டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம்…
Author: admin
‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது வெறும் வதந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது. ’கூலி’ படத்துக்குப் பின் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனை முடிந்தவுடன் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, ‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தி பலராலும் பகிரப்பட்டு வைரலானது. இது தொடர்பாக விசாரித்த போது, ‘கைதி 2’ பணிகளே இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதற்குள் எப்படி அனுஷ்கா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது என்றே தெரியவில்லை என்றார்கள். அதில் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டார்கள். தற்போது நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக தாய்லாந்தில் தங்கி இருக்கிறார். அத்துடன் ‘கூலி’ படத்துடன் இறுதிகட்டப் பணிகளையும்…
புதுடெல்லி: வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விழைவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Sir Ganga Ram Hospital in Delhi. She…
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – இதற்கு முன்பு வெளியான டீசர் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தாலும் கதை இன்னது என்று யூகிக்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் ஓரளவு ஆடியன்ஸுக்கு கதையை யூகிக்கும் வாய்ப்பை படக்குழு கொடுத்துள்ளதாக தெரிகிறது. வாழ்வின் திடீர் திருப்பமாக பிச்சைக்காரராக இருக்கும் ஒருவர் கோடீஸ்வர அந்தஸ்த்தை அடைகிறார். ஆனால் அதுவே அவருக்கு பல…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. வழக்கமாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமையன்று நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பின் காரணமாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், இன்று காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. கடும் குளிரான காலநிலை நிலவியது. அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானியில் கன மழை பெய்தது. கூடலூர் தாலுகா ஓவேலி ஆறோட்டுபாறை பகுதியில் செல்வம் என்பவரது வீடு மழையால் சேதமடைந்தது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 143 மி.மீட்டர் மழை…
வாடகை வீட்டை அலங்கரிக்கவும் வாடகை குடியிருப்பை அலங்கரிப்பது மிகவும் தந்திரமானதாக இருக்கும். முதலாவதாக, நீங்கள் அங்கு நீண்ட நேரம் தங்கியிருக்க மாட்டீர்கள், எனவே அதிகமாக செலவழிக்க விரும்பவில்லை, இரண்டாவதாக, வாடகை ஒப்பந்தங்கள் நீங்கள் துளையிடவோ, ஒட்டவோ, வண்ணப்பூச்சுகளை துடைக்கவோ கூடாது என்பதை உறுதிசெய்கின்றன, எனவே, வீட்டை அலங்கரிப்பதற்கான சில பட்ஜெட் நட்பு வழிகள் இங்கே.
புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கபட்ட நிலையில், தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கபட்டுள்ளதாகவும், 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 250 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றின்…
அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதினார். இதில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் 2-1 (11-9, 10-11, 11-5) என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்தார். 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ், ஆகாஷ் பால்…
ஜேம்ஸ் க்ளியர் எழுதிய ‘அணு பழக்கம்”அணு பழக்கம்’ என்பது சுய உதவி, உருமாற்றம், புதிய பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் விருப்பங்களுக்கு வரும்போது எல்லோரும் மேற்கோள் காட்டும் ஒரு புத்தகம். நீங்கள் ஒரு புதிய பழக்கத்தை எடுத்துக்கொண்டு பழைய, கெட்டவற்றை விட்டுவிட விரும்பினால், இந்த புத்தகம் உண்மையில் உதவக்கூடும்.
இன்றைய வேகமான உலகில், மன அழுத்தம் கார்டிசோலின் அளவை உயர்த்துகிறது, ஆரோக்கியத்தை பாதிக்கிறது. விவரிக்கப்படாத எடை அதிகரிப்பு, குறிப்பாக அடிவயிற்றைச் சுற்றி, போதுமான தூக்கம் இருந்தபோதிலும் நாள்பட்ட சோர்வு மற்றும் எரிச்சல் அதிகரித்த சமிக்ஞை சாத்தியமான சிக்கல்கள். அடிக்கடி நோய்கள், மெதுவான குணப்படுத்துதல், முகப்பரு, முடி மெலிதல் மற்றும் தசை பலவீனம் ஆகியவை அதிக கார்டிசோலைக் குறிக்கின்றன. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது முக்கியம்; சுகாதார வழங்குநரைக் கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. எல்லோரும் எலி பந்தயத்தில் இருக்கும் நேரத்தில், காலக்கெடு, குறிக்கோள்கள் மற்றும் முழுமையைத் துரத்துகிறார்கள், மன அழுத்தம் ஒரு அமைதியான தோழராக மாறியுள்ளது. இந்த நிலையான மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோன் மூலம் உங்கள் கணினியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும். ‘மன அழுத்த ஹார்மோன்’ என்றும் அழைக்கப்படும் கார்டிசோல், வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு பதில் மற்றும் மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அட்ரீனல்…