புதுடெல்லி: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அடுத்த நாள் ஏப்.23-ம் தேதி பிஎஸ்எஃப் வீரர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) காலை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இன்று காலை 10.30…
Author: admin
பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், போட்டித் தேர்வு, ஒரு படிப்பில் சேர்வதற்கான சிறப்புத் தேர்வு எனும்போது அதற்குத் தயாராகத் தொடங்குவது முதல் தேர்வை எதிர்கொண்டு வெற்றி காண்பதுவரை அதிக சவால் நிறைந்த பயணமாகவே இருக்கிறது. வெற்றிக்கான முதலீடு: போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர் ஒருவர், அதற்காக அதிக நேரத்தை முதலில் முதலீடு செய்ய வேண்டி வரும். அதிக உழைப்பும் பயிற்சியும் அவசியம். சுயமாகத் தயாராக முடியாதபட்சத்தில், பயிற்சிக்காகப் பணத்தையும் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்தக் காரணங்களாலும், அதிகப் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதாலும் பள்ளி, கல்லூரித் தேர்வுகளைவிட இது சற்று வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் போட்டித் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அதற்கென நேரமும் உழைப்பும் முதலீடு செய்யப்படும்போது தேர்ச்சி…
அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றுபட்ட நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திச்செல்வன் தான் இருந்தார். ஸ்டாலினின் தீவிர விசுவாசியான இவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாலோ என்னவோ 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக காந்திச்செல்வன் அறிவிக்கப்பட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை மிகச் சீக்கிரமே அப்பொறுப்பில் இருந்தும் காந்திச்செல்வன் நீக்கப்பட்டு அவரது ஆதரவாளரான கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பார்.இளங்கோவன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்கவில்லை. அவரையும் நீக்கிவிட்டு, கிழக்கு…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகால் கெல்லர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவினர் உளவு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்களுக்குச் சில யோசனைகள்: * பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலையும் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பது குறித்த விருப்ப வரிசையையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். * பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும். * அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக்…
“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி, தவெக-வின் எழுச்சி இவற்றோடு அமலாக்கத்துறை, நீதிமன்ற நடவடிக்கைள் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளால் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கடிகளை சமாளித்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தமாகி வருகிறது திமுக தலைமை. தேர்தலுக்கான ஸ்டாலினின் ஆக் ஷன் பிளான் குறித்து பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், “உளவுத்துறை கொடுக்கும் சர்வேயும் சபரீசனின் ‘பென் டீம்’ தரும் சர்வே ரிப்போர்ட்டும் உடனுக்குடன் ஸ்டாலினின் தனிப்பட்ட பார்வைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதை கிராஸ் செக் செய்வதற்காக…
நாட்டின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஒரு வினோதமான மற்றும் பயமுறுத்தும் விபத்து நடந்தது, குளியலறையில் ஒரு வழக்கமான வருகை ஒரு இளைஞருக்கு ஒரு கனவாக மாறியது, அவரது வீட்டின் கழிப்பறை வெடித்ததால் சில கடுமையான காயங்களுக்கு ஆளானது!அஷுவின் தந்தை சுனில் பிரதன், பயங்கரமான தருணத்தை விவரித்தார், “குண்டுவெடிப்பு அஷுவை அவரது முகத்திலும் உடலுக்கும் கடுமையான தீக்காயங்களுடன் விட்டுச் சென்றது. அவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (ஜி.ஐ.எம்.எஸ்) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் 35% தீக்காயங்களுக்கு ஆளானதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர், ”என்று ஒரு TOI அறிக்கை தெரிவித்துள்ளது.முக்கியமாக, அந்த நேரத்தில் அஷு எந்த மொபைல் போன் அல்லது எலக்ட்ரானிக் கேஜெட்டையும் பயன்படுத்தவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார், கேஜெட் வெடிப்புகள் போன்ற சில பொதுவான கோட்பாடுகளை நிராகரித்தார்.இது ஒரு வினோதமான செய்தி நெடுவரிசையில் இருந்து ஏதோவொன்றாகத் தோன்றினாலும், இந்த வகையான விபத்து உண்மையில் எங்கும் நடக்கக்கூடும், குறிப்பாக வயதான…
கடந்த நூற்றாண்டில் அல்லது அதற்கு மேலாக, இயேசுவின் செயின்ட் தெரசாவின் முதல் முறையாக இது இருந்தது -மகத்தான முறையில் அவிலாவின் செயின்ட் தெரசா என்று குறிப்பிடப்படுகிறது – மக்கள் பார்க்க காட்சிப்படுத்தப்படுகிறார்கள். ஸ்பெயினின் சலமன்கா மாகாணத்தில் உள்ள ஆல்பா டி டோர்ம்ஸில் அமைந்துள்ள எங்கள் லேடி ஆஃப் மவுண்ட் கார்மலின் அறிவிப்பின் பசிலிக்காவில் நடந்த விழா, இதன் பக்தர்களுக்கு ஒரு புகழ்பெற்ற தருணத்தைக் கொண்டு வந்தது கத்தோலிக்க செயிண்ட். 1914 முதல், புனிதரின் அத்தகைய வெளிப்பாடு கடந்த பொதுமக்களுக்கு கடைசியாக செய்யப்பட்டது.இந்த சமீபத்திய வளர்ச்சி பொது வணக்கத்தின் புதிய சுழற்சியைத் தொடங்கியது மற்றும் நாடு முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்தது. கூட்டத்தில் பலர் தெளிவாக வென்றனர். சிலர் அமைதியாக ஜெபம் செய்தனர், மற்றவர்கள் மூல உணர்ச்சியை வெளிப்படுத்தினர் – ஒரு பெண் தனது வாயின் மேல் கையை பிரமிப்புடன் வைத்தாள், மற்றொருவர் புனிதரின் உடலைப் பார்த்தவுடன் அழுவதாகத் தோன்றியது.அவிலாவின் நீடித்த மரபு…
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை மாற்ற சீனா முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமை கொண்டாடும் சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப்…
சென்னை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள…