Author: admin

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று (ஜூன் 23) முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2…

Read More

சென்னை: அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழகம் வெறும் 3.68 பில்லியன் டாலருடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா (19.6 பில்லியன் டாலர்), கர்நாடகா (6.62 பில்லியன் டாலர்), டெல்லி (6 பில்லியன் டாலர்), குஜராத் (5.71 பில்லியன் டாலர்) என்று முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளன. மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு நட்புக் கொள்கைகள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்தியதன் விளைவாக அந்நிய முதலீடுகளை கவர்ந்ததாகக் நிதி மேலாண்மை…

Read More

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய வீரர் ரிஷப் பந்த். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஆன்டி பிளவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 142 மற்றும் 199 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு பிறகு தற்போது பந்த், 134 மற்றும் 118 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ள 7-வது இந்திய வீரர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3), ராகுல் திராவிட்…

Read More

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி செய்வதோடு, வருங்காலங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் மின்வாரியத் தலைவரை எதிர்பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தல்கள் விவரம்: அனைத்து அலுவலர்களுக்கும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள், அவமதிப்பு வழக்கு போன்றவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாத…

Read More

சென்னை: தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் பலரும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் பேசியதாவது: “‘கண்ணப்பா’ மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் அது தெரிய…

Read More

சென்னை: மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைக்கு எதிராக தொடர் பிரச்சாரம் நடத்தப்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் 24-வது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் ராஜன் நாகர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஏழை, எளிய மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக விரிவான அளவில் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்படுகிறது. கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் தொழிலாளர் விரோத சட்டங்களை வன்மையாக கண்டிப்பதோடு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதோடு, முறைகேடாக வழங்கப்பட்ட வங்கிக் கடன்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை கடினமாக்க வேண்டும். அந்த வகையில் வங்கிகளை பாதுகாப்பதற்கான அனைத்திந்திய வங்கி…

Read More

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறீர்களா? இந்த 10 வினாடிகள் உட்கார்ந்து சோதனைக்கு பதில் இருக்கலாம் உங்கள் உடலை மறுவடிவமைப்பது, உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் அல்லது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக உறுதியளிக்கும் உடற்பயிற்சி நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம், ஆனால் தரையில் உட்கார்ந்து பின்னால் நின்றது போன்ற அடிப்படை ஏதாவது உங்கள் எதிர்காலத்தில் ஒரு சாளரத்தை வழங்கினால் என்ன செய்வது? அது மிகைப்படுத்தல் அல்ல. பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வின்படி, உங்கள் கைகள், முழங்கால்கள் அல்லது ஆதரவிலிருந்து எந்த உதவியும் இல்லாமல் இந்த எளிய செயலைச் செய்வதற்கான உங்கள் திறன் உங்கள் நீண்ட ஆயுள் மற்றும் இதய நோய் அல்லது புற்றுநோய் போன்ற இயற்கையான காரணங்களிலிருந்து இறப்பு அபாயத்தைப் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம்.இந்த சோதனை, பெரும்பாலும் “உட்கார்ந்து எழுச்சி” சோதனை என்று குறிப்பிடப்படுகிறது, இது ஆடம்பரமான உடற்பயிற்சி உபகரணங்கள் அல்லது மருத்துவ நோயறிதல்களை நம்பவில்லை. இது…

Read More

பூமி சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படலாம்; விஞ்ஞானிகள் அலாரத்தை ஒலிக்கிறார்கள் பிரபஞ்சத்தில் பூமியின் இடம் பாதுகாப்பானது என்று கருதி நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையில் செல்கிறோம். எங்கள் கிரகத்தை ஒரு நீல பளிங்கு என்று சித்தரிக்கிறோம், பில்லியன் கணக்கான ஆண்டுகளாக செல்ல உத்தரவாதம் அளிக்கும் ஒரு அண்ட நடனத்தில் சூரியனை அமைதியாகச் சுற்றி வருகிறோம். ஆனால் ஒரு புதிய ஆய்வு அந்த யோசனையை அமைதியாக சவால் செய்கிறது, அது அறிவியலுடன் அவ்வாறு செய்கிறது, ஊகங்கள் அல்ல. இக்காரஸ் இதழில் எழுதும் ஆராய்ச்சியாளர்கள் படி, ஒரு அரிய ஆனால் சாத்தியமான நிகழ்வு ஒரு நாள் பூமியிலிருந்து வெளியேற்றப்படலாம் சூரிய குடும்பம் முற்றிலும். குற்றவாளி? ஒரு அலைந்து திரிந்த நட்சத்திரம்.இல்லை, இது அறிவியல் புனைகதை அல்ல. அருகிலுள்ள நட்சத்திரம் நமது சூரிய மண்டலத்திற்கு சற்று நெருக்கமாக சென்றால் என்ன நடக்கும் என்பதை ஆராய விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான சுற்றுப்பாதை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தினர். அவர்கள் கண்டுபிடித்தது கவர்ச்சிகரமான மற்றும் கொஞ்சம்…

Read More

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து அப்பாஸ் அரக்சியிடம் ரஷ்ய அதிபர் புதின் கேட்டறிந்தார். அப்போது, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை. ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது” என்று புதின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலில். அந்தப் பிராந்தியத்தை சேராத அந்நிய சக்திகளின் ஈடுபாடு உலகையே பெரிய ஆபத்தை நோக்கி நகர்த்துவதாகவும்…

Read More

சென்னை: திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட விதிப்படி, திமுக கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகள் அணி தலைவராக ரெ.தங்கம், செயலாளராக டி.எம்.என்.தீபக் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர், என்று அவர் கூறியுள்ளார்.

Read More