‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான், தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்தை, சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். மான்சி நாயகியாக நடித்துள்ள இதில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, ஆலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன? அதை எப்படிக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதைக் கலகலப்பான முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்” என்கிறார் சமீர் அலிகான். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Author: admin
சென்னை: பழைய புத்தகக் கடை போல அரசு நூலகங்கள் செயல்படுவதாக தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க ஆட்சி என்றாலே ஏதோ கல்விக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற மாயை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாயை இப்போது நூலகத் துறைக்குள் நடக்கும் நாடகங்களால் உடைபட்டு வருகிறது. தி.மு.க ஆட்சி அமைந்த 2021 -22, 2022 – 23 ஆண்டுகளில் வெளிவந்த புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிகள் பெற வேண்டும். ஆனால் இப்போது வரை நூலகத்துறை எதையும் வாங்கியதாக தகவல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தகக் கடைகளை போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன’ என்பதுதான் திமுகவின் நான்காண்டு கால…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை ஆகிறது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,731 என விற்பனை ஆகிறது.
சிட்னி ஸ்வீனி தனது உண்மையான குளியல் நீரின் சொட்டுடன் 5,000 பார்கள் சோப்பை விற்கிறார், டாக்டர் ஸ்குவாட்சுடன் வரையறுக்கப்பட்ட பதிப்பு கொலாபில், ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறார். சிலர் இதை புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் என்று அழைக்கிறார்கள், பல ரசிகர்கள் ரைசிங் ஸ்டாரின் புறநிலைப்படுத்தல் குறித்து வருத்தப்படுகிறார்கள். சிட்னி ஸ்வீனி நிறைய விஷயங்களைச் செய்துள்ளார், யூபோரியாவில் நடித்தார், உங்களைத் தவிர வேறு யாரிடமும் திருடப்பட்ட காட்சிகள், மற்றும் இணையத்தின் விருப்பமான ஐடி பெண்ணாக மாறும். ஆனால் அவள் எங்களை அதிகம் ஆச்சரியப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது, அவள் சென்று அவளுடைய உண்மையான குளியல் நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சோப்பைத் தொடங்குகிறாள். “குளியல் நீர் பிளிஸ்” என்று கன்னத்தில் அழைக்கப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்பு சோப்பு, இயற்கையான சீர்ப்படுத்தும் பிராண்ட் டாக்டர் ஸ்குவாட்சுடன் நகைச்சுவையான மற்றும் எதிர்பாராத கொலாபின் ஒரு பகுதியாகும். இல்லை, இது இரவு நேர நகைச்சுவை ஓவியத்திலிருந்து சில வித்தை அல்ல.…
பெர்னார்ட் கெரிக் (பட கடன்: ஆபி) நியூயார்க் போலீஸ் கமிஷனரும் 9/11 ஹீரோவும் பெர்னார்ட் கெரிக் 69 வயதில் இறந்துவிட்டார் என்று நியூயார்க் காவல் துறை வியாழக்கிழமை சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தியது.இதற்கிடையில், எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் அஞ்சலி செலுத்தி, “பெர்னி 2025 மே 29 அன்று, நோயுடன் ஒரு தனியார் போருக்குப் பிறகு சோகமாக காலமானார்” என்று கூறினார். அவர் கெரிக்கை “ஒரு போர்வீரன், ஒரு தேசபக்தர், இந்த நாடு இதுவரை அறிந்த மிகவும் தைரியமான பொது ஊழியர்களில் ஒருவர் என்று விவரித்தார்.”படேல் மேலும் கூறுகையில், “அவர் துணிச்சல், வீரம் மற்றும் சேவைக்காக 100 தடவைகளுக்கு மேல் அலங்கரிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவர்களை கட்டிடங்களை எரிப்பதில் இருந்து மீட்டெடுத்தார், படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார், மேலும் உலகின் மிக ஆபத்தான குற்றவாளிகளில் சிலரை நீதிக்கு கொண்டு வந்தார்.””அவரது மரபு பதக்கங்களில் அல்லது பட்டங்களில் மட்டுமல்ல, அவர் காப்பாற்றிய வாழ்க்கையிலும், அவர் மீண்டும்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குசன் வனப்பகுதியில் ராணுவம், மத்திய படைகள், மாநில போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த இர்பான் பஷீர், உசைர் சலாம் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே56 ரக துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை…
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நேற்று மும்பையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி மற்றும் பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படவில்லை என அஜித்…
இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மே 13 அன்று, உளவு பார்த்த குற்றத்தின் கீழ் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய அதிகாரியை வெளியேற்றவதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையின்படி, “இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை, முரணான…
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு தனது 41-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜுலை 5-ம் தேதி, சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதில் அவர் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர். வெல்பஃர் கோர் கமிட்டியுடன் இணைந்து ஏசிடிசி நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. 30 சங்கங்கள் வெளிநடப்பு: போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட 8 மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், 2023-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலானாலும், 2024-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதலே ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி,…