‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபார பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இதன் உரிமையைக் கைப்பற்ற இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவுக்கும் கொடுப்படாத விலையைக் கொடுக்க முன்வைத்துள்ளது முன்னணி நிறுவனம். இப்படத்தின் உரிமைக்கு சுமார் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறது. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இன்னும் அதிகமாக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வியாபாரம் மட்டும் முடிந்துவிட்டால், இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவுக்கும் கொடுப்படாத வெளிநாட்டு உரிமம் விலை கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ‘கூலி’…
Author: admin
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 17) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 22-ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும். இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும், நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,…
திருவள்ளூர்: “அதிமுக கூட்டணியில் இருப்பதால் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய துடிக்கிறது திமுக அரசு” என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சீர்கேட்டுள்ளதாக கூறி இன்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரமணா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் சி.வி.என். சாலையில் உள்ள ராஜம்மாள் தேவி பூங்காவில் அரசு விதியை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது; நகராட்சி பகுதிகளில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளது; குப்பை முறையாக அகற்றப்படாமல் உள்ளது; பாதாளச் சாக்கடை வழியாக செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் வெளியேறுகிறது, தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது; வீட்டு வரி நிர்ணயம் செய்வதில் அரசு விதிகள் முறையாக…
டெல் அவிவ் / தெஹ்ரான்: ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது. முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்: திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம்…
வேலூர்: தமிழக விவசாயிகளிடம் இருந்து ஆந்திர மாநில மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் மாங்காய்களைக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக – ஆந்திர எல்லை கிராமமான பரதராமியில் மாங்காய்களைச் சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் – ஆந்திர எல்லை மாவட்டங்களில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மா விவசாயிகளுக்கான மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகளுக்கு ஆண்டு தோறும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்தாண்டு வேலூர் மற்றும் அதையொட்டிய சித்தூர் மாவட்டங்களில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், வேலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், வேலூர் மாவட்டத்திலிருந்து வரும் மாங்காய்களை சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் வாங்க மறுத்து வருகின்றன. ஆந்திர அரசு அம்மாநில மா…
இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது என்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாடு 2025 கனடாவில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தப் போரில் ஈரான் வெற்றி பெறாது என்று நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மிகவும் தாமதமாகிவிடும் முன்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஜி7 மாநாடு என்பது ஜி8 மாநாடாக ஆக இருந்தது. ஆனால் பராக் ஒபாமாவும் ட்ரூடோ என்ற நபரும் ரஷ்யாவை இதில் சேர்க்க விரும்பவில்லை. அது ஒரு மாபெரும் தவறு என்று நான் கூறுவேன். ஏனென்றால் ரஷ்யா இங்கே இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது. அதே போல…
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி இணையும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் நெல்சன். ‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால் சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையும் தாணுவே தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் நடிகராகவும் அறிமுகமாகிறார். இதில் வரும் முக்கிய சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார் நெல்சன். அதுமட்டுமன்றி முதன்முறையாக தனது படத்துக்காக ப்ரோமோ ஷூட் ஒன்றையும் நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். இதில் சிம்பு – நெல்சன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலம் நெல்சனும் நடிகராக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. சிம்பு – நெல்சன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். நெல்சன் இயக்குநராக அறிமுகமாக இருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தின் நாயகன் சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு…
காஞ்சிபுரம்: “திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைத்து வெற்றி பெறலாம் என்று பாமகவுக்குள் இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியது: “சமீபத்தில் வரலாறு காணத வகையில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தினோம். பத்து லட்சம் வன்னிய இளைஞர்கள் அந்த மாநாட்டில் திரண்டனர். ‘வன்னிய சமூகத்துக்கு பெரும் துரோகத்தை திமுக இழைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும் அந்த இடஒதுக்கீட்டை வழங்காமல் திமுக துரோகம் செய்தது. வன்னிய சமூகத்தில் இருந்து திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட செல்லக் கூடாது. அதற்கான பணிகளை செய்ய வேண்டும்’…
இந்த படம் சூரியனின் கொரோனாவை புலப்படும் ஒளி நிறமாலையில் புரோபா -3 ஜோடி விண்கலத்தால் கைப்பற்றப்பட்டதைக் காட்டுகிறது, முடி போன்ற கட்டமைப்புகள் ஒரு சிறப்பு பட செயலாக்க வழிமுறையைப் பயன்படுத்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளன (பட கடன்: AP) ஒரு ஜோடி ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் துல்லியமான மற்றும் ஆடம்பரமான உருவாக்கத்தில் பறப்பதன் மூலம் முதல் செயற்கை சூரிய கிரகணங்களை உருவாக்கியுள்ளனர், விஞ்ஞானிகளுக்கு தேவைக்கேற்ப மொத்தம் மணிநேரத்தை வழங்குகிறார்கள். தி ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் திங்களன்று பாரிஸ் ஏர் ஷோவில் கிரகணம் படங்களை வெளியிட்டது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட, சுற்றுப்பாதை இரட்டையர்கள் மார்ச் முதல் உருவகப்படுத்தப்பட்ட சூரிய கிரகணங்களை வெளியேற்றியுள்ளனர், அதே நேரத்தில் பூமிக்கு மேலே பல்லாயிரக்கணக்கான மைல்கள் (கிலோமீட்டர்) பெரிதாக்கினர். 492 அடி (150 மீட்டர்) இடைவெளியில் பறக்கும், ஒரு செயற்கைக்கோள் ஒரு இயற்கையின் போது சந்திரன் செய்யும் சூரியனைத் தடுக்கிறது மொத்த சூரிய கிரகணம் மற்றொன்று அதன் தொலைநோக்கியை கொரோனாவில் நோக்கமாகக்…
மதுரை: மதுரையிலுள்ள 2 அமைச்சர்களில் ஒருவர் தற்போது அமைதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் கூடுதல் கட்டிடத்துக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளோம். இப்பகுதியினர்தான் இந்த செல்லூர் கே.ராஜூவை ஊருக்கும், உலகுக்கும் தெரிய வைத்தனர். மதுரை பந்தல்குடி வாய்க்கால் எங்களது ஆட்சியில் சீரமைக்கப்பட்டது. முதல்வர் மதுரையில் ரோடு ஷோ வந்தபோது, அவரது கண்ணில் படக்கூடாது என கால்வாயை துணிகளை கட்டி மறைத்தனர். இதுபற்றி நான் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தேன். முதல்வரும் காரைவிட்டு இறங்கி கால்வாயை பார்த்துவிட்டு சீரமைக்க ரூ.86 கோடி ஒதுக்கியதாக கூறி சென்றுள்ளார். பந்தல்குடி கால்வாய்க்கு விடிவு…