Author: admin

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாயினிஸ் 26, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 18, பிரப்சிம்ரன் 18 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், யாஷ் தயாள் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். 102 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். விராட் கோலி 12, மயங்க் அகர்வால் 19, கேப்டன் ரஜத் பட்டிதார்…

Read More

‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. த.ஜெயவேல் இயக்கி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரிக்கிறார். அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் என பலர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். டி.ஆர். கிருஷ்ண சேத்தன் இசை அமைக்கிறார். தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Read More

சென்னை: நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிதாக 9 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ.2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான்…

Read More

புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும். * இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உள்ளது. இது ரூ.2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும். * இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் ரூ.31.7 லட்சம் கோடியாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய…

Read More

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று (31-ம் தேதி) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் பாலசுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்கு பொறுப்பாளராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை மாவட்டம்) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு சிவானந்தம் (தஞ்சாவூர் மாவட்டம்), துணைத் தலைவர் பதவிக்கு ரவிக்குமார் (திருவள்ளூர் மாவட்டம்), ராபர்ட் குமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ஆனந்த் (சிவகங்கை மாவட்டம்), ராதா (கடலூர் மாவட்டம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிரணியில் தலைவர் பதவிக்கு சண்முகம் (திண்டுக்கல்) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு மணிகண்டன் (விருதுநகர்), துணைத் தலைவர் பதவிக்கு கண்ணன் (நாகப்பட்டினம்), மணி (ஊட்டி), குமார் (புதுக்கோட்டை) ஆகியோர்…

Read More

ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆனந்த் செல்வன் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்கின்றனர். அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறாள். தனது அம்மா சொன்ன வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அவர் குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசிய போலீஸாகவும் இருக்கிறார். அவரின் இந்த முகம் வீட்டுக்குத் தெரிய வருகிறதா? குடும்பம் அயலியின் அன்பைப் புரிந்து கொள்கிறதா? தன் அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா? என்பது கதை. ஜூன் 2-ம் தேதி முதல், இரவு 8:30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Read More

திமுக கூட்டணியில் விசிக நீடித்து நிலைக்குமா நிலைக்காதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை முனவைத்து திமுக-வுக்கும் விசிக-வுக்கும் கசகல் வெடித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலையோரத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அப்பகுதியில் உள்ள பட்டியலினத்து மக்கள் முடிவெடுத் தார்கள். இதற்காக சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையும் தயாரானது. இந்த நிலையில் மே 23-ம் தேதி, கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள மங்களாகோவிலில் மாநில அளவிலான கபடி போட்டிகளை நடத்தியது திமுக. இந்தப் போட்டிகளை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார் என்றதும், அவர் கையாலாயே அம்பேத்கர் சிலையையும் திறந்துவைக்க சிலர் முனைப்புக் காட்டி இருக்கிறார்கள். ஆனால், சிலை அமைப்புக் குழுவினர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன், விசிக தலைவர் திருமாவளவன் தான் சிலையை திறந்துவைக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்திருக் கிறார்கள். அதேசமயம், சிலை திறப்பு நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டு…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரிவிதிப்பு மீதான தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடைமுறை தொடரும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இந்தியா, சீனா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அவர் அறிவித்தார். புதிய வரிவிதிப்பை எதிர்த்து அமெரிக்காவின் குறு, சிறு நிறுவனங்கள் சார்பில் நியூயார்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக ஜனநாயக கட்சிகள் ஆட்சி நடத்தும் மாகாணங்களின் அரசுகள் சார்பிலும் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இரு வழக்குகளையும் விசாரித்த நியூயார்க் வர்த்தக நீதிமன்றம், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு கடந்த 28-ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு…

Read More

இதய நோய்கள் உலகளவில் மரணத்திற்கு முன்னணி காரணங்களில் ஒன்றாகும். இப்போது நாம் அதிகப்படியான சாதனையாளராக இருக்கும் ஒரு உலகில் வாழ்கிறோம், இங்குள்ள வாழ்க்கை முறை வேகமாகவும் அதிகமாகவும் இருக்கிறது. மக்கள் வழக்கமாக தங்கள் உடல்நலம் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை மிகவும் தாமதமாகிவிடும் வரை புறக்கணிக்கின்றனர். மிகவும் ஆபத்தான நிலைமைகளில் ஒன்று இதயத் தடுப்பு ஆகும், இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகள் பிளேக் கட்டமைப்பால் குறுகும்போது அல்லது தடுக்கப்படும்போது ஏற்படுகிறது. இருப்பினும், ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது. அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீட்டிற்கும் அபாயகரமான இருதய நிகழ்வுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஒரு மைல்கல் ஆய்வாக, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு மார்பு வலி இல்லை. அவர்கள் ஒருவித மூச்சுத் திணறல், சோர்வு அல்லது குமட்டல் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர், எனவே ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமானதாக…

Read More

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி, ஹபிஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் அமைப்பின் ஷேக் சாஜத் ஆகியோர் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை பஹல்காமுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்க முதலில் கசூரி மறுத்தார். ஆனால், தற்போது லஷ்கர் அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்களை நடத்தி காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைக்கு நிதி திரட்டி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், ஐஎஸ்ஐ அதிகாரிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில்…

Read More