இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களுக்காக நிகழ்த்திய பிரதமர் மோடி உரையின் முக்கியத் தெறிப்புகள் இங்கே… > “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது. > இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின. நாங்கள் பயங்கரவாதிகளை மண்ணோடு…
Author: admin
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு நிகழ்த்திய உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டின் ராணுவத் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் இந்தியாவின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய படை வீரர்களுக்கும். நமது உளவுத் துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் சல்யூட் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்தையும், துணிச்சலையும், பராக்கிரமத்தையும் வணங்குகிறேன். நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன். ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில்…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக ஓய்வில்லாமல் ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர். மதுரை சித்திரைத் திருவிழாவை கடந்த காலத்தை காட்டிலும் நடப்பாண்டு சிறப்பாக நடத்துவது, மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருந்தது. ஏனெனில், கடந்த காலத்தில் இந்த விழாவுக்காக பக்தர்கள் அதிகம் கூடும் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வைகை ஆறு, செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, அரசு மீனாட்சிக் கல்லூரி போன்ற இடங்களில் எந்த கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை. அப்படியிருந்தும் கடந்த 3 ஆண்டாக தொடர்ச்சியாக நெரிசலும், ஒரு சில உயிரிப்புகளும் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு தல்லாக்குளத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக வைகை ஆற்று வழியாக பிரம்மாண்ட தூண்கள் அமைத்து மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து…
வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து போரை தவிர்க்கச் செய்தோம். இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் என கருதுகிறேன். சனிக்கிழமை அன்று இதை செய்தோம். இதன் மூலம் அணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை தடுத்து நிறுத்தினோம். அது நடக்காமல் போயிருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த மோசமான மோதலை அமெரிக்கா தவிர்க்க செய்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பாக இந்தியாவுடன் பேசி…
நாங்கள் வயதாகும்போது, நம் தலைமுடியுடன் ஹேர்ஃபால், உடைப்பு, பிளவு முனைகள் போன்ற சிக்கல்களை நாங்கள் அடிக்கடி எதிர்கொள்கிறோம். உங்கள் தலைமுடியின் தரமும் மரபணுவாக இருக்கலாம், அவற்றை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதும் பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் ஒருவர் அவர்களின் தலைமுடியை மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, நீங்கள் தினமும் பயோட்டின் (வைட்டமின் பி 7) க்கு 30 முதல் 100 மைக்ரோகிராம் (எம்.சி.ஜி) உட்கொள்ள வேண்டும், இது ஆரோக்கியமான கூந்தலுக்கு காரணமாகும். முடி வளர்ச்சிக்கு பயோட்டின் நிறைந்த 5 உணவுகள் இங்கே …
நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு தான் ‘ஜேஇஇ’ எனும் ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்’. மத்திய கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட என்டிஏ எனும் தேசிய தேர்வு முகமை, கடந்த 2019ம் ஆண்டு முதல் தேர்வை நடத்தி வருகிறது. ஜேஇஇ-யில் மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என 2 கட்ட தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியும். என்ஐடி, ஐஐடி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்தத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். என்.ஐ.டி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ மெயின் அடிப்படையிலும், ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ அட்வான்ஸ் டு தேர்வு அடிப்படையிலும் மாணவர்…
‘மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாமல் போகலாம்’ என கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலி பேசி இருந்தார். 36 வயதினிலே இப்போது ஓய்வை அறிவித்துவிட்டார். அவருக்கு உலக கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகளை போற்றி வருகின்றனர். நெருக்கடியான தருணத்திலும் சவாலான சூழலிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து அணியை காத்தவர் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் குறித்து பார்ப்போம். மைல்கல் சாதனைகளுக்காக விளையாடாதவர் கோலி. அதுவொரு சிறந்த உதாரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மொத்த ரன்கள். 210 டெஸ்ட் இன்னிங்ஸில் 9,230 ரன்களை எடுத்துள்ளார். மைல்கல் சாதனைக்காக விளையாடுபவர் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 இலக்க ரன்களோடு ஓய்வு பெற்றிருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. கிரிக்கெட் உலகத்தின் Fab 4-களில் ஒருவரான கோலி இப்போது…
புதுடெல்லி: ஊடுருவலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை இந்தியா கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் டிஜிஎம்ஓ பேச்சுவார்த்தையின்போது இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMOs) இடையே இன்று மாலை ஹாட்லைன் மூலம் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் நடந்த ராணுவ மோதல் நிறுத்தப்பட்டதை அடுத்து, முதல்முறையாக இந்த உரையாடல் நிகழ்ந்தது. கடந்த 10-ம் தேதி பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ, இந்தியாவின் டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு ராணுவ மோதலை நிறுத்திக்கொள்ள கோரியதை ஏற்று இந்தியா அதற்கு ஒப்புதல் அளித்தது. 10-ம் தேதி மாலை 5 மணியோடு இரு தரப்பும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், அன்று இரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. எனினும், 11-ம் தேதி காலை முதல் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடந்த 10-ம் தேதி…
கல்வி என்பது உண்மையான மூலங்களிலிருந்து கற்றுக் கொள்வதாகும். இதன் மூலம், தவறுகள் இல்லாத அறிவைக் குறைத்து, குறிப்பிட்ட தலைப்பு அல்லது துறையைப் பற்றிய அறிவியல் புரிதலை அதிகரிக்க முடியும். உலகிலும் இந்தியாவில் உள்ள தற்போதைய சூழ்நிலை, கற்றலுக்கு சிறந்த வாய்ப்பையும், எல்லையையும் வழங்குகிறது. பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் (எந்தப் பிரிவிலும் +2 தேர்ச்சி) போன்ற படிப்பைத் தேர்ந்தெடுப் பதன் மூலம், மாணவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், தொழில் முனைவோராகவும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை ஆராய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த ஓர் ஊடக தளத்திலும் உள்ளடக்கம் (content) தான் ஆட்சி செய்கிறது. சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையானது உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு தேவையான குணங்கள் ஆகும். வழக்கத்துக்கு மாறான வழியில் சிந்திக்க வேண்டும் என்பது ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மாணவர்களுக்கு கட்டாயமாகும். பத்திரிகை, விளம்பரத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி, திரைப்படம், இணையதளங்கள், வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ், அனிமேஷன், ஓடிடி…
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. இந்நிலையில், அவருக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாட உள்ள வீரர் யார் என்பதை பார்ப்போம். மொத்தம் 210 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி உள்ளார் கோலி. அதில் 160 இன்னிங்ஸில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடி உள்ளார். அந்த இடத்தில் மட்டும் 7,564 ரன்களை கோலி எடுத்துள்ளார். ஆதலால் கோலி விட்டு செல்லும் இந்த இடத்தை நிரப்பும் வீரருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்கும். அதை சமாளிக்கும் திறனும் அந்த வீரருக்கு அவசியம். கே.எல்.ராகுல்: அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரில் மாறி மாறி ஆடி வருபவர் கே.எல்.ராகுல். டாப் ஆர்டர் முதல் லோயர் மிடில் ஆர்டர் வரை அணியின் தேவைக்கு ஏற்ப ஆடக் கூடியவர். அந்த வகையில் ‘நம்பர் 4’ பேட்ஸ்மேனாக ராகுல் கச்சிதமாக பொருந்தி விடுவார். சர்பராஸ் கான்: இந்திய டெஸ்ட் அணியில்…