சென்னை: பிரபல உணவகத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னையில் உணவகம் தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘சீ ஷெல்’ என்ற உணவகம் கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில், சென்னையில், அண்ணநகர், வேளச்சேரி, பெருங்குடி, ஆயிரம்விளக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தை கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் குல்ஹி மூசா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், சீ ஷெல் உணவகம், வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள மாநிலம், கொச்சி வருமானவரித் துறை அதிகாரிகள், சீ ஷெல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். இதில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம்…
Author: admin
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 579 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ…
‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50 கோடி செலவில் இந்த செட் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு கென்யாவில் நடத்தப்பட இருக்கிறது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
சென்னை: சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கர்டர் விழுந்து வாலிபர் உயிரிழந்த விபத்தில் ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்களுக்கு இடையே கர்டர் அமைக்கும் பணி நடைபெற்றபோது 40 அடி நீளமுள்ள கர்டர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ரமேஷ் (40) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, நந்தம்பாக்கம் போலீஸார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் என இருதரப்பிலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில்,திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்று இருந்தது. 2 நாட்களில் அனைவரிடமும் விசாரணை நடத்தி,…
நடைபயிற்சி, எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி, ஏராளமான உடல் மற்றும் மன நன்மைகளை வழங்குகிறது. தினமும் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணத்தை நோக்கமாகக் கொண்டிருப்பது சுகாதார வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது, இதய நோயின் அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் அன்றாட வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான எளிய மற்றும் மிகச் சிறந்த வழிகளில் நடைபயிற்சி ஒன்றாகும். இது ஒலிப்பது போல் எளிதானது – அதை மாஸ்டர் செய்ய ஆடம்பரமான உபகரணங்கள் அல்லது குறிப்பிட்ட நுட்பங்கள் இல்லை. உங்களுக்கு தேவையானது ஒரு ஜோடி வசதியான காலணிகள் மற்றும் சிறிது நேரம். ஏறக்குறைய அனைத்து தரப்பு மக்களும் தங்கள் அன்றாட வழக்கத்தில் நடப்பதை இணைக்க முடியும். இது ஒரு நேரடியான மெட்ரிக், உடற்பயிற்சி சாதனங்களுடன் எளிதில் கண்காணிக்கப்படுகிறது, இது பலருக்கு அணுகக்கூடியதாக இருக்கும். ஆனால் நன்மைகளை அறுவடை செய்ய நீங்கள் நடக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நீங்கள் 30 நிமிட நடைப்பயணத்தை…
புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி இதுகுறித்து கூறும்ம்போது,, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் பணியிடங்கள் இப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் ‘சக்கரவியூகம்’ இது” என்று…
சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 19) மதியம் வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். நாளை லீட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ரோஹித்தும், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது. இந்நிலையில், இந்தத் தொடரில் முதல் போட்டி குறித்து ரிஷப் பந்த் கூறும்போது, “அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. ஆனால், 4 மற்றும் 5-வது இடத்தில் விளையாடுவது யார் என்பது உறுதியாகி உள்ளது. ஷுப்மன் கில் 4-வது இடத்திலும், நான் 5-வது இடத்திலும் விளையாட உள்ளோம். மற்றவை குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். எனக்கும்,…
‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம். ‘காயல்’ எதை பேசுற படம்? காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும் இருக்குங்கறதை சொல்ற படம் இது. தற்கொலையை எதிர்த்து இயக்கம் நடத்திட்டு இருக்கிற ஒரு பொண்ணு, அவங்களோட காதலை அம்மா புறக்கணிக்கிறாங்க. அதுக்கு காரணமா சாதி இருக்கு. பிறகு அவங்க அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அந்தப் பொண்ணு அதை ஏத்துக்க முடியாம என்ன முடிவு எடுக்கிறா, அந்த முடிவு என்ன மாதிரியான விளைவுகளை கொண்டு வருதுன்னு படம் போகும்.அனுமோள் முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்களாமே? ஆமா. சில வருஷங்களுக்கு முன்னால அவங்களை கேரளாவுல சந்திச்சப்ப, இந்தக் கதையை சொன்னேன். அப்போ, “இந்தக் கதையை நீங்க…
மதுரை / தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன. கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே தற்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளின்போது மறைக்கப்பட்டுள்ளன. இந்த கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வருவதில்லை. ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்வுக்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறு. கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆகம…