திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியும் ஆதரவு தெரிவித்தது. தீர்மானத்தை தாக்கல் செய்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கேரள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வெளிப்படையான முறையில் செய்ய வேண்டும். ஆனால், தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள நினைக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தம், உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாக சந்தேகம் எழுகிறது. தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை அமல்படுத்த, இதுபோல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக சந்தேகம் உள்ளது. பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். பின்னர், எம்எல்ஏ.க்கள் சிலர் கூறிய திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Author: admin
சென்னை: பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலை, வரும் நவ.27-க்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் சங்கமும் கேண்டீனும் தற்போது தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவை அமைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தேர்தல் அதிகாரி மூலமாக தேர்தலை…
சென்னை: சென்னையில் இன்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதேபோல வணிகத் துறை நிறுவனங்கள் பல உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்து வெள்ளி முதலீடு மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு மின்சார பொருட்களின் வடிவமைப்பு பணிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதோடு உலக நாடுகளும் வெள்ளியை அதிகளவில் முதலீடு செய்து வருவதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று…
நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ஒரு குடியிருப்பில் வசிக்கிறீர்களா, ஒரு செல்ல நாயைப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் குடும்பங்களுக்கு ஏற்ற சிறிய, நட்பு இனங்களின் பட்டியலைப் பாருங்கள்.
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் அக்டோபர் 3-ம் தேதி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்காம், நாக்ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானில் அன்டா தொகுதி, ஜார்க்கண்டில் காட்ஷிலா தொகுதி, தெலங்கானாவின் ஜுபிளி ஹில்ஸ் தொகுதி, பஞ்சாபில் தரண் தரண் தொகுதி, மிசோரமில் தம்பா தொகுதி, ஒடிசாவில் நவுபாடா தொகுதி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் கள நிலவரம்: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடத்தி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்…
சென்னை: தமிழகத்தின் 1,069 கி.மீ. நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கடல்சார்வாரியம் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கடல்சார் வாரியத்தின் 97-வது வாரிய கூட்டம், அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய, சிறு துறைமுகங்கள் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப்பெற வழிவகை செய்ய வேண்டும். தமிழகம் தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைக்க மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1,069 கி.மீ., நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச் சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், கடலூர்…
பிக் பிரதர் சீசன் 27 இன் புதிதாக முடிசூட்டப்பட்ட வெற்றியாளரான ஆஷ்லே ஹோலிஸ், ரன்னர்-அப் வின்ஸ் பனாரோவின் நம்பிக்கையற்ற ட்ரோலிங் மூலம் சமூக ஊடகங்களில் அலைகளை உருவாக்கி வருகிறார். அவரது தீர்க்கமான 6-1 என்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆஷ்லே தனது வெற்றியைக் கொண்டாடுவதில் நேரத்தை வீணாக்கவில்லை, வின்ஸ் தனது தகுதியைப் பற்றிய முந்தைய கருத்துக்களுக்கு அழைத்தார்.தொடர்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் கதைகளில், 25 வயதான வின்ஸை மகிழ்ச்சியுடன் கேலி செய்தது, இது 1 வது வாரத்தில் அவளை அகற்றத் தவறியதையும், அடுத்தடுத்த இழப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது பதிவுகள் பிக் பிரதர் ட்விட்டரை (இப்போது எக்ஸ்) ஒரு வெறித்தனத்திற்கு அனுப்பியுள்ளன, ரசிகர்கள் அவரது நுட்பமான ட்ரோலிங்கிற்காக இன்றிரவு விருந்துக்குப் பிறகு.பிக் பிரதர் 27 இறுதி: ஆஷ்லேவின் வெற்றி வின்ஸ்தி பெரிய சகோதரர் 27 ஃபைனல் செப்டம்பர் 28, 2025 அன்று, ஆஷ்லே ஹோலிஸ், மோர்கன் போப் மற்றும் வின்ஸ் பனாரோ ஆகியோருடன் இறுதி…
புதுடெல்லி: ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, பாஜகவுக்கு காங்கிரஸ் 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜகவைச் சேர்ந்த பிந்து மகாதேவ், ராகுல் காந்திக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முதலாவதாக, இது மக்கள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தீட்டப்படும் ஒரு மிகப்பெரிய தீய சதி திட்டமா? இரண்டாவது, மிரட்டல், வன்முறை, கொலை மிரட்டல் வழியான அரசியலை பாஜக ஆதரிக்கிறதா? மூன்றாவது, அரசின் நிர்வாகத்தை விமர்சிக்கும் அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாக்க பாஜக முயல்கிறதா? என்ற 3 கேள்விகளுக்கு விடை காண காங்கிரஸ் விரும்புகிறது. இந்த கொலை மிரட்டல் சட்டத்தின் ஆட்சியின் மீதும், ஜனநாயகத்தின் பாதுகாப்புக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பின மீதும் நடத்தப்பட்ட நேரடி…
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். மேலும், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் மோடி எங்களை இங்கு அனுப்பி வைத்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். இதில் பலர் பேசக்கூட முடியாத அளவுக்கு துக்கத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள். இந்த சம்பவத்தில் எந்த கட்சியையும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்டவும் விரும்பவில்லை. நாட்டில் இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நிகழக் கூடாது. இங்கு பார்த்த விஷயங்களை பிரதமர்…
இலையுதிர் காலம் அதன் தங்க அழகை வயல்களில் பரப்புகையில், நைட் ஸ்கை அதன் மிகவும் வசீகரிக்கும் கண்ணாடிகளில் ஒன்றான அறுவடை நிலவுக்கு தன்னைத் தயாரிக்கிறது. மற்ற முழு நிலவுகளைப் போலல்லாமல், ஹார்வெஸ்ட் மூன் பாரம்பரியம் மற்றும் வானியல் இரண்டிலும் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது, இது செப்டம்பர் ஈக்வினாக்ஸுக்கு மிக அருகில் உள்ளது. அதன் பளபளப்பு நீண்ட காலமாக விவசாயிகளுக்கு வழிகாட்டியுள்ளது, ஒரு முறை அறுவடை நேரங்களை அதன் வெளிச்சத்தின் கீழ் நீட்டிக்கிறது, அதே நேரத்தில் கலாச்சாரங்கள் முழுவதும் புராணங்களையும் கதைகளையும் ஊக்குவிக்கிறது. அக்டோபர் 2025 இல், இந்த அரிய வான நிகழ்வு மீண்டும் ஒரு முறை பிரகாசிக்கும், வழக்கத்தை விட பின்னர், எப்போதாவது மட்டுமே நிகழும் ஒரு சிறப்பு தருணத்தைக் குறிக்கிறது. ஸ்கைவாட்சர்களைப் பொறுத்தவரை, அறுவடை நிலவு வானத்தில் ஒரு பிரகாசமான வட்டு விட அதிகம் – இது பூமியின் மாறிவரும் பருவங்களுக்கும் அகிலத்தின் நிலையான சுழற்சிகளுக்கும் இடையிலான காலமற்ற…
