சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றமே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதா என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் வலைதள பதிவு: தமிழகத்தில் 180 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்கும் உள்ளக புகார் குழுக்கள் இல்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தங்கள் கல்லூரியில் இந்த குழு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்கவே 113 அரசு கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன. தவிர, புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசு கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவும் ‘சமாதானமாக’ முடித்து வைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகளின்படி, 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொண்ட அனைத்து…
Author: admin
பிரபலமான எடை இழப்பு மற்றும் ஓசெம்பிக், வெகோவி, மற்றும் ம oun ன்ஜாரோ போன்ற நீரிழிவு மருந்துகள் உட்பட ஜி.எல்.பி -1 ஏற்பி அகோனிஸ்டுகள்-டிமென்ஷியா உருவாகும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று ஒரு அற்புதமான ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரிஷ் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட மற்றும் ஜமா நரம்பியலில் வெளியிடப்பட்ட இந்த பகுப்பாய்வு, 164,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து தரவுகளை உள்ளடக்கியது, மேலும் இந்த மருந்துகள் நினைவக-ராப்பிங் கோளாறுகளின் அபாயத்தை 45 சதவீதம் வரை குறைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் நரம்பியல் பாதுகாப்பிற்காக புதிய வழிகளைத் திறப்பது மட்டுமல்லாமல், ஜி.எல்.பி -1 மருந்துகளை வளர்சிதை மாற்ற மற்றும் அறிவாற்றல் சுகாதார நிர்வாகத்தில் சக்திவாய்ந்த கருவிகளாக நிலைநிறுத்துகின்றன.ஓசெம்பிக் மற்றும் ம oun ன்ஜாரோ போன்ற ஜி.எல்.பி -1 மருந்துகளை குறைந்த டிமென்ஷியா அபாயத்துடன் ஆய்வு செய்கிறதுகால்வே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 164,531 நபர்களை உள்ளடக்கிய 26 மருத்துவ பரிசோதனைகளை மதிப்பாய்வு செய்தனர் – அவர்களில் 65% ஆண்கள்,…
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிபந்தனைகளுக்கு மாறாக போலி சான்றிதழ்கள் கொடுத்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேற்று மதத்தை சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, எஸ்சி, எஸ்டி என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பிரச்சினை எழவே, சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானம் தனிநபர் ஒப்புதல் படிவத்தை அனைத்து ஊழியர்களிடமும் கேட்டு வாங்கியது. அதன்படி அனைவரும் தாங்கள் இந்துக்கள்தான் என கையொப்பமிட்டு படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி வந்ததும், அதிகாரிகளும், அறங்காவலர் குழுவும் மாறியது. இந்நிலையில், இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,…
சந்துருவின் (ராஜு) அம்மா லலிதாவும் (சரண்யா பொன்வண்ணன்), மதுவின் (ஆதியா பிரசாத்) அம்மா உமாவும் (தேவதர்ஷினி) தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்கள். அதாவது, பிள்ளைகள் காதலித்தது போல இருக்க வேண்டும்; அது அரேஞ்ச்டு திருமணமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், சந்துருவும் மதுவும் வேறு வேறு நபர்களைக் காதலிக்கிறார்கள். இந்தக் காதல்களில் ட்விஸ்ட்டுகள் நடக்கின்றன. இதன் பின்னர் ராஜுவும் மதுவும் என்ன ஆனார்கள்? அம்மாக்களின் எண்ணங்கள் நிறைவேறியதா? என்பது கதை. இந்தக் காலத்துத் தலைமுறையின் காதலையும், அதன் போக்கையும் நகைச்சுவை கலந்து திரைக்கதையாக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ராகவ் மிர்தத். காதல் என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் அடிக்கும் லூட்டிகளையும், காதலை டேக் இட் ஈசியாக கையாள்வதையும் இயக்குநர் மிகையில்லாமல் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. தலைமுறை இடைவெளி, காதல் கனவுகளைப் பற்றியும் பேசியிருப்பது நன்று. பிள்ளைகளின் மனங்களையும், அவர்களுடைய காதலையும் அறியமுடியாமல் பெற்றோர் தவிப்பதையும் படம்பதிவு செய்திருக்கிறது…
