Author: admin

குன்னூர்: நீல​கிரி மாவட்​டத்​தில் கோடை விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான காய்​கறி கண்​காட்​சி, மலர்கள் கண்​காட்​சி, ரோஜா கண்​காட்சி மற்​றும் பழக்​கண்​காட்சி ஆகியவை நிறைவு பெற்​றுள்ளன. இந்​நிலை​யில், இறுதி நிகழ்ச்​சி​யாக குன்​னூர் காட்​டேரி பூங்​கா​வில் இந்த ஆண்டு முதல்​முறை​யாக மலைப் பயிர்​கள் கண்​காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்​ளது. இது தொடர்​பாக தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மலைப் பயிர்​கள் கண்​காட்​சிக்​காக, காட்​டேரி பூங்​காவில் இரண்டு லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இது மட்​டுமில்​லாமல் ஆயிரக்​கணக்​கான தொட்​டிகளில் பல்​வேறு வகை​யான மலர்​கள் காட்​சிப்​படுத்​தப்பட உள்​ளன. மேலும், பனை, கோகோ, இளநீர் வைத்து பனை குடிசை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேயிலை, காபி, ரப்​பர், வெற்​றிலை, பாக்கு உட்பட 10 வகை​யான மலைப் பயிர்​களைக் கொண்​டு, பல்​வேறு வடிவ​மைப்​பு​கள் வைக்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Read More

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றில் ஒரு பங்குதான் மின் உற்பத்தி நடந்து வருகிறது. தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் உற்பத்தி குறைக்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 840 மெகா வாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகா வாட் மின்சாரமும் என மொத்தமாக…

Read More

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அலிப்​பூர்​து​வார் மற்​றும் கூச்​பெஹார் மாவட்​டங்​களில் ரூ.1,010 கோடி மதிப்​பிலான எரி​வாயு விநி​யோக திட்​டத்​துக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: அண்​மை​யில் மேற்​கு​வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத், மால்​டா​வில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின. அப்​பகுதி பொது​மக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. அவர்​களின் சொத்​துகள் சூறை​யாடப்​பட்​டன. அவர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. திரிண​மூல் காங்​கிரஸ் கொடுங்​கோல் ஆட்​சியை நடத்தி வரு​கிறது. இந்த ஆட்​சி​யில் அப்​பாவி மக்​களுக்கு அநீதி இழைக்​கப்​படு​கிறது.அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்​தில் மிகப்​பெரிய மோசடி நடை​பெற்று இருக்​கிறது. இந்த விவ​காரத்​தில் ஏராள​மான ஆசிரியர்​கள் வேலை​யிழந்து உள்​ளனர். மாநிலத்​தின் கல்​வித் துறை முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்​கிறது. சட்​டம், ஒழுங்கு சீர்​குலைவு: மேற்​கு​வங்​கத்​தில் பல்​வேறு பிரச்​சினை​கள் பூதாகர​மாகி வரு​கின்​றன. குறிப்​பாக மாநிலம் முழு​வதும்…

Read More

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் 1.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 98,263 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 57,093 மாணவர்கள் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனிடையே, விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 27-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…

Read More

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட் செய்தபோது டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “ஐபிஎல் மாதிரியான கிரிக்கெட் தொடரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நடுவர்களின் வசம் இருந்தும், இது மாதிரியான தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நடக்கக் கூடாது. ஆட்டத்துக்கு பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என அவர் உறுதியாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? – ஜெய்ப்பூரில் நேற்று (மே 24) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸின் 15-வது ஓவரின் கடைசி பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸர்…

Read More

இந்தியர்கள் 3 பேர் ஈரானில் கடத்தப்பட்ட விவகாரத்தையடுத்து, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் உள்ளூர் ஏஜென்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக ஏஜென்ட் உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஈரான் சென்ற இந்த 3 பேரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி பணம் கேட்கிறது. கடத்தப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டு உடலில் காயங்கள் இருக்கும் படங்கள், வீடியோக்கள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடத்தப்பட்டவர்கள் சில நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். கடந்த 11-ம் தேதிக்குப்பின் இவர்கள் தொடர்பில் இல்லை. இந்த விவகாரம் இந்திய தூதரகம் மூலம் ஈரான் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வரும் ஈரான் அரசு, சட்டவிரோத ஏஜென்சிகள்…

Read More

சந்தீப் ரெட்டி வாங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தீபிகா படுகோனை பற்றியது தான் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. நேற்று சில ஊடகங்களில், இப்படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் கண்டிப்பாக ‘ஏ’ சான்றிதழ் தான் எனவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தள பதிவில், “நான் ஒரு நடிகரிடம் கதையைச் சொல்லும்போது, 100 சதவீதம் நம்பிக்கையுடன் அதைச் சொல்கிறேன். எனக்கும் கதையைக் கேட்பவருக்கும் இடையே வெளிப்படையாக சொல்லப்படாத ஓர் உடன்பாடு ஏற்படுகிறது. ஆனால், உங்கள் செயலின் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். எனது கதையை நிரகாரித்தது மட்டுமின்றி ஓர் இளம் சக நடிகரை கீழே…

Read More

விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது வெற்று அரசியல். பொள்ளாச்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கியதற்கு நாங்கள்தான் காரணம் என்று கூறும் திமுக, டாஸ்மாக் மதுவால் ஏற்படும் மரணங்களுக்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்வதில்லை. தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க…

Read More

புதுடெல்லி: உலகளாவிய நிறுவனங்களின் சீனா ப்ளஸ் ஒன் உத்தியால் இந்திய துறைமுகங்கள் அதிக அளவில் நன்மைகளைப் பெறும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூடிஸ் மேலும் கூறியுள்ளதாவது: சீனா ப்ளஸ் ஒன் உத்தியின்படி உலகளாவிய நிறுவனங்கள் சீனாவுக்கு அப்பால் இந்தியாவில் தங்களது உற்பத்தி மையம் மற்றும் விநியோக நெட்வொர்க்குகளை பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால், இந்திய துறைமுகள் பெரிதும் பயனடையக்கூடும். அதேநேரம், சீன துறைமுகங்கள் உடனடி நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க முடிவெடுத்துள்ளதால் இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் துறைமுகங்களின் செயல்பாடுகளும் பெரிய அளவில் விரிவடையும். சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தால் வளரும் நாடுகளின் சந்தைகளில் அழுத்தத்தம் ஏற்பட்டதை உணர முடிந்தது. இந்தியாவின் மாறுபட்ட ஏற்றுமதி துறைகள் மற்றும் வலுவான உள்நாட்டு சந்தை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க வரிகளால் ஏற்படும் தாக்கம் மிக குறைவாகவே…

Read More

அட்டவணைகள் முன்னெப்போதையும் விட நிரம்பியுள்ளன, ஒரு வொர்க்அவுட்டில் அழுத்துவது ஒரு ஆடம்பரமாக உணர முடியும். நிச்சயமாக, நாம் அனைவரும் ஒரே நாளில் 24 மணிநேரத்தைப் பெறுகிறோம்-ஆனால் பயணங்கள், கூட்டங்கள் மற்றும் முடிவில்லாத செய்ய வேண்டிய பட்டியல்களுக்கு இடையில், ஜிம்மிற்கு உண்மையில் யாருக்கு நேரம் இருக்கிறது?நடைபாதையைத் துடிப்பது உங்கள் விஷயம் அல்ல என்றால், வீட்டு உடற்பயிற்சிகளும் இன்னும் பூட்டுதல்-கால அச்சத்தை மீண்டும் கொண்டு வந்தால், நாசா உங்கள் கார்டியோ துயரங்களுக்கு பதிலைக் கொண்டிருக்கலாம்.மீண்டும்.நாசா ஆராய்ச்சி, ஒரு மினி-ட்ராம்போலைனில் நிகழ்த்தப்படும் ஏரோபிக் உடற்பயிற்சியின் ஒரு வடிவம் 10 நிமிடங்கள் மீண்டும் வருவதைக் காட்டுகிறது-30 நிமிட ஜாகிங்கை விட 68% வரை அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும். அது சரி: குறுகிய, சிறந்த உடற்பயிற்சிகளும் உங்கள் புதிய பயணமாக இருக்கலாம், இது சுற்றுப்பாதையில் மற்றும் பூமியில் இங்கேயே.ஜாகிங் போலல்லாமல், மீளுருவாக்கம் முழு உடலிலும் தாக்கத்தை விநியோகிக்கிறது, அதாவது உங்கள் மூட்டுகளில் குறைந்த சிரமம். ஆயினும்கூட அது…

Read More