புதுடெல்லி: இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூடான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இது பூடானுடனான முதல் ரயில் இணைப்புத் திட்டமாகும். பூடான் வெளியுறவுச் செயலாளரின் வருகையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியாகும். இப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு சிறந்த பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பூடான் அரசாங்கத் தால் சாம்ட்சே ஒரு தொழில்துறை நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. பூடான் மன்னர் மற்றும் பிரதமர் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி…
Author: admin
சென்னை: மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலேயே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?. இந்த வெட்கக்கேடான நிலைக்கு முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு…
இதய புற்றுநோய் என்பது ஒரு அரிய மற்றும் தீவிரமான நிலை, இதில் அசாதாரண செல்கள் இதயத்தில் அல்லது அதற்கு அருகில் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து, ஒரு கட்டியை உருவாக்குகின்றன. நுரையீரல், மார்பகம் அல்லது பெருங்குடலை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களைப் போலல்லாமல், இதயக் குறைபாடுகள் மிகவும் அசாதாரணமானது, நோயறிதல் மற்றும் சிகிச்சையை சவாலாக ஆக்குகிறது. இதய புற்றுநோய் முதன்மையானது, இதயத்திலேயே உருவாகிறது, பெரும்பாலும் சர்கோமா, அல்லது இரண்டாம் நிலை, நுரையீரல், மார்பகம் அல்லது சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்புகளிலிருந்து பரவுகிறது. அறிகுறிகளில் மூச்சுத் திணறல், மார்பு வலி, அரித்மியா, சோர்வு, மயக்கம் அல்லது இதயத்தை சுற்றி திரவ கட்டமைத்தல் ஆகியவை அடங்கும். கீமோதெரபி, கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் கட்டிகளை சுருக்கவும் அறிகுறிகளைப் போக்கவும் உதவும் என்றாலும், தற்போது உறுதியான சிகிச்சை இல்லை. இந்த அரிய நிலையை திறம்பட நிர்வகிக்க ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிறப்பு கவனிப்பு முக்கியமானது.முதன்மை இருதய சர்கோமாக்களின்…
புதுடெல்லி: நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரியவந்த விவரம் வருமாறு: நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5.34 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உயர் நீதிமன்றங்களில் 63.8 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 88,251 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவ்வாறு வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு 15 வகையான காரணங்கள் இருப்பதாக தேசிய நீதித்துறை புள்ளி விவரம் (என்ஜேடிஜி) தெரிவிக்கிறது. இதில், வழக்கறிஞர் இல்லாததால் 62 லட்சம், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தலைமறைவானதால் 35 லட்சம், சாட்சிகள் இல்லாததால் 27 லட்சம், மேல் நீதிமன்றங்கள் விதித்த இடைக்காலதடை காரணமாக 23 லட்சம், ஆவணங்களுக்காக காத்திருப்பதால் 14 லட்சம், மனுதாரர்கள் ஆர்வம் காட்டாததால் 8 லட்சம் என 1.78 கோடி…
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து அக்.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். தாம்பரம் – செங்கோட்டை தாம்பரத்தில் இருந்து இன்று (30-ம் தேதி) மாலை 4.15 மணிக்கு முன்பதிவில்லா அதிவிரைவு சிறப்பு ரயில் (06013) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து…
சோப்பு உன்னதமான தேர்வு. எங்கள் டாடி-நானி கடந்து சென்ற வேம் மற்றும் சந்தன மரக் கம்பிகளிலிருந்து நவீன கிளிசரின்-செறிவூட்டப்பட்ட வகைகள் வரை, சோப்புகள் தலைமுறைகளாக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. அவை எளிமையானவை, நீண்ட காலம் நீடிக்கும், பயன்படுத்த எளிதானவை.பெரும்பாலான பார் சோப்புகள் தோலில் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை உடைப்பதன் மூலம் வேலை செய்கின்றன. பல சர்பாக்டான்ட்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு முகவர்களால் தயாரிக்கப்படுகின்றன, அவை தண்ணீரில் கலக்கும்போது அசுத்தங்களை உயர்த்துகின்றன. பாரம்பரிய சோப்புகள் பெரும்பாலும் அதிக pH ஐக் கொண்டுள்ளன, இது சில நேரங்களில் சருமத்தை இறுக்கமாக அல்லது உலர்ந்ததாக உணரக்கூடும். ஆனால் நவீன சூத்திரங்கள் – கிளிசரின் அடிப்படையிலான, ஈரப்பதமூட்டும் பார்கள் அல்லது கையால் செய்யப்பட்ட ஆர்கானிக் சோப்புகள் மிகவும் மென்மையானவை மற்றும் பெரும்பாலும் ஊட்டமளிக்கும் எண்ணெய்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றால் உட்செலுத்தப்படுகின்றன.மற்றொரு பெரிய பிளஸ் என்னவென்றால், உடல் கழுவுவதை விட சோப்புகள் நீண்ட காலம் நீடிக்கும்.…