“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும் குடுக்காமலேயே மீதி இருக்கிற ஒன்னரை வருசத்தையும் ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. எல்லா கணக்கும் எங்கக்கிட்ட இருக்கு; எங்கள ஏமாத்த முடியாது” திருப்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் தான் இப்படி தங்கள் கட்சி சேர்மனுக்கு எதிராகவே ‘கட்டிங்’ பிரச்சினையை எழுப்பி நகர்மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வைத்திருக்கிறார்கள். 36 வார்டுகளைக் கொண்ட திருப்பத்தூர் நகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் சேர்மனுடன் சேர்த்து 29 பேர் உள்ளனர். அதிமுக-வுக்கு 5 கவுன்சிலர்களும் காங்கிரஸ், பாமக-வுக்கு தலா ஒரு கவுன்சிலரும் இருக்கிறார்கள். நகர்மன்றத் தலைவராக சங்கீதா வெங்கடேஷ் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே திமுக கவுன்சிலர்களால் சங்கீதாவுக்கு தலைவலிதான். எந்தப் பணியைத் தொட்டாலும் அதில் ‘தங்களுக்கானது’ தட்டாமல் வரவேண்டும் என திமுக கவுன்சிலர்கள் சிலர் கறாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதைப்…
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்துவந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து, ரூ.9,170-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.80,032-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 26 ஆயிரமாகவும் இருந்தது.
நம் வாழ்வின் வெறித்தனமான தினசரி வழக்கம் முன்னெப்போதையும் விட சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தசையைப் பெற உங்களுக்கு ஏன் விலையுயர்ந்த ஜிம் உறுப்பினர் தேவை? நீங்கள் நேரம், இடம் மற்றும் உபகரணங்கள் அல்லது மூன்றும் குறைவாக இருந்தால், வீட்டில் தசைக் கட்டிடம் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, அது சக்திவாய்ந்ததாகும். உங்கள் உடல் எடை மற்றும் குறைந்தபட்ச நிலைத்தன்மையுடன், உங்கள் வாழ்க்கை அறையின் வசதிக்குள், வீட்டில் தசைகளை வளர்க்க முடியும். முக்கிய தசைக் குழுக்களில் பணிபுரியும் எளிய பயிற்சிகளுடன் சேர்ந்து ஆராய்வோம், மேலும் அவை நம் அன்றாட வாழ்க்கையில் இணைக்கப்படலாம்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ் மாத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 6 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து ஏகே-47 மற்றும் எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்ற மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மூலவர்: அனந்தீஸ்வரர் அம்பாள்: சவுந்தரநாயகி தல வரலாறு: பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகா விஷ்ணுவின் எடை வழக்கத்தைவிட அதிகமாகத் தெரிந்தால், அதற்காக காரணத்தை கேட்டார் ஆதிசேஷன். அவர் சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார் விஷ்ணு. ஆதிசேஷன் தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி. விஷ்ணுவை வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட்டால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார். அதன்படி ஆதிசேஷன் பூலோகத்தில் அத்ரி மகரிஷி – அனுசுயா தம்பதியின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி (அனந்தன்) என பெயர் பெற்றார். தில்லை வனத்தில் தங்கி, தீர்த்தம் உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். சிதம்பரம் நடராஜரின் தரிசனமும் கிடைக்கப் பெற்றார். இதனால் ஈசன் ‘அனந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். கோயில் சிறப்பு : யோக சூத்திரத்தை எழுதிய பதஞ்சலி மகரிஷிக்கு இங்கு தனிசந்நிதி உள்ளது. ராமாவதாரத்தில் லட்சுமணராக…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மேலும், அங்கு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் ஆகியோர் கலந்து கொண்டு நல்லூர் கிராமத்தில் வீதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர். இதில் எம்.எல்.ஏ மரகதம் பேசும்போது, ‘ஸ்டாலின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாதம் மகளிருக்கு ரூ.1,000 கொடுத்துவிட்டு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதே போல் வீட்டு வரி, சொத்து வரி என அனைத்திலும் விலை உயர்வை ஏற்படுத்தி பொதுமக்களின் வயிற்றில்…
