Author: admin

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் – ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வைத்து சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியை 19-21, 21-16, 21-18 என்ற கணக்கில் ஷாட்விக் – ஷிராக் இணைந்து வீழ்த்தினர். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம்…

Read More

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு இந்தச் சம்பவம் மேலும் சாட்சியாக உள்ளது. அண்மையில், தெற்கு கரோலினாவிலுள்ள லிட்டில் ரிவரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் காயமடைந்த நிலையில், இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு கரோலினா துப்பாக்கிச்சூடு சம்பவம், ஒரு தனித்தச் சம்பவம் என்று போலீஸார் கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில் 15 அமெரிக்கர்களில் ஒருவர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில்…

Read More

சென்னை: “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும், வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read More

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 30) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று (மே 28) காலை ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…

Read More

கிராமப்புற வீட்டுமனை வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு குறைந்த கட்டிடத் தொழில் நுட்பங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் பத்மஜா மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினர், ஆரோவில் அறக்கட்டளையை சந்தித்தனர். ஆரோவில்லில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவு மற்றும் புதுமையான மேற்கூரை மற்றும் சுவர் அமைப்புப் பொருட்களை நேரில் பார்வை யிட்டனர். இந்தக் குழுவில் ஏடிடிசி உறுப்பினர் சிந்து ஜா, ஏடிஎஸ்சி உறுப்பினர் அந்திம் மற்றும் ஆரோவில்லே அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர் ஸ்ரீ கோஷி வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். கனரக கான்கிரீட் இல்லாமல், இயற்கை மற்றும் நிலைக் கருவியான பொருட்களைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று மாடி கட்டமைப்புகளை எழுப்பும் தனித்துவமான கட்டுமான முறைகளை இக்குழுவினர் பார்வையிட்டனர். அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் (CSR) அழுத்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட மண் செங்கற்கள் (CSEB), எஃப்.சி சேனல் மேற்கூரை அமைப்புகள், நிலையான கட்டுமான முறைகளால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், சூறாவளியினால் வீழ்ந்த மரங்களை…

Read More

மக்களுக்கு மிகவும் தொடுகின்ற நம்பிக்கைகளில் ஒன்று என்னவென்றால், ராத்காவில் கிருஷ்ணரைப் பார்க்க ராதா ராணி சென்றபோது, ​​அவர்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தில் பல மாத மகிழ்ச்சியைக் கழித்தனர். ஆனால், அவர் மீதான ஆன்மீக மற்றும் தெய்வீக அன்பு மிகவும் ஆழமானது என்பதை அவள் உணர்ந்தபோது, ​​அவள் காட்டுக்குள் பின்வாங்க முடிவு செய்தாள், அவனுடன் இருப்பதற்குப் பதிலாக, அவனை நினைவில் வைத்துக் கொண்டாள். மேலதிக நேரம், அவள் வயதாகிவிட்டதால், ராதா தனது மரணக் கட்டிலில் இருப்பதை அறிந்த கிருஷ்ணர், கடைசியாக ஒரு முறை அவளைப் பார்க்கச் சென்று, அவளுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அமைதியாக படுத்துக் கொண்ட ராதா, கிருஷ்ணரை அவளுக்காக தனது புல்லாங்குழல் விளையாடும்படி கேட்டார், அவள் கடைசியாக சுவாசிக்கும் வரை அவன் அவ்வாறு செய்தான்.

Read More

ஒரு புதிய ஆய்வில் தென்னாப்பிரிக்காவில் நிலம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது, மேலும் காரணம் முன்பு நினைத்ததை விட ஆபத்தானது. 2012 மற்றும் 2020 க்கு இடையில், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 மில்லிமீட்டர் அல்லது கிட்டத்தட்ட 2 மில்லிமீட்டர் முன்னேற்றத்தை பதிவு செய்தனர். புவியியல் செயல்பாடு அல்லது மேன்டில் ஓட்டம் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னர் நம்பினாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் வறட்சி மற்றும் நீர் இழப்பு உண்மையான குற்றவாளிகளாக இருக்கலாம் என்று கூறுகின்றன. நீர் நிலைகள் குறையும் போது, ​​பூமியின் மேலோடு ஒரு மேல்நோக்கி மீளுருவாக்கம் செய்கிறது, காலநிலை மாற்றம், நீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான மற்றும் சிக்கலான உறவைக் குறிக்கிறது.டெக்டோனிக் தகடுகள் இல்லை, ஆனால் நீர் மறைந்து போவது முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறதுமுன்னதாக, தென்னாப்பிரிக்காவில் உயரும் நிலம் நில அதிர்வு அல்லது எரிமலை நடவடிக்கைகள் காரணமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கருதினர், குறிப்பாக குவாத்த்லம்பா…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (பட கடன்: ஆபி) ஜனாதிபதி பிரச்சாரத்தின்போது ஜனநாயகக் கட்சி சட்டவிரோத அரசியல் நன்கொடைகளை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் முரண்பாடாக, அவரது குடியரசுக் கட்சி பல ஆதாரங்களிலிருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது என்று ஆபி கூறினார்.கடந்த மாதம், ட்ரம்ப் நீதித்துறையை ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய ஆன்லைன் நிதி திரட்டும் தளமான ஆக்ட்ப்ளூவை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். சட்டவிரோத நன்கொடைகளை அனுப்ப வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.எவ்வாறாயினும், அநாமதேய நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்கள் உட்பட – தனது சொந்த அரசியல் குழுக்களுக்கும் டஜன் கணக்கான முறையற்ற நன்கொடைகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிடவில்லை.டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் பல வழிகளில் குறைபாடுடையது, மேலும் அவர் ஏபி அறிவித்தபடி, ஒருமனதாக நன்கொடைகளைப் பெற்றார். ‘ரஷ்யாவின் மோசமான நாட்கள்…’: புதிய உக்ரைன் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு டிரம்ப் புடினுக்கு அசாதாரண…

Read More

புதுடெல்லி: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்த் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிஐஐ (CII) வணிக உச்சி மாநாட்டில் இன்று (மே 29) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசு தனது உத்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் நம்முடைய மக்கள். நமது குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன். இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அந்த நமது சகோதரர்கள் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்கு திரும்புவார்கள் என்று நாங்கள் முழு…

Read More

சென்னை: இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவு தொடர்பான பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.அம்பலவாணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியில் பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் சேரலாம். மொத்தம் 2 செமஸ்டர்கள். தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இது அருமையான படிப்பு. வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன.…

Read More