கனமழையினால் சபரிமலையில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலிமலை பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் சந்திதானத்துக்கு பம்பையில் இருந்து நீலிமலை பாதை உள்ளது. இதில் மரக்கூட்டம், அப்பாச்சிமேடு வழியாக சுமார் 5 கி.மீ. தூரத்தில் சந்நிதானத்தை அடையலாம்.இப்பகுதியில் தற்போது கனமழை பெய்து மண் மற்றும் பாறைகள் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இந்த பாதையில் மலையேற தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலையில் மலையேறிச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சாலை சந்நிதானத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர் பாதையாகும். மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களும் இந்த சாலை வழியே செல்லும். தற்போது கனமழை காரணமாக மாற்றுப் பாதையான இதில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
Author: admin
புதுடெல்லி: “ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிடுவது குறித்து கா்நாடக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது. இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த ஜூன் 3-ம்…
கரூர்: கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் திருச்சி வழியாக இன்று (ஜூன் 17) கரூர் ரயில் நிலைய சந்திப்புக்கு (ஜங்ஷன்) வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நுழைவாயில் பகுதி, ரயில் நிலைய சந்திப்பு முகப்பு பகுதி, ரயில் நிலைய நுழைவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், புதிதாக கட்டப்பட்ட பார்சல் புக்கிங் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவுறுத்தினார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், முதன்மை திட்ட…
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்தில், இந்த வண்ணங்களின் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக நாங்கள் பெரும்பாலும் ஷாப்பிங் செய்கிறோம், ஏனெனில் அவை இதயம், கண்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஊதா நிற உணவுகள் என்ன செய்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவிழ்க்கப்படாதவர்களுக்கு, அவை அந்தோசயினின்களின் வளமான மூலமாகும், இது சரியான சாயலுக்கு காரணமான சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆய்வின் படி, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கவும் சரிசெய்யவும் உதவுகின்றன, வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வகை 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. 8 வகையான ஊதா நிற உணவுகள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறிய கீழே உருட்டவும்.
வாஷிங்டன்: இஸ்ரேல் – ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்ததை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார். அதற்கு, போர் நிறுத்தத்தை விட சிறந்தது எது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ”உண்மையான முடிவு. போர் நிறுத்தம் அல்ல. முடிவு” என்று தெளிவுபடுத்தினார். ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உதவி குறித்து பேசிய ட்ரம்ப், “இப்போது, நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது” என்றார். மேலும், ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘எந்த வகையிலும்…
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன்…
சுகாதாரத்திற்கான பிரையன் ஜான்சனின் தீவிர அர்ப்பணிப்பு, வாழ்க்கை முறை தேர்வுகள் உயிரியல் வயதானதை எவ்வாறு ஆழமாக பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆரம்பகால உயர்வு, உடற்பயிற்சி, சுத்தமான ஊட்டச்சத்து, கூடுதல் மற்றும் ஆழ்ந்த ஓய்வு ஆகியவற்றில் அவரது ஒழுக்கமான வழக்கமான வேலைகள் நிலைத்தன்மை, துல்லியம் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றின் சக்தியை நிரூபிக்கின்றன. அவரது முறைகள் அனைவருக்கும் நடைமுறையில் இருக்காது என்றாலும், கோர் டேக்அவே உலகளாவியது: வேண்டுமென்றே தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் ஹெல்த்ஸ்பானை மேம்படுத்த முடியும். தூக்கத்திற்கு முன்னுரிமை அளித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல், சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் உங்கள் உடலைக் கேட்பது ஆகியவை அடையக்கூடிய படிகள். ஜான்சனின் பயணம் வயது ஒரு எண் மட்டுமல்ல என்பதை நினைவூட்டுகிறது; இது பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு நன்றாக அக்கறை காட்டுகிறோம் என்பதற்கான பிரதிபலிப்பாகும்.பிரையன் ஜான்சனின் வழக்கம் வெளிப்படுத்துகிறது ஆரோக்கியமான வயதான எதிர்காலம்47 வயதான சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர்-பயோஹேக்கர் பிரையன் ஜான்சன், வயதானதை…
கனானாஸ்கிஸ் (கனடா): பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள ஜி7 தலைவர்கள், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஜி7 உச்சிமாநாடு கனடாவின் கனானாஸ்கிஸ் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘ஜி7 தலைவர்களான நாங்கள், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சூழலில், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் நாங்கள் தொடர்ந்து தெளிவாக இருக்கிறோம். ஈரானிய நெருக்கடியின் தீர்வு, காசாவில்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடமுழுக்கு விழாவுக்கு வருகை…
சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த…