Author: admin

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் சீசன் போட்டிகளை ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் தற்போது சிறிய மாற்றம் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரும் அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 10-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தொடர்ந்து நவம்பரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் மாத மத்தியில் டெல்லியில் காற்று…

Read More

வாஷிங்டன்: இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) ககன்​யான் என்ற திட்​டத்தை 2027-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்பி அவர்​களை மீண்​டும் பத்​திர​மாக பூமிக்கு அழைத்து வரு​வது​தான் இதன் நோக்​கம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் இன்று ஏவப்பட இருந்தது. ஆனால் காலநிலை காரணமாக புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின்…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் உட்பட பலர் நடித்துள்ளனர். அக்.14-ல் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சவுபின் சாஹிர், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். “முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் முன்னால் நடிப்பதற்குப் பயந்தேன். பிறகு அதை அவர் சகஜமாக்கினார். அவர் எளிமையும் ஸ்டைலும் வியக்கவைத்தன. உடை மாற்றவும் சாப்பிடவும் மட்டுமே அவர் கேரவனுக்குச் செல்வார். மற்ற நேரங்களில் படப்பிடிப்பைத்தான் கவனித்துக் கொண்டிருப்பார். அவர் அப்படி இருந்தது எங்களைப் போன்றவர்களுக்குப் பெரிய எனர்ஜியை கொடுத்தது” என்றார்.

Read More

சேலம்: சேலத்​துக்கு 2 நாள் பயண​மாக நாளை (ஜூன் 11) வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்​கேற்​கிறார். 12-ம் தேதி மேட்​டூர் அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் பயண​மாக சேலத்​துக்கு நாளை வரு​கிறார். காலை 10 மணிக்கு சென்​னையி​லிருந்து விமானத்​தில் கோவை வரும் முதல்​வர் அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை செல்​கிறார். அங்கு நடை​பெறும் வேளாண் கண்​காட்சி மற்​றும் கருத்​தரங்​கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவ​சா​யிகளுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். பின்​னர் அன்று மாலை சேலம் செல்​லும் முதல்​வர் திமுக நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொள்​கிறார். அன்​றிரவு மேட்​டூரில் தங்​கு​கிறார். மறு​நாள் 12-ம் தேதி மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கிறார். பின்​னர் சேலம் இரும்​பாலை அரு​கே​யுள்ள அரசு மோகன் குமாரமங்​கலம் மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெறும் அரசு…

Read More

லக்னோ: மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது காதலன் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11-ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து புதுமணத் தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு சென்றனர். கடந்த மே 23-ம் தேதி, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் நாங்ரியட் கிராமத்தில் உள்ள விடுதியில் இருந்து வெளியேறிய இவர்களை பிறகு காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மேகாலயா போலீஸார் இத்தம்பதியை தேடினர். இதில் 24-ம் தேதி இத்தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டரை சோராரிம் என்ற கிராமத்தில் கண்டுபிடித்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200…

Read More

ஆம்ஸ்டெல்வீன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் 20-வதுநிமிடத்தில் ஜுக்ராஜ் சிங்கும், 54-வது நிமிடத்தில் அபிஷேக்கும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஜான்சன் ஜிப்57-வது நிமிடத்திலும், திஜ்ஸ் வான் டேம் 24-வது நிமிடத்திலும், டிஜெப் ஹோடெமேக்கர்ஸ் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்திருந்தது.

Read More

சென்னை: ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கும் உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி தமிழ் நூலின் 2 தொகுதிகளை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூன் 10-ம் தேதி (இன்று) திருப்பதியில் வெளியிடுகிறார். அனைவராலும் போற்றத் தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாரத்தான் யாத்திரைகளின்போது அவரது செயல்பாடுகள், திட்டங்கள், அவரது முகாம்களில் நடைபெற்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பல்வேறு இடங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திகளைத் தொகுத்து ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில் ‘உண்மையின் அவதாரம்’ -காஞ்சி மகாஸ்வாமி என்ற நூல். 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை காஞ்சி சங்கர…

Read More

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் ஆறாவது திரைப்படமான இதில், ஹிருத்திக்ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் படம் ஆக.14-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு மனித இயந்திரம் போலுள்ள ஜாக்கெட்டை உருவாக்கியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஜுனியர் என்.டி.ஆரை சிறப்பாகக் காண்பிக்க விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போலுள்ள ‘ஜாக்கெட்டை’ அவருக்காகச் சிறப்பாக உருவாக்கியுள்ளேன். இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பாகும். நான் உருவாக்கியுள்ள உடைகள் அவர் தோற்றத்தை இன்னும் அழகாகக் காட்டும்” என்றார்.

Read More

மதுரை: கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த இந்து பிரச்சாரகர் ராம.ரவிகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 27 கோயில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பழனி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் வரதராஜ பொருமாள் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் ரூ.6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு 16.5.2025-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு…

Read More

சமீபத்தில் தலைகீழாக மாறும் அமைதியற்ற சுகாதாரச் செய்திகள் இங்கே: பின் இணைப்பு புற்றுநோய், ஒரு முறை மிகவும் அரிதானது, இப்போது மில்லினியல்களில் அடிக்கடி காண்பிக்கப்படுகிறது. ஆம், நீங்கள் அந்த உரிமையைப் படித்தீர்கள். வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் புதிய ஆய்வின்படி, 1985 மற்றும் 1990 க்கு இடையில் பிறந்தவர்கள் முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள். 1980 மற்றும் 1985 க்கு இடையில் பிறந்தவர்கள்? அவர்களின் ஆபத்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.பின் இணைப்பு புற்றுநோய் இன்னும் பொதுவானதல்ல என்றாலும் – இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கு ஒன்று அல்லது இரண்டு நபர்களை பாதிக்கிறது – இது இளைய பெரியவர்களிடையே அதிகரித்து வருகிறது என்பது சில தீவிர சிவப்புக் கொடிகளை உயர்த்துவதாகும். அது தனிமையில் நடக்காது. பெருங்குடல், மார்பகம், கருப்பை, கணைய மற்றும் சிறுநீரக புற்றுநோய்கள் போன்ற பிற புற்றுநோய்களும் இளையவர்களில் அதிகரித்து வருகின்றன. எனவே, என்ன நடக்கிறது?இது…

Read More