Author: admin

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று (மே.9) அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” எனத் தெரிவித்துதார். “நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து…

Read More

Last Updated : 09 May, 2025 02:45 PM Published : 09 May 2025 02:45 PM Last Updated : 09 May 2025 02:45 PM அரூர் கோபாலபுரம் சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரனை தடுக்க முயன்ற அதிமுக எம்எல்ஏக்கள்  அரூர்: அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (மே 9) காலை வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோர்…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய், குறிப்பாக ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி), எளிய கொழுப்பு குவிப்பு முதல் ஆல்கஹால் அல்லாத ஆல்கஹால் ஸ்டீடோஹெபடைடிஸ் (நாஷ்) வரை இருக்கும். கொழுப்பு குவிப்பு தொடரும் போது, ​​அது வீக்கம் மற்றும் கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும், இது NAFLD இன் மேம்பட்ட வடிவமான ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் (NASH) க்கு வழிவகுக்கும். இந்த நிலையை இன்னும் தீவிரமாக்குவது என்னவென்றால், கொழுப்பு கல்லீரல் உள்ள பெரும்பாலான மக்கள் எந்த அறிகுறிகளையும் கவனிக்க மாட்டார்கள். 2022 ஸ்வீடிஷ் ஆய்வில், NAFLD உள்ளவர்களில் மிகவும் பொதுவான வகை கல்லீரல் புற்றுநோயான ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (எச்.சி.சி) ஆபத்து பொது மக்களில் மக்களை விட 12.18 மடங்கு அதிகமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. NAFLD உள்ளவர்களுக்கு மற்ற புற்றுநோய்களை உருவாக்கும் 1.22 மடங்கு அதிக ஆபத்து இருந்தது.நாஷ் தீவிரமானது, மேலும் இது அடிப்படை உயிரணு சேதம், கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் அல்லது சிரோசிஸ் ஆகியவற்றை…

Read More

புதுடெல்லி: கடந்த புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இது எப்படி நடத்தப்பட்டது என்று குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இப்போதைய நிலையில் ராணுவ நடவடிக்கையின் முழுமையான விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தி உள்ளார். எனினும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து பாதுகாப்பு துறை சார்ந்த சர்வதேச ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு: கடந்த 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் முப்படை தளபதிகள் விரிவான…

Read More

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களைக் காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை…

Read More

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகிய எரிபொருட்களை வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை என்றும் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் விநியோகச் சங்கிலிகள் சீராக இயங்குகின்றன. மேலும் எரிபொருள் மற்றும் எல்பிஜி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன. பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக இருப்பதன் மூலமும், தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலியைத் தடையின்றிப் பராமரிக்க முடியும், அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்து வருவதால்,…

Read More

பெற்றோருக்கு வரும்போது, ​​எந்த அளவும் பொருந்தாது. இன்று இளம் தம்பதிகள் பெற்றோருக்குரிய தனித்துவமான வழியில் செல்லவும், மற்றவர்கள் வேறு வழியை எடுக்கவும், பெற்றோருக்கு வரும்போது பழைய பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சிந்தனை நம்பிக்கைகள் மற்றும் சிந்தனை நம்பிக்கைகளைப் பின்பற்றவும் தேர்வு செய்யலாம்.உங்கள் பெற்றோரின் பாணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து பெற்றோரும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நன்கு திரும்பிய குழந்தைகளுக்கு ஆண்டு. சத்குருவின் கூற்றுப்படி, உங்கள் வீட்டில் என்ன சமன்பாடு இருந்தாலும், பெற்றோருக்கு வரும்போது எப்போதும் செயல்படும் ஒரு விதி, “அன்பான, ஆதரவான சூழ்நிலையை உருவாக்கி, உங்கள் பிள்ளை வளர சுதந்திரமாக இருக்கட்டும்”. எப்படி என்று பார்ப்போம் …காதல் மற்றும் ஆதரவுசத்குருவின் கூற்றுப்படி, ஒரு பெற்றோர் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவு நிறைந்த சூழலை வழங்குவதாகும். ஒரு குழந்தை பாதுகாப்பாகவும், நேசிக்கப்படுவதாகவும் உணரும்போது உளவுத்துறை மற்றும் படைப்பாற்றல் இயற்கையாகவே செழித்து வளர்கின்றன என்று அவர் விளக்குகிறார். கடுமையான விதிகளை…

Read More

நாசா வெட்டுக்கள்: ‘முழு விளைவுகளை’ பற்றிய பேச்சுக்களில் ESA (புகைப்படம்: AP) குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள அமெரிக்க நிர்வாகம் நாசாவின் வரவுசெலவுத் திட்டத்தில் பில்லியன்கணக்கான வெட்டுக்களை முன்மொழிந்தது, ஆபத்து முக்கிய கூட்டாண்மைகளை ஏற்படுத்தியது, மற்றும் விண்வெளி அமைப்பின் முன்னுரிமைகளை சந்திரனில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு மாற்றியது.இந்த வெட்டுக்களுக்கு எதிர்வினையாற்றிய ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ஈஎஸ்ஏ) இயக்குனர் ஜெனரல் ஜோசப் அஷ்பேச்சர் “விண்வெளி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை” வலியுறுத்தினார்.மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரவிருக்கும் நிதியாண்டில் முன்மொழியப்பட்ட நாசா வரவுசெலவுத் திட்டத்தின் தாக்கத்தை ஈஎஸ்ஏ மதிப்பிடும் என்று ஆஷ்பாச்சர் கூறினார், ஏனெனில் மாற்றங்களின் “முழு விளைவுகளை” பற்றி கேள்விகள் உள்ளன.நாசாவிற்கான நிர்வாகத்தின் பட்ஜெட் திட்டத்தில் ஆர்ட்டெமிஸ் மூன் திட்டத்திற்கான வெட்டுக்கள் அடங்கும், ஏனெனில் அமெரிக்கா செவ்வாய் கிரகத்திற்கான அதன் லட்சியங்களை மாற்றுகிறது, அதன் தேசிய விண்வெளி ஏஜென்சிக்கு வெட்டுவது ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் பணிகளையும் பாதிக்கும் -…

Read More

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் மோதலால் அங்கு வாழும் பாம்புகளும் பாதிக்கப்பட்டு அவைகள் இடம்மாறித் தவிக்கின்றன. பாம்புகளை மீட்கும் பணியில் எஸ்ஒஎஸ் எனும் சர்வதேச அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவு ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் எதிர்பாராத துயரங்களை சந்தித்து வருகின்றன. காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், மனித வாழ்விடங்கள் இயற்கையான வாழ்விடங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது முதல் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான எஸ்ஒஎஸ் வனவிலங்குகளின் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன.. இவற்றில் பெரும்பாலனவை எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வருபவை. இப்படி வரும் பல அழைப்புகளுக்கு எஸ்ஒஎஸ் தொடர்ந்து பதிலளித்து வருகிறது. போர்ச் சூழலால், எல்லைகளில் அதிகரித்து வரும்…

Read More

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 9) தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மே 9) காலை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர…

Read More