Author: admin

ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த திசையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியபோதும் இந்தியாவின் கவலைகளை நேரடியாகத் தெரிவித்தார். மேலும் சர்வதேச சமூகத்தின் கவலைகளையும் எடுத்துரைத்த ஜெய்சங்கர், பதற்றம் மேலும் அதிகரிப்பதை தவிர்த்து ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்து என்சிஓ…

Read More

தனது தாய் எப்போது வருவார் என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்ணின் மகள் காத்திருக்கும் செய்தி பலரது கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர், பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண்ணான அபர்ணா மகாதிக்கும் உயிரிழந்து விட்டார். அபர்ணா மகாதிக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஆதித்தி சுனில் தாத்கரேவின் நெருங்கிய உறவினர் ஆவார். ஆனால் தாயார் இறந்துவிட்டார் என்பது கூடத் தெரியாமல் அவரது மகள் காத்திருக்கிறார். தொடர்ந்து…

Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்.4-ம் தேதி வெளியிட்டது. சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் காவல் துறையில் இரண்டாம், முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். காவல் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவது வழக்கம். பொதுப்பிரிவு மற்றும் பணியில் உள்ள போலீஸாருக்கு தனித்தனி தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கப்படும். அதில், தேர்வானவர்களுக்கு எஸ்ஐ பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும். ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள் அனைவரும் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவர்கள்…

Read More

எம்.டெக். படிப்பதற்காக லண்டனுக்கு புறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் மகள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரைச் சேர்ந்த சுரேஷ் கதிக் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். இவருடைய மகள் பாயல், பி.டெக். படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். இதன்மூலம் கிடைத்த வருமானத்தை குடும்பத்தினருக்கு வழங்கி வந்துள்ளார். இதையடுத்து லண்டனில் மேல் படிப்பு படிக்க விரும்பினார். இதன்படி, கடந்த 12-ம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பாயல் புறப்பட்டார். முன்னதாக அவருடைய தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பாயலை வழியனுப்பி வைத்தனர். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த பாயல் உள்ளிட்ட 241 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து சுரேஷ் கதிக் கூறும்போது, “என் மகள் பாயல் லண்டனில் எம்.டெக். படிக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கல்விக் கடன் பெற்று…

Read More

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி அம்பாள்: வள்ளி-தெய்வானை தல வரலாறு : தவம் புரிந்து கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் முன் தோன்றிய சிவபெருமான், பாலதிரிபுரசுந்தரியை எண்ணி தவம் புரிந்தால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை கூறுவாள் என்று அருளினார். விஸ்வாமித்திரர் தேவியை நோக்கி தவம் புரிந்தார். அவர் முன்பு தோன்றிய தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நெற்றியில், விஸ்வாமித்திரர் திலகமிட்டார். குங்குமத்தை சரிபார்க்க குளத்து நீரில் தன் பிம்பத்தை தேவி பார்த்தபோது, குங்குமம் நீரில் விழுந்தன அடுத்த நொடி அந்த குளத்தில் இருந்து தெய்வீக ஒளி தோன்றியது. மேலும் 3 முகங்கள் தோன்றின. அனைத்தையும் இணைத்து, 4 முகங்களுடன் கூடிய திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, சதுர்முக முருகனை அணைத்துக் கொண்டாள் தேவி. மேலும் இந்த முருகனே வேண்டும் வரம் அருள்வான் என்று விஸ்வாமித்திரரிடம் கூறினாள் தேவி. ஆடு மேய்க்கும் சிறுவன், முருகன் கோயிலுக்கு வழி காட்டினான், அங்கு விஸ்வாமித்திரருக்கு, பாலதிரிபுர சுந்தரியும்சதுர்முக முருகனும்…

Read More

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய அரசு சார்பில் நேற்று முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட்டது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். சமீர் குமார் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட ஒரு நிமிடத்தில் மெஹானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி…

Read More

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் முதல் நாளில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், அனைவரும் இணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்கும்படி அறிவுறுத்தினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஜூன் முதல் வாரத்தி்ல் இருந்து, கழக நிர்வாகிகளை தொகுதிவாரியாக அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக ‘ஒன் டூ ஒன்’ பேசுவோம்’’ என்று அறிவித்தார். இதையடுத்து, ‘உடன்பிறப்பே வா’ என்று தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில், சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களை முதல்வர் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இச் சந்திப்பின்போது, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,…

Read More

வைட்டமின் டி உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்ச உதவுகிறது, அவை வலுவான எலும்புகளை உருவாக்க முக்கியம். போதுமான வைட்டமின் டி இல்லாமல், உங்கள் உடல் இந்த தாதுக்களை சரியாக உறிஞ்ச முடியாது. இது மென்மையான, பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கும், அவை உடைக்க அல்லது காயப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.குழந்தைகளில், கடுமையான வைட்டமின் டி குறைபாடு ரிக்கெட்ஸ் எனப்படும் ஒரு நிலையை ஏற்படுத்துகிறது, இது அரிதாக இருந்தாலும், எலும்புகள் மென்மையாகவும், பெரும்பாலும் கால்களுக்கு வழிவகுக்கும். பெரியவர்களில், இந்த நிலை ஆஸ்டியோமலாசியா என்று அழைக்கப்படுகிறது, இது எலும்பு வலி மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த வைட்டமின் டி உள்ளவர்கள் ஆஸ்டியோபோரோசிஸை உருவாக்கக்கூடும், இது எலும்புகள் உடையக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும், இது எலும்பு முறிவின் அபாயத்தை அதிகரிக்கும்.

Read More

உலகளாவிய தகவல்தொடர்புகளை அச்சுறுத்தும் ஒரு அமைதியான மர்மத்தை தீர்க்க நாசா வானத்தை நோக்கி செல்கிறது. ஒரு அற்புதமான முயற்சியில், மார்ஷல் தீவுகளில் உள்ள தொலைதூர குவாஜலின் அட்டோலில் இருந்து அதன் இடைவெளி-இ எலக்ட்ரோடைனமிக்ஸ் (விதை) பணியின் ஒரு பகுதியாக ஏஜென்சி நிர்ணயிக்கப்படாத ராக்கெட்டுகளைத் தொடங்குகிறது. வானொலி சமிக்ஞைகளை சீர்குலைத்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள் முதல் இராணுவ ரேடார் வரை அனைத்தையும் குழப்பமடையச் செய்யும் பூமியின் மேல் வளிமண்டலத்தில் விசித்திரமான, மேகம் போன்ற அயனியாக்கம் செய்யப்பட்ட கட்டமைப்புகளின் அடுக்குகளை ஆராய்வதே குறிக்கோள்.இந்த கண்ணுக்கு தெரியாத அடுக்குகள் திடீரென உருவாகின்றன, கணிக்க முடியாத அளவிற்கு நகர்கின்றன, மேலும் அவை முன்னறிவிப்பதற்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஜூன் 13, 2025 முதல், மூன்று வார வெளியீட்டு சாளரம் விஞ்ஞானிகளுக்கு காந்த பூமத்திய ரேகைக்கு அருகில் அவர்களின் நடத்தையைப் படிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்கும், அங்கு அவை மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. தகவல்தொடர்பு அமைப்புகளை…

Read More

சென்னை: கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சட்டம், உயிரி கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 5 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் நிதி மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இவற்றில், நிதி மசோதாக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்கள் உட்பட 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தை குறைக்க, அறிவியல் சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள்…

Read More