லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (20-ம் தேதி) ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 45 நாட்கள் கொண்ட இந்த சுற்றுப்பயணம் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு கடும் சவால்களை அளிக்கக்கூடும். ஏனெனில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி எதிர்கொள்ளும் முதல் டெஸ்ட் தொடராக இங்கிலாந்து பயணம் அமைந்துள்ளது. மேலும் 2025-2027-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்கு இது முதல் டெஸ்ட் தொடராகவும் உள்ளது. 25 வயதான ஷுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கி…
Author: admin
சென்னை: மனைப்பிரிவு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் உள்ள இடங்களில், அவற்றின் திட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், தங்களது குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, நில மேம்பாட்டாளர்கள் மனைப் பிரிவு திட்டங்களை அறிவித்து, விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்கள், உயரமான கட்டிடங்கள் என பொதுமக்கள் பார்வையில்படும் இடங்களில் திட்டங்கள் தொடர்பான விளம்பரப்பதாகைகளை வைக்கின்றனர். இதில், திட்டம் தொடர்பான சில தகவல்கள் மட்டுமே இடம்பெறும். இந்நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அண்மையில் ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, கட்டுமானம் மற்றும் மனைத் திட்டங்களில், அவற்றின் அமைவிடங்களில் இரண்டு அடிக்கு, நான்கு அடி என்ற அளவில், திட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய விவரப் பலகையை கட்டாயம் அமைக்க வேண்டும்.…
சன்ஸ்கிரீன் கடற்கரை அல்லது கோடை விடுமுறை நாட்களுக்கு மட்டுமல்ல, இது முன்கூட்டிய வயதான, நிறமி மற்றும் கண்ணுக்கு தெரியாத சேதம், ஆண்டு முழுவதும் உங்கள் சருமத்தின் தினசரி கவசமாகும். விழிப்புணர்வு அதிகரித்து வந்த போதிலும், பல கட்டுக்கதைகள் மக்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன. புனைகதையிலிருந்து உண்மையை பிரிப்போம்.கட்டுக்கதை 1: சன்ஸ்கிரீன் கோடையில் அல்லது வெயிலாக இருக்கும்போது மட்டுமே தேவைப்படுகிறதுஉண்மை: வானிலை அல்லது வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல், ஆண்டு முழுவதும் புற ஊதா கதிர்வீச்சு உள்ளது. மேகமூட்டமான அல்லது மழை நாட்களில் கூட 80% புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை அடைகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. யு.வி.ஏ கதிர்கள், குறிப்பாக, தோலில் ஆழமாக ஊடுருவி, வயதான, நிறமி மற்றும் கொலாஜன் முறிவை துரிதப்படுத்துகின்றன. தினசரி சன்ஸ்கிரீன் பயன்பாடு முக்கியமானது -மழை அல்லது பிரகாசம்.கட்டுக்கதை 2: சன்ஸ்கிரீன் வீட்டிற்குள் தேவையில்லைஉண்மை: யு.வி.ஏ கதிர்கள் வீட்டில், உங்கள் காரில் அல்லது அலுவலகத்தில் ஜன்னல்கள் உட்பட கண்ணாடியை…
திருப்பதி: ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து 80 பயணிகளுடன் நேற்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு வந்ததால், அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன் பின்னர், பயணிகள் வெவ்வேறு விமானங்களில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கேம்பிரிஜ்: சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல் குறித்து விரிவாக பார்ப்போம். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலும் டிஜிட்டல் பயனர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான விடையை அறிவது ஏஐ திறன் கொண்ட பாட்களிடம் தான். ‘சந்தையில் விற்பனையாகும் பைக்குகளில் ‘சிறந்த சிசி’ திறன் கொண்ட பைக் முதல் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் வரை’ என அனைத்து சந்தேகங்களுக்கும் நாடுவது ஏஐ துணையைதான். ஒரு பக்கம் மென்பொருள் நிறுவனங்கள் ஏஐ வரவு காரணமாக ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மறுபக்கம் சாமானிய மக்கள் கூட தங்களது அன்றாட வாழ்வில் ஏஐ உதவியை நாடும் நிலை உள்ளது. தனிமையில் தவிக்கும் நபர் ஒருவர் ஏஐ உடன் ‘சேட்’ செய்யும் சம்பவங்களும் கூட அரங்கேறுவது உண்டு. இந்நிலையில் தான் ஏஐ சாட்பாட்…
லீட்ஸ்: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அயலக மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றியை காட்டிலும் பெரியது என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான ஷுப்மன் கில் கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது. “இங்கிலாந்தில் கேப்டனாக அணியை வழிநடத்தும் வாய்ப்பு என்பது ஒரு வீரருக்கு அதிகம் கிடைக்காது. இரண்டு முறைதான் அந்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு தலைமுறையின் சிறந்த வீரர் என்றால்…
டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளன. கடந்த 13-ம் தேதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே 7-வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. கடந்த 7 நாட்களில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் 1,100 இடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அந்த நாட்டின் மிக…
சென்னை: காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட 7 அரசு மருத்துவர்களை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கரோனாவில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு நடைபயண போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சட்ட போராட்ட குழுவினர் அறிவித்தனர். மறைந்த மருத்துவர் நரசிம்மனின் நினைவிடமான சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கடந்த 11-ம் தேதி நடைபயணத்தை தொடங்கினர். தங்களது கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் வழிநெடுகிலும் பதாகைகளை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், 9-வது நாளான நேற்று அவர்கள் சென்னை வந்தடைந்தனர். அறிவித்தபடி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை தேனாம்பேட்டையில் போலீஸார் தடுத்து…
புதுடெல்லி: குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு சென்றிருந்தார். இதில், முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், 18-ம் தேதி அங்கிருந்து குரோஷியாவுக்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொணடது இதுதான் முதல் முறை ஆகும். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலனோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர்.…
சென்னை: சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் எந்தெந்த பிரிவிலும் கலந்து கொள்ளும் என்பதற்கான ‘டிரா’ வெளியீடு வரும் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ல் லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றிருந்தது. இம்முறை அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.64 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இலட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி…