Author: admin

கொல்கத்தா: முஸ்லிம் வாக்குவங்கியை திருப்திபடுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு திருத்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்தி படுத்துவதற்காக மம்தா, ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்தநாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதிக்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தின் தாய்மார்களும் சகோதரிகளும் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்ததற்காக பாடம் புகட்டுவார்கள். ஏப்ரல் மாதத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர். அது அரசு ஆதரவுடன் நடந்த ஒரு கலவரம். அக்கலவரத்தின் போது எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால்,…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பணிஓய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் (2025-26) தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ‘பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக நிரப்பிக் கொள்ள…

Read More

கோவை: “ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்.” என மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீவிரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசம் வளர்ச்சி பெறும். அமைதி நிலவும். மத்திய அரசு அளித்து வரும் உதவியை பாராட்டுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநர் மிக நேர்மையானவர். அவருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக உள்ளது. அதை விட கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் வேறுபாடு காணப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதாக…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி ஒன்றினை, ஜூன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்புத்துறை அமைச்சகம் இளம் உள்ளங்களை தங்களின் குரல்களை எழுப்ப அழைக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் – பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மறுவரையறை செய்தல் என்ற தலைப்பில் இருமொழிக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கவும். போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பினையும் பெறலாம். போட்டி நாள்: ஜூன் 1 – 30-ம் தேதி வரை. ஒரு…

Read More

மும்பை: புரோ கபடி லீக் சீசன் 12 வீரர்களுக்கான ஏலம் மும்பையில் (மே 31) நேற்று தொடங்கியது. ஏலத்தின் முதல் நாள், இந்த விளையாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதியப்பட்டது. ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ரூ.1 கோடியை கடந்த விலையில் வாங்கப்பட்டனர், இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வரர்களைவிட இரட்டிப்பு எண்ணிக்கையாகும்.இரு முறை சாம்பியனாகவும், சீசன் 11-ன் அதிக மதிப்புடடைய வீரராகவும் திகழ்ந்த முகதுரேசா ஷாட்லூயி ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களிலும் ரூ.2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.சீசன் 11-ல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டு, புரோ கபடி லீக் வரலாற்றில் ஐந்தாவது உயர்ந்த விலைக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஃஎப்பிஎம் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.…

Read More

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு ரயில் மீது விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடிபாடுகளில், குண்டுவெடிப்பினால் பாலம் இடிந்ததில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு சாலையில் விழுந்தது, இதனால் தீ விபத்தும் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்ததற்கும் குண்டுவெடிப்புகளே காரணம் என்று அறிக்கை ஒன்றில், ரஷ்ய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது என்றாலும்…

Read More

மதுரை: மதுரையில் 2வது நாளாக ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு மக்கள் கைகெடுத்தும், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மதுரை அருகே உத்தங்குடியில் திமுகவின் மாநில பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று மாலை மதுரை பெருங்குடி – மதுரை மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் சுமார் 22 கி.மீ ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். அவர் நடந்து சென்றும், வேனில் இருந்தபடியும் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். இந்நிலையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க காலை 8.30 மணிக்கு மேல் காரில் புறப்பட்டார். வழியில் அவரை கட்சியினர் வரவேற்க விதமாகவும், முதல்வர் பொதுமக்களை சந்திக்கும் வகையிலும் 2-வது…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2008 முதல் நடப்பு ஐபிஎல் சீசன் வரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக உள்ளது ஆர்சிபி. இருப்பினும் அந்த அணியின் பலமே மாறாத நேசம் கொண்ட அதன் ரசிகர்கள் தான். இந்த முறை தங்கள் அணி பட்டம் வெல்லும் என ஒவ்வொரு சீசனிலும் கோடான கோடி ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்ப்பது உண்டு. நடப்பு சீசனில் அது கிட்டத்தட்ட கைகூடி வந்துள்ளது. ஆர்சிபி இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்றால் பட்டம் வெல்லும் நெடுநாள் கனவு மெய்ப்படும் நாளாக ஜூன் 3-ம் தேதி அமையும். அது நடந்தால் இரவு நேர வானம் செக்கச்சிவந்த வானமாக அதிர்வேட்டுகளை போட்டு ஆர்சிபி வண்ண மயமாக்குவார்கள். “என் உடலில் உள்ள ரெட் பிளட் செல்ஸ் எல்லாம் ‘ஆர்சிபி……

Read More

மேட்டூர்: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், 12 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை மற்றும், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2 பிரிவுகளில் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதில் 820 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, 600 மெகா வாட்…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. இந்நிலையில், ‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் அந்த அணிக்கு வென்று கொடுத்த வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மா தான். இருப்பினும் கடந்த 2024-ம் ஆண்டு சீசன் முதல் ஹர்திக் பாண்டியா அந்த அணியை வழிநடத்தி வருகிறார். நடப்பு சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு மும்பை முன்னேறி உள்ளது. இதற்கும் இந்த சீசனில் லீக் சுற்றின் முதல் 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை மும்பை எதிர்கொண்டது. அதன் பின்னர் எழுச்சி பெற்று பிளே ஆஃப் வரை வந்துள்ளது. “2018-ம்…

Read More