புதுடெல்லி: “கோயில்கள் முன்பாக இந்து அல்லாதோர் பிரசாதப் பொருட்கள் விற்றால் அவர்களை உதைக்கலாம்” என முன்னாள் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா தாக்கூர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ம.பி.யின் தலைநகரான போபாலின் முன்னாள் பாஜக எம்.பி.யாக இருந்தவர் துறவி பிரக்யா சிங் தாக்கூர். இவர், நேற்று முன்தினம் போபாலின் ஒரு நவராத்ரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். இது, பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினரான பெண் துறவி பிரக்யா, முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்து அல்லாதவர்கள் கோயில்களின் முன்பாக பிரசாதங்களை விற்றால் அவர்களை தாக்கலாம் என்றும், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார். போபாலின் சோலா பகுதியில் நடந்த துர்கா வாஹினி பகுதி நவராத்ரி பெண்கள் விழாவில் முன்னாள் எம்பி பிரக்யா தாக்கூர் பேசியதாவது: பிற எந்த…
கிறிஸ் வோக்ஸ் எங்கள் ஆஷஸ் தொடருக்கான திட்டத்திலேயே இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராபர்ட் கீ தெரிவித்ததையடுத்து மனமுடைந்த கிறிஸ் வோக்ஸ் தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அனைத்து 3 வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக ஆடியவர் கிறிஸ் வோக்ஸ், கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கை உடைந்த நிலையிலும் மட்டையைத் தூக்கிக் கொண்டு ட்ரா செய்யும் போராட்டத்தில் களமிறங்கி தன் தைரியத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தியவரை ராபர்ட் கீ ஏதோ ஒரு விதத்தில் அவமதித்து விட்டதாகவே இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. இப்படித்தான் பாவம்! பென் ஃபோக்ஸ் என்ற விக்கெட் கீப்பர் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து இங்கிலாந்துக்காக துணைக்கண்ட பிட்ச்களில் ஆடினார். அவரையும் பாஸ்பால் நெட்வொர்க் இப்படித்தான் அவமதித்தது. இப்போது கிறிஸ் வோக்ஸ். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இப்படித்தான் கறிவேப்பிலையாக வீரர்களைப் பயன்படுத்தும் என்பது அந்தக்காலத்திலிருந்தே தடம் காணக்கூடிய ஒன்றுதான்.…
சென்னை: நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள், உரிமம் பெற்ற மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் என அனைத்தும் அன்று மூடப்பட வேண்டும். இந்த அறிவிப்பை மீறி மது விற்றால், மது விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் செயற்கை நுண்ணறிவின் (AI) முன்னேற்றம் நாம் பணிபுரியும் முறையையும் பணியிடத்தையும் கடுமையான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) இதற்கு ஒரு சான்றாகத் தெரிகிறது. ஆகஸ்டில், டி.சி.எஸ் ஒரு பொது அறிக்கையில் 12,000 ஊழியர்களை விட்டுவிட்டதாக உறுதிப்படுத்தியது. இந்த செய்தி தொழில்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் விரைவில், பணிநீக்கங்களின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று ஊகங்கள் ஆன்லைனில் இருந்தன.சமூக ஊடக சலசலப்பு மற்றும் பணியாளர் உரிமைகோரல்கள்எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல், சோஹாம் சர்க்கார் என்ற பயனர் கூறினார் -15 ஆண்டுகளாக டி.சி.எஸ் உடன் பணிபுரிந்த ஒரு நெருங்கிய நண்பரைக் கண்டுபிடித்தார் -கிட்டத்தட்ட 80,000 ஊழியர்கள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவரது இடுகையின்படி, சில ஊழியர்கள் 18 மாதங்கள் வரை பிரித்தல் ஊதியத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது, மற்றவர்கள் கணிசமாகக் குறைவாகவே இருந்தனர்…
