Author: admin

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். இந்த ஆட்டம் நேற்று பாரிஸில் நடைபெற்றது. “இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான ஃபைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன். இந்த வெற்றிக்கு கோகோ காஃப் தகுதியானார். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார். இந்த இறுதி ஆட்டத்தை 6-7(5), 6-2,…

Read More

புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்சஅளவாக இன்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவாக இருந்தது. அத்துடன் கடும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் தொடர்கிறது. குறிப்பாக கடந்த வாரம் முழுக்க அதிகளவு வெப்பம் பதிவானது. கிட்டத்தட்ட நூறு டிகிரி அளவுக்கு நெருக்கமாக வெயிலின் தாக்கம் உள்ளது. சனிக்கிழமை 100.8 டிகிரியை தொட்டது. இன்று (ஜூன் 8) நடப்பாண்டிலேயே அதிகளவாக 104 டிகிரி பதிவானது. நடப்பு கோடையில் ஆறாவது முறையாக புதுச்சேரியில் வெயிலின் அளவு சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் 3வது முறையாக நூறு டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பட வரவு: கெட்டி படங்கள் இயற்கையானது அங்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்படுகிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துகையில், இயற்கையின் துறை ஒரு படி பின்வாங்கியுள்ளது, தாய் பூமி மிகப்பெரிய மந்திரவாதி மற்றும் அனைவரையும் உருவாக்கியவர் என்பதை அறிந்த மக்களின் ஏமாற்றத்திற்கு.ஒரு புதிய ஆய்வு இப்போது நம் உடலுக்குள் தண்ணீர் மற்றும் உணவைக் கொண்டு நுழையும் ‘என்றென்றும் ரசாயனங்கள்’ ஒரு பொதுவான உணவு நிரப்புதலுடன் அகற்றப்படலாம் என்று கூறுகிறது.ஓட்ஸ் தீர்வு பி.எஃப்.ஏக்கள்?ஒவ்வொரு உணவிற்கும் முன்னர் ஓட்ஸிலிருந்து பெறப்பட்ட ஒரு ஃபைபர் சப்ளிமெண்ட் சாப்பிடுவது, ஆய்வின் படி, உடலில் இருந்து நச்சு என்றென்றும் ரசாயனங்களை வெளியேற்ற உதவும்.பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கில் பொருட்கள் அல்லது பி.எஃப்.ஏக்கள் பொதுவாக எப்போதும் ரசாயனங்கள் என அழைக்கப்படுகின்றன, அவை அல்லாத அன்றாட பயன்பாட்டு தயாரிப்புகளான குச்சி அல்லாத சமையல் பாத்திரங்கள், அழகுசாதனப் பொருட்கள், கறை-எதிர்ப்பு துணிகள், தீயணைப்பு நுரைகள்,…

Read More

புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை பல்வேறு முயற்சிகள் மூலம், நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை. முத்ரா கடன்கள், லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோர்களாகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் உதவியுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தையைப்…

Read More

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 6-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் சென்னை லயன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஃபேன் சிகி, யு மும்பா அணியில் உள்ள உலகத் தரவரிசையில் 81-வது இடத்தில் உள்ள யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார். 20 வயதான யஷஸ்வினி கோர்படே 2-1 என்ற கணக்கில் ஃபேன் சிகியை தோற்கடித்து அசத்தினார். உலக டேபிள் டென்னிஸ் தொடரில் 2 முறை பட்டம் வென்றுள்ள ஃபேன் சிகி, உலகத் தரவரிசையில் அதிகபட்சமாக 11-வது இடம் வரை பிடித்துள்ளார். யஷஸ்வினி கோர்படே முதல் செட்டை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2-வது செட்டை ஃபேன் சிகி 11-6 தன்வசப்படுத்தினார். தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் 2-7…

Read More

சென்னை: “முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள். முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது. கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக,…

Read More

ஒரு பிரபலமான மந்திரத்திலிருந்து ஒரு பொதுவான சொற்றொடர், ‘தியோ யோ நா பிரச்சோதாயத்’, அடிப்படையில் ‘தெய்வீக ஒளி நம் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்’ என்று பொருள். நீங்கள் அழுத்தமாகவோ, அதிகமாகவோ, அல்லது விஷயங்கள் உங்கள் வழியில் செல்லாது எனவோ உணரும் காலங்களில், தெய்வீகத்திற்கு சமர்ப்பிப்பது ஒரு நல்ல வழி. இது ஒரு எளிய சொற்றொடர், இது ஒரு பிரார்த்தனையைப் போல அல்ல, கடவுளுக்கான கோரிக்கையும் ஆகும், இறுதியில், நீங்கள் உள்ளே இருந்து நன்றாக உணருவீர்கள் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள், கிட்டத்தட்ட ஒரு சூடான ஆற்றல் உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் மீண்டும் எழுந்திருக்க உதவுகிறது. உங்கள் இதயம் கனமாக உணரும்போது, ​​மனம் மங்கலாக உணரும்போது, ​​இந்த உறுதிமொழியை நீங்களே பேசுவது உதவியாக இருக்கும், மேலும் மெதுவாக மன அழுத்தமும் போய்விடும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

Read More

ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் இருந்தது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, “பிரதமரின் புத்தி கூர்மை மீது எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவார். அதன் பிறகே [தொகுதி மறுவரையறையை] முன்னெடுப்பார். 2001ம் ஆண்டு தொகுதி மறுவரையறை மேலும் 25…

Read More

பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினார். இதில் முதல் செட் கடும் போராட்டமாக இருந்தது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அரினா சபலெங்கா 7-6 (7-5) என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த கோகோ காஃப் 6-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடும் சவால் கொடுத்த கோகோ காஃப் 6-4 என இந்த செட்டை கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காஃப் 6-7 (5-7), 6-2, 6-4 என் செட் கணக்கில் வெற்றி…

Read More

சென்னை: 2027 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 84-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி 2026-க்கு பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள்…

Read More