புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி, ஹபிஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் அமைப்பின் ஷேக் சாஜத் ஆகியோர் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை பஹல்காமுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்க முதலில் கசூரி மறுத்தார். ஆனால், தற்போது லஷ்கர் அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்களை நடத்தி காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைக்கு நிதி திரட்டி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், ஐஎஸ்ஐ அதிகாரிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில்…
Author: admin
காண்டர்பெரியில் இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 186 ரன்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ ‘இந்தியா ஏ’ அணி ஒரே நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைக் குவித்தது . ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தான் இடம்பெற வேண்டும் என்பதை கருண் நாயரின் அதிரடி இன்னிங்ஸ் வலியுறுத்தியுள்ளது. அவர் 246 பந்துகளில் 24 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிராக நம் சென்னையில் 300 ரன்களை அடித்தவர் கருண் நாயர். துரதிர்ஷ்டவசமாக அவர் ஒழிக்கப்பட்டு இப்போது பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். டெஸ்ட் அணியிலிருந்து ஒழிக்கப்பட்ட சர்பராஸ் கான் 119 பந்துகளில் 92…
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது. குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராகவும் அப்போது இருந்தது. இதை, தின்கர் ஜெயின் இயக்கி இருந்தார். இத்தொடரை சினிமாவாக எடுக்க இருப்பதாக முகேஷ் கன்னா, கடந்த வருடம் தெரிவித்திருந்தார். இதில் சக்திமான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அதன் திரைப்பட உரிமையை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ரன்வீர் சிங் தரப்பு இத்தகவலை அறிக்கை மூலம் மறுத்துள்ளது. “‘சக்திமான்’ படத்தின் உரிமையைப் பெற்றுள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ரன்வீர் தற்போது ஆதித்யா தாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தொடர்ந்து ‘டான் 3’ படத்திலும் நடிக்க இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, முகேஷ் கன்னா அளித்த பேட்டியில், ‘ரன்வீர் சிறந்த நடிகர். ஆனால் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் அல்ல.…
ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது திமுக தலைமை. 2021-ல் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் எப்படி அதிமுக அள்ளியதோ அப்படித் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி வாரிச் சுருட்டியது. எஞ்சிய ஒரே ஒரு தொகுதியான சேலம் வடக்கில் மட்டும் தான் திமுக ஜெயிக்க முடிந்தது. அதனால் அமைச்சரவையிலும் சேலத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய், பொறுப்பு அமைச்சரைப் போட்டு கட்சியைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.…
திருமலை: நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா அறிவுறுத்தியுள்ளார். ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா தலைமையில் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவண வீடியோவை திருப்பதி எஸ்பியும், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரியுமான (பொறுப்பு) ஹர்ஷவர்தன் விளக்கினார். அதன்பின்னர், டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா பேசியதாவது: திருமலை உலக பிரசித்தி பெற்ற ஒரு திருத்தலமாகும். ஆதலால், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இங்கு பாதுகாப்பை அதிகரிப்பது அவசியம். ஆந்திர போலீஸ் படை, ஆயுதப்படை, சிவில் போலீஸார், ஊர்காவல் படை, தேவஸ்தான கண்காணிப்பு படை, ஆக்டோபஸ் கமாண்டோக்கள் இருந்தாலும், அத்தியாவசிய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள தேசிய, மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் இருத்தல் அவசியம். திருமலையில் 24…
ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் 4-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். 4 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டார். 74-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க அர்மகேதான் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் வெற்றி பெற்று 1.5 புள்ளிகளை பெற்றார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி தனது 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய கார்ல்சன் 48-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா, சீனாவின் வெய்…
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் வகையிலான உடை அலங்காரங்களுடன் வந்திருந்தது கவனம் பெற்றது. மே 13 அன்று கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியதிலிருந்து, ‘கேன்ஸ் ராணி’ ஐஸ்வர்யா ராய் பச்சன் வருகைக்காக உலகம் ஆவலுடன் காத்திருந்தது. அவரின் வருகைக்குக்கு பின்னர் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளார் ஐஸ்வர்யா ராய். மணீஷ் மல்ஹோத்ரா தந்த பனாரசி சேலையில் வந்திருந்த ஐஸ்வர்யா ராய், நெற்றி குங்குமம் (சிந்தூர்) அணிந்து வந்ததற்காக அவர் பெரும் பாராட்டை பெற்றுள்ளார். சிவப்பு கம்பளத்தில் தனது திருமண பந்தத்தின் சின்னமான குங்குமத்தை துணிச்சலுடன் அணிந்ததன் மூலம் கணவர் அபிஷேக் பச்சனுடனான விவாகரத்து வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவின் சமீபத்திய ‘ஆபரேஷன் சிந்தூரை’ நினைவு கூறும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ந்துபோனார்கள். இது…
சென்னை: புதிய இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துறை செயலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ-க்கள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, 2025-26 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்கள் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரியிலேயே இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான காலஅளவை கருத்தில்கொண்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25 கல்வி ஆண்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயண அட்டை மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தங்கள்…
பனாஜி: ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை போரில் இறங்கியிருந்தால் பாகிஸ்தான் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கோவா அருகில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பயணம் செய்து அதன் செயல்பாட்டு தயார் நிலையை ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நேரடி தாக்குதலும் ஆகும். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டினால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளவும் தோல்வியை சந்திக்கவும் பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தலை வேரறுக்க அனைத்து வழிகளையும் இந்தியா பயன்படுத்தும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகவே இருக்கும். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் உண்மையிலேயே தயாராக இருந்தால் ஹபீஸ்…
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது எக்ஸ் வலைதளத்தில், இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாட்னா விமான நிலையத்தில் சந்தித்த படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 14 வயதான சூர்யவன்ஷி பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.