Author: admin

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களில் பணியாற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, திருச்சியில் அன்பழகன் மாற்றப்பட்டு பாலக் ராம் நெகி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் சரத் ஸ்ரீவஸ்தவா இடமாற்றம் செய்யப்பட்டு, ஓம் பிரகாஷ் மீனா நியமிக்கப் பட்டுள்ளார். திருவனந்தபுரம் கோட்ட மேலாளராக இருந்த மனிஷ் தப் லியால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, திவ்யகாந்த் சந்திரகார் நியமிக்கப்பட்டுள்ளார். பாலக்காட்டில் அருண்குமார் சதுர்வேதி மாற்றப்பட்டு, மதுகர் ரோத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல, நாட்டின் மற்ற பகுதிகளில் 27 கோட்ட மேலாளர்கள்…

Read More

திருச்சி: கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தூத்துக்குடியில் நேற்று இரவு ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் வந்தடைவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக 10 மணிக்கே திருச்சி வந்து சேர்ந்தார் பிரதமர். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் ஓட்டலில் தங்கினார். இன்று(ஜூலை 27) காலை 11…

Read More

திருச்சி: நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ, நாசா இணைந்து நிசார் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோளை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளன. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்ககம், புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர்கள் குறித்த தகவல்களை துல்லியமாக தரக்கூடியது. இஸ்ரோ நடப்பாண்டு 12 ராக்செட்களை விண்ணில் ஏவ உள்ளது. ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா செயற்கைக்கோளை டிசம்பரில் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தில், இந்​தி​ய விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, அவரை அங்கே பாது​காப்​பாக வைத்​திருந்​து, மீண்​டும் அவரை பூமிக்கு அழைத்து…

Read More

துபாய்: ஆசிய கோப்பை – 2025க்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. குரூப் – ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குரூப் – பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 19…

Read More

சென்னை: தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு சாதாரண குடிமகனுக்கு ரூ.7.85, கோயிலுக்கு ரூ.7.85, கோசாலை பசு மடத்துக்கு ரூ.7.85, மசூதிக்கு ரூ.1.85, சர்ச்சுக்கு ரூ.1.85 என்று அதில் தெரிவித்திருந்தார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி…

Read More

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 135 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் குவித்திருந்தது. ஜோ ரூட் 150, ஆலி போப் 71. ஹாரி புரூக் 3, ஜேமி ஸ்மித் 9. கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர் பென் ஸ்டோக்ஸ் 77, லியாம் டாவ்சன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. லியாம் டாவ்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரைடன் கார்ஸ், பென்…

Read More

அரியலூர்: கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், பொன்னேரி மற்றும் பொன்னேரி முதல் கோயில் வரையிலான நெடுஞ்சாலை, விழா அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் மோடி, பொன்னேரியிலிருந்து கோயிலுக்கு ரோடு ஷோவாக சென்று பொதுமக்களை சந்திக்கும் நிலையில், ஜெயங்கொண்டம் முதல் மீன்சுருட்டி வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் நடமாடவும், பொன்னேரியில் மேய்ச்சலுக்கு விடவும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பொன்னேரியிலிருந்து கோயில் வளாகம் வரை சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கொடிகளுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன. விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பார் என்பதால், அந்தக்…

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 1, 2-ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ‘பசுமையும், பாரம்பரியமும்’ என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம்…

Read More

வார்னர் பார்க்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20-ல் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது. செயின்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க்கில் நேற்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷாய் ஹோப் 57 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். பிரண்டன் கிங் 36 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்தார். 215 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 23 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. டிம் டேவிட் 37 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 102 ரன்கள்…

Read More

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 26) முதல் ஆக. 1 வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம்…

Read More