ஜெனீவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது. இதன்பிறகு இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரி விகிதங்களை அதிகரித்தன. இறுதியில் சீன பொருட்களுக்கு 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. சீன அரசு சார்பில் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்து வந்தது. இதன்காரணமாக சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா,…
Author: admin
இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், ‘தி இந்து’ நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பான் இந்தியா திரைப்படங்கள் மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “பான்-இந்தியா’ என்ற சொல் ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களைக் குறிக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த போக்கு அதிகரித்துவிட்டது. அடுத்து, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ போன்ற படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றி, பான் இந்தியா விநியோகத்தை மேலும் அதிகரித்தன. இது இன்னும் அதிகரிக்கும். ஒரு, பான் இந்தியா திரைப்படம் 3 முதல் 4 வருடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல பேர் அந்தப் படத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் படத்தைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், தயாரிப்பாளரின் முழு பணமும் படத்துக்குச் செல்வதில்லை. அர்த்தமற்ற…
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி வந்தார். நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலான குஞ்சப்பனை பகுதியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமையில் வழியெங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேரிங்கிராஸ் பகுதியில் நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு முதல்வர் வந்தார். அவருடன்…
புதுடெல்லி: தஹாவூர் ராணா, சோட்டா ராஜன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள திஹார் சிறை 1958-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 9 சிறை வளாகங்கள் உள்ளன. இது நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா, மும்பை தாதா சோட்டா ராஜன் மற்றும் நீரஜ் பவானா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், திஹார் சிறை வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் மற்றும் ரவுடி கும்பல் தலைவன் உட்பட தீவிரமான குற்றப் பின்னணி கொண்ட கைதிகள் 24 மணி…
சென்னை: அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிபிஏஎல்எல் (ஆனர்ஸ்) பிகாம்எல்எல்பி (ஆனர்ஸ்), பிஜிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) 5 ஆண்டு கால இளங்கலை சட்டப்படிப்புகளும் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏஎல்எல்பி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில் (2025-2026) இப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 12-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடையும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு சட்டப்படிப்புகளுக்கான கல்வித்தகுதி, ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்வி கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களையும்…
ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்-சீசன் 4’. இந்நிகழ்ச்சியின் இறுதிக் கட்டப் போட்டியான ‘கிராண்ட் பினாலே’ நேற்று முன் தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அங்கிருந்து நேரலையில் ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன், சந்தானம், ஆர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, தினேஷ், அபினேஷ், மகதி என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் மோதினர். முடிவில், இந்த சீசனின் வெற்றியாளராக திவினேஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. முதல் ரன்னராக யோகஸ்ரீ, இரண்டாவது ரன்னராக ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டனர். திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்ற விருதையும் வழங்கி, ஜீ தமிழ் கவுரவித்தது. அர்ச்சனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண், சைந்தவி, ஸ்வேதா மோகன் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மரக்கிளை விழுந்ததில், மூதாட்டிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகில் நேற்று பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தால் குளத்தருகே இருந்த ஆலமரத்தின் நிழலில் அவர்கள் ஓய்வெடுத்தனர். திடீரென ஆலமரத்தின் பெரிய கிளை முறிந்து, மரத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணி (75) மற்றும் வேண்டா (65) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பச்சையம்மாள், கனகா, தேவி, சம்பூர்ணம், பாஞ்சாலை ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த செய்யாறு போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கிரேன் உதவியுடன் ஆலமரத்தின் கிளையை அகற்றி, இடிபாடுகளில் சிக்கியிருந்த அன்னபூரணி, வேண்டா…
மும்பை: ராணுவ அதிகாரியாக இருந்த எனது தந்தையை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்தனர் என்று பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் நினைவுகூர்ந்தார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவத்தின் முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி இன்ஸ்டாகிராமில் நடிகையான நிம்ரத் கவுர் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன் தந்தையான ராணுவ மேஜர் புபேந்தர் சிங் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து நிம்ரத் கவுர் முன்பு அளித்த பேட்டி பற்றி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக நிம்ரத் கவுர் கூறியதாவது: இன்ஜீனியராக இருந்த என் தந்தை, ஜம்முவில் இருக்கும் வேரிநாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். அவர் ஒரு இளம் ராணுவ மேஜர். குடும்பத்துடன் வாழ அந்த இடம் சரியான பகுதி இல்லை என்பதால் எனது தந்தை, எங்களை பாட்டியாலாவில் விட்டுவிட்டு காஷ்மீருக்கு சென்றார். இதனிடையே, 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் தந்தையை பார்க்க காஷ்மீருக்கு சென்றோம். அப்போது…
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 8-ம் தேதி வெளியானது. தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் அவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்கைக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் மே 12-ம் தேதி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் காலை 11 மணியளவில் தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பள்ளியின் அடையாள குறியீடு (சீல்) வைத்து தங்களின் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு வழங்கினர். இதனால்,…
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் வசனக் காட்சிகள் முடிவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் 5 பாடல்கள் உண்டு. அனைத்தும் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளன. ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கி இருக்கிறோம். ஃபேன்டஸியான உலகத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் காட்சி ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்” என்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்…