‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, ‘தக் லைஃப்’ தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதிக பொருட்செலவில் படத்தைதயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதன்மூலம் திரைப்படத் தொழிலை நம்பியுள்ள திரைக் கலைஞர்களின் குடும்பமும் பாதிக்கப்படும் என்றார். அதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடை விதித்தும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Author: admin
திருச்சி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அரசின் சாதனை வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கோட்டப் பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய பொதுச்செயலாளர் ரோஹித், தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டில் 5 லட்சம் பேர் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசம் சொல்ல உள்ளோம். அது கின்னஸ் அல்லது லிம்கா சாதனையாக அமையும். இந்த மாநாட்டில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் பங்கேற்கின்றனர். கன்னட…
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 316-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் லோயிஸ் போய்சனுடன் மோதினார். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லோயிஸ் போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 7-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸஸுடன் மோதினார். 2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோ கோ காஃப் 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில்…
அரியலூர்: அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசு போக்குவரத்துக் கழகம் என்றுதான் பெயர் இருந்தது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரைக் காணவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றுதான் உள்ளது. ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன்பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின்போது மாற்றப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செய்திபோல, சிலர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அதிமுக…
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்புக்கான தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மே 30-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, நெல்லை பேட்டை காவல் நிலையத்தில், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதனடிப்படையில் பேட்டை போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற, மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார். சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 99…
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை…
சென்னை: இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவு பொருட்களை விநியோகிக்க கூடாது, பஜ்ஜி, சிக்கன் 65 போன்ற உணவுகளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது என உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. உணவு வணிகர்களின் கவனத்துக்காக 14 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை உணவு வணிகர்கள் பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: அனைத்து உணவு வணிகர்களும் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டைஃபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தண்ணீரை பகுப்பாய்வு செய்து…
சென்னை: முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது, தமிழக கல்வி மரபை இருட்டடிப்பு செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், ‘அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு. இது தமிழ்நாட்டின் கல்வி மரபை இருட்டடிப்பு செய்யும் இழிவான நோக்கம் கொண்ட செயலாகும். தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து ஆளுநருக்கு என்ன தெரியும். படித்தால் போதுமா, அறிவு திறமை இருக்கிறதா என்ற அவரின் கேள்வி நகைப்புக்குரியது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல முக்கிய அரசு பல்கலைக்கழகங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்திடமிருந்து ‘A’ அல்லது ‘A+’ தரச் சான்றிதழ்…
சென்னை: தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், மாற்றுத் திறனாளி பிரதிநிதிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் துறைவாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்.29-ம் வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், நிதி மசோதாக்கள், கலைஞர் பல்கலைக்கழகம், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குவது, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இதில், தமிழக அரசின் 4 நிதி மசோதாக்களுக்கு கடந்த மே 17-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். மேலும் 14 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், கடந்த ஏப்.16-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி ஜூன் 2ம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில்…