மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, “பொன்வசந்தின் கட்சிப் பணியால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் இந்திராணி மேயரானார். தற்போது மாநகராட்சி நிர்வாகத்தில் தலையீடு, கட்சி செயல்பாடுகளில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பொன்வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது மனைவி இந்திராணி, மேயர் பதவியில் வழக்கம்போல செயல்பட முடியாத சூழல் உள்ளது. மேயர் பதவி குறித்து திமுக என்ன நிலைப்பாட்டை எடுக்க உள்ளது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை பொன்வசந்த் கட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில்…
Author: admin
Last Updated : 20 May, 2025 05:50 PM Published : 20 May 2025 05:50 PM Last Updated : 20 May 2025 05:50 PM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
ஒரு நாள்பட்ட, மீளமுடியாத மற்றும் வாழ்நாள் முழுவதும், நீரிழிவு உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது – இந்த நிலை உள்ளவர்களுக்கு, இது வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோய். இவை இரண்டும் உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்துகின்றன, ஆனால் இரண்டிற்கும் வெவ்வேறு காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் அபாயங்கள் உள்ளன. இருப்பினும், ஒன்று மற்றொன்றை விட ஆபத்தானதா? பார்ப்போம் …நீரிழிவு நோயைப் புரிந்துகொள்வதுநீரிழிவு ஒரு நாள்பட்ட, வாழ்நாள் முழுவதும் மற்றும் மீளமுடியாத நிலை, அங்கு உடல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் இன்சுலின் திறம்பட பயன்படுத்தாதபோது இது நிகழ்கிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில், தனிநபர் தனது/அவள் குளுக்கோஸை மருந்து, இன்சுலின் மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் நிர்வகிக்க வேண்டும்.வகை 1 நீரிழிவு நோய் என்றால் என்ன?வகை 1 நீரிழிவு ஒரு தன்னுடல் தாக்க நோய். இந்த…
பெங்களூரு: சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசும்போது, “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்”என குறிப்பிட்டார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது:கன்னட மொழி மீதும் பெங்களூரு மாநகரின் மீதும் கமல்ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறார். நான் அவருடைய பெரிய ரசிகன். இந்தவிவகாரம் குறித்து 100 சதவீதம் உரிய விளக்கத்தை கொடுப்பார். கன்னட மொழியின் மீதான பாசம் என்பது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் கன்னடத்தை நேசிக்க வேண்டும். கேமரா முன்பாக மட்டும் நேசிக்க கூடாது. வெறும் பேச்சுக்காக கன்னட பாசத்தை கேமரா முன்பாக காட்ட கூடாது. இங்கே கன்னடத்துக்காக பேசுவதாக சொல்பவர்கள் கன்னட திரையுலகுக்கு என்ன…
மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு, தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வைச் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியே கவுன்சலிங் நடைபெறும். பி.ஆர்க். படிப்பி்ல் சேர்வதற்கு நேட்டா (National Aptitude Test In Architecture- NATA) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த…
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், மிர்ரா ஆண்ட்ரீவா உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 166-ம் நிலை வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 88-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரையும் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா…
இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அஜர்பைஜானின் லாசின் நகரில் முகாமிட்டிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 10-ம் தேதி அதிகாலையில் தொழுகையை முடித்த பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இருந்தது. அதாவது அதிகாலை 4.30 மணிக்கு பிறகு தாக்குதலை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாக இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ தாக்குதல் குறித்து எங்களது ராணுவ தளபதி ஆசீம் முனிர் அதிகாலையில் என்னிடம் தகவல் தெரிவித்தார். நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இந்திய…
ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நடிகை ஜெயசுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் உருவான கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம் என்ற ஒரு பிரிவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சிறந்த திரைப்படங்கள் பட்டியலை ஜெயசுதா தலைமையிலான…
புதுக்கோட்டை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தேமுதிகவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஒருமுறை அன்புமணிக்கும், மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. தற்போது கமல்ஹாசனுக்கு திமுக தரப்பில் மாநிலங்களவை சீட் வழங்கியது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள். இன்னும் 2 நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இதுவரை 4.14 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மின் ரிக்ஷா, சிறிய மற்றும் பெரிய கார்கள் அடங்கும். இது நாட்டின் பிற மாநிலங்களைவிட அதிகம் ஆகும். தலைநகர் டெல்லியில் 1.83 லட்சம் மின்சார வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1.79 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைதான் காரணம் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச அரசு ‘புதிய மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கையை’ 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் மாநிலத்தை மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியின் மையமாக மாற்றவும், ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 10 லட்சம் வேலைகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்தல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல் மற்றும் மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களை ஊக்குவித்தல்…