புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, நிலைமை எவ்வளவு தீவிரமானது, சண்டை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பன உள்ளிட்ட தகவலை அவர்கள் கேட்டறிந்தனர். மேலும் சமரசம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், மூன்றாம் தரப்பின் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை என அனைத்து நாடுகளிடமும் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்தோம். ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எந்த ஒரு பிரச்சினைக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்து வருகிறோம். சண்டை நிறுத்தப்பட…
Author: admin
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தனர். ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு திட்டங்களை யும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்த போட்டியில் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை இந்திய அணி பறிகொடுத்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போதிலும் கே.எல்.ராகுல், ஷூப்மன் கில் ஜோடி அபாரமாக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தது.…
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகிறார். இன்று முதல் அவர் வழக்கமான பணிகளைத் தொடர்வார் என்றும், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியதுடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மண்டலப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது, தமிழக…
பழங்கள் பொதுவாக ஆரோக்கியமான மற்றும் நோயெதிர்ப்பு அதிகரிப்பதாகக் காணப்பட்டாலும், நீங்கள் இருமல் மற்றும் சளி கையாளும் போது அனைத்தும் நன்மை பயக்கும் அல்ல. சில பழங்கள் உண்மையில் சளி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், தொண்டை எரிச்சலைத் தூண்டுவதன் மூலமோ அல்லது அவற்றின் அதிக அமிலத்தன்மை அல்லது சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக வீக்கத்திற்கு பங்களிப்பதன் மூலமோ அறிகுறிகளை மோசமாக்கும்.பழங்கள் அத்தியாவசிய வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை வழங்கும் அதே வேளையில், நோயின் போது உங்கள் உடலின் பதிலைப் பொறுத்து அவற்றின் தாக்கம் மாறுபடும். சிட்ரஸ் அல்லது வாழைப்பழங்கள் போன்ற பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் கூட நெரிசலை மோசமாக்கலாம் அல்லது உணர்திறன் வாய்ந்த நபர்களின் மீட்பை நீடிக்கும். நோயின் போது சில பழங்கள் உடலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது சிறந்த உணவுத் தேர்வுகளைச் செய்ய உதவும்.மழைக்காலம் குளிர் மற்றும் இருமல்: இந்திய போரேஜ் இலை மற்றும் மஞ்சள் கொண்ட விரைவான பிழைத்திருத்தம்…
புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் கிடைக்கும்போது அவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு நாடு முழுவதிலும் பொது மக்களிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தன. தீவிரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தற்செயலாக அந்த மூவரும் தலையில் சுடப்பட்டே இறந்தனர். பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையிடமிருந்தும், ராணுவ உளவுப் பிரிவிடமிருந்தும் உறுதியான தகவல்கள் வந்தன. கடந்த 22-ம் தேதி அவர்களது வயர்லெஸ் கருவிகளின் இருப்பிடம் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மிகச் சரியாக எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பதை உளவுப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டறிந்தோம். அதன் பின்னர் என்கவுன்ட்டிரில் தீவிரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. இது தொடர்பான காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவின. ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள குரில் தீவுகளில் பெருமளவு கடல்நீர் உட்புகுந்ததில் கட்டிடங்கள் நீரில் மூழ்கின. ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவில் துறைமுகங்கள் சேதம் அடைந்தன. இங்கு 4 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. முன்னதாக, ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என அரசு எச்சரிக்கை…
சென்னை: வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது. ஒவ்வொரு மாவட்டம், ஊராட்சி வாரியாக அவரது ஆட்சியில் கட்டணம் நிர்ணயித்துவிட்டு, தற்போது திமுக அரசைக் குறை சொல்கிறார் பழனிசாமி. அவரது இரட்டை வேடத்தையே இது வெளிப்படுத்துகிறது. கிராமப்புற ஊராட்சிகளில் வணிகம். தொழில்புரிய பல்வேறு உரிமங்கள் ‘அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்’ என்று பழைய நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமம் புதுபிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.…
நகர்ப்புற மக்கள் வளர்ந்து, பசுமையான இடங்கள் சுருங்கும்போது, நகரங்கள் இரண்டு பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன: மோசமான காற்று மாசுபாடு மற்றும் புதிய, மலிவு உணவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல். கூரை தோட்டக்கலை இருவருக்கும் ஸ்மார்ட், சூழல் நட்பு தீர்வை வழங்குகிறது. பயன்படுத்தப்படாத மொட்டை மாடிகளை பசுமையான தோட்டங்களாக மாற்றுவதன் மூலம், நகரவாசிகள் தங்கள் சொந்த உற்பத்தியை வளர்க்கலாம், காற்றின் தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் உட்புற வெப்பநிலையைக் குறைக்கலாம். இந்த உயர்ந்த பசுமையான இடங்கள் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், உணவு பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. தனிப்பட்ட வீடுகள் முதல் சமூக முயற்சிகள் வரை, கூரை தோட்டக்கலை கான்கிரீட் காடுகளை நம் தலைக்கு மேலே செழிப்பான, நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாற்றுகிறது.கூரை தோட்டம் என்றால் என்ன?கூரை தோட்டக்கலை என்பது கட்டிடங்களின் கூரைகள் அல்லது மொட்டை மாடிகளில் தாவரங்களை வளர்ப்பதற்கான நடைமுறையாகும். இது ஒரு சில பானை மூலிகைகள் முதல் விரிவான…
புதுடெல்லி: உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் நிசார், ஒரு தசாப்தத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகளால் கூட்டாக உருவாக்கப்பட்டது, இந்தோ-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்புக்கு ஒரு பெரிய உந்துதலை வழங்கியுள்ளது, மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ப்ரைம் மந்திரி நாரேண்ட்ரா தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக புகழப்படுகிறது.நாசா மற்றும் இஸ்ரோ ஆக்சியம் -4 பணியில் வெற்றிகரமாக ஒத்துழைத்த சில வாரங்களுக்குப் பிறகு புதன்கிழமை ஏவுதல் வந்தது, இதன் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மைக்ரோ கிராவிட்டி சோதனைகளுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.உலகளாவிய சமூகத்தை கண்காணிக்க நிசார் உதவும் பூமி மாற்றங்கள்: இஸ்ரோ தலைவர் வி நாராயணன்இஸ்ரோ மற்றும் நாசாவுக்கு வாழ்த்துக்கள், விண்வெளி மந்திரி ஜிதேந்திர சிங் நிசார் மிஷனை “பேரழிவுகளை துல்லியமாக நிர்வகிப்பதில் விளையாட்டு மாற்றி” என்று அழைத்தார்.X இல் ஒரு இடுகையில், அவர்…
புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பியோடுவது முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன. இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடத்திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் சுலைமான் என்கிற ஃபைசல், ஹம்சா அப்ஹான், ஜிப்ரான் என அடையாளம்…
