Author: admin

எங்கள் கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், செரிமானம், நச்சுத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற முக்கியமான பணிகளைச் செய்கிறது, இரத்தத்திற்கான வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், சில நேரங்களில் கல்லீரல் பலவீனமாக மாறும், கல்லீரல் சிரோசிஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும், இது முற்போக்கானது, சிகிச்சையளிக்க முடியாதது மற்றும் பெரும்பாலும் ஆபத்தானது. இருப்பினும், கல்லீரல் சேதத்தில் ஆல்கஹால் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், உங்கள் கல்லீரலையும் சேதப்படுத்தும் ஒரு உணவு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது பதப்படுத்தப்பட்ட உணவு. பார்ப்போம்.

Read More

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்தது. அதன்படி, தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிடுகிறார். 10-ம் வகுப்புக்கு காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகளை மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து…

Read More

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நேற்றிரவு மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்களிடமிருந்து விடைபெற்று அழகர்கோவில் மலைக்குப் புறப்பட்டார். இன்று (மே 16) காலை கோயிலை அடைகிறார். மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்க அழகர்கோயிலிருந்து கடந்த மே 10-ம் தேதி மதுரை புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று, அழகர்கோவில் மலைக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். வழிநெடுகிலும் மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்றிரவு 7 மணியளவில் மூன்றுமாவடி சென்றடைந்தார். அங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த…

Read More

ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன்மூலமாக, பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து…

Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், நேற்று காலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரியும் டெல்லி சென்றனர். இது ஆளுநரின் வழக்கமான பயணம் என ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டாலும், பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் அவர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பயணத்தை முடித்து வரும் வரும் 18-ம் தேதி மீண்டும்…

Read More

புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. ‘மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக…

Read More

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப்-2 மெயின் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. குருப்-2 பணிகளுக்கான மெயின் தேர்வு, கடந்த பிப்ரவரி 8 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற்றது. பவ்வேறு பதவிகளில் 537 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய அத்தேர்வை 5,553 பேர் எழுதினர். இந்நிலையில், மெயின் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிட்டது. தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களின் மதிப்பெண், தரவரிசையை தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். குருப்-2 ஏ சான்றிதழ் சரிபார்ப்பு: இதனிடையே, கடந்த மே 5-ம் தேதி வெளியிடப்பட்ட குருப்-2-ஏ மெயின் தேர்வு முடிவின்படி, கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலையும் டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை மே 16 முதல் 25-ம் தேதி வரை தேர்வாணையத்தின்…

Read More

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ‘அம்மன் சிரசு ஊர்வலம்’ நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி 1-ம் தேதி சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சிரசு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் தேர்த்திருவிழாவும் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய விழாவான சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு பிச்சனூர்பேட்டை, நடுப்பேட்டை பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை, பட்டுப்புடவை ஆகியவை கொண்டு வரப்பட்டு தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை, அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில்…

Read More

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்கேஜி,யூகேஜி விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. எனவே மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.…

Read More

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 7 செ.மீ., காரைக்காலில் 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, சேலம் மாவட்டம் சங்ககிரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

Read More