேவை மற்​றும் குறைதீர் வழி​முறை​கள், அறி​விப்​பு​கள், திட்​டங்​கள் கண்​காணிப்பு மற்​றும் நிதி முன்​னேற்​றம், மின் உற்​பத்​தி, தடை​யில்லா மின் விநி​யோகம் குறித்து ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்​டது. குறிப்​பாக, இதற்கு முன் நடந்த கூட்​டங்​களில் அனைத்து வட்​டங்​களி​லும் தேவை​யான தளவாடப் பொருட்​களை மழைக்கு முன்​பாக இருப்பு வைக்க வேண்​டும் என அறி​வுறுத்​திய நிலை​யில், அது சரி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளதா என்​பதை உயர​தி​காரி​கள் கண்​காணித்து அறிக்கை மற்​றும் புகைப்​படங்​கள் அனுப்​ப​வும், வடகிழக்கு பரு​வ​மழை சீரமைப்பு பணி​களை விரைந்து முடித்​து, தயார் நிலை​யில் இருக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டது.…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் சர்​வர் பிரச்​சினை​யால் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பத்​திரப்​ப​திவு நடை​பெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்​களு​டன் காத்​திருந்த பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர். தமிழகம் முழு​வதும் 11 பதிவு மண்​டலங்​களில் 56 பதிவு மாவட்​டங்​களின்​கீழ், 587 பதிவு அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரும் சூழலில், சில நேரங்​களில் சர்​வர் பிரச்​சினை​யால் பதிவுப்​பணி​கள் முடங்​கி, பொது​மக்​கள் பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த சனிக்​கிழமை முதலே பொது​மக்​கள் பதிவு ஆவணங்​கள் உள்​ளீடு செய்​தல் மற்​றும் டோக்​கன் பெறும் போர்ட்​டலில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதனைத் தொடர்ந்து நேற்று திங்​கள்​கிழமை காலை முதலே, சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பதிவுப்​பணி​கள் முடங்​கின. சர்​வர் பிரச்​சினை​யால் ஆவணங்​களை பதிவு செய்ய முடி​யாமல், பதிவு அலு​வலர்​கள் திணறினர். இதனால், காலை முதல் வரிசை​யாக டோக்​கன் அடிப்​படை​யில் காத்​தி ருந்த பொது​மக்​கள் மிகுந்த சிரமத்​துக்​குள்​ளாகினர். இதையடுத்​து, பதிவுத்​துறை தலைமை அலு​வல​கத்​தில் சர்​வரை சரிசெய்​யும் பணி​யில், அதனை பராமரிக்​கும் தனி​யார்…

Read More

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் எந்தவித பயணம் ஏற்படாது என்பதால், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும். மிக முக்கியமாக இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ எடுக்கப்பட…

Read More

சென்னை: அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதனிடையே, கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், “விஜய் அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தமாக வந்துள்ளார். மரக் கிளைகளிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன. தவெக கட்சி நிர்வாகிகள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர். தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார்…

Read More

மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். மதுரையில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என எங்கள் மனுவில் கூறியுள்ளோம். எனவே காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். இதில் இரண்டு நிவாரணங்கள் கேட்டுள்ளோம். கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை நீக்கிவிடுவார்கள், எனவே அதனை பாதுகாக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி…

Read More

தினமும் எந்த சவால்களையும் எதிர்கொள்ளாமல், உங்கள் புரதத் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடியும். பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல் 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது, ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ தேவைகள் உள்ளவர்களுக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது. சிறந்த புரத ஆதாரங்கள் விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து வருகின்றன. விலங்கு சார்ந்த புரத மூலங்களில் மெலிந்த இறைச்சிகள், மீன், கோழி, முட்டை, பால் பொருட்கள் போன்றவை அடங்கும். மறுபுறம், பீன்ஸ், பயறு, டோஃபு, கொட்டைகள் மற்றும் விதைகளில் புரத உள்ளடக்கம் தாவர அடிப்படையிலான புரத மூலங்களாக செயல்படுகிறது. சைவ அல்லது சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் பெற, பல தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். உங்கள் தினசரி புரத உட்கொள்ளலை பல உணவு முழுவதும் விநியோகிக்கும்போது உடல் புரதத்தை சிறப்பாக உறிஞ்சுகிறது, அதற்குப்…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு தர ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உட்பட உயர்கல்விக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ‘சென்டாக்’ மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், சட்டசபையிலும், அரசு விழாக்களிலும் உயர்கல்வியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வித் தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார். இருப்பினும் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து உயர் மற்றும்…

Read